• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    SNMV கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் "புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம்"

     SNMV கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் (NSS) திட்ட அமைப்பின் சிறப்பு முகாம் கோவை மாவட்டம் பீடம்பள்ளி கிராமத்தில் நடைபெற்று வருகிறது. முகாமின் ஒரு பகுதியாக "புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் " 30.03.2022 அன்று பீடம்பள்ளியில் நடைபெற்றது.



    இந்நிகழ்விற்கு ஊராட்சி மன்றத் தலைவர் கோ. குமாரவேல் அவர்கள் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் ரவிகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.


    கோவை மாவட்டப் புகையிலை கட்டுப்பாட்டு விழிப்புணர்வு மைய ஒருங்கிணைப்பாளர் K. முரளி கிருஷ்ணன் அவர்கள் பேரணியை துவக்கி வைத்து உரையாற்றினார்.



    நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் க. லெனின்பாரதி, ஜெ.ஜான் மனோகரன்,கே.ஜான்சி ஜெனிதா ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். பேரணியில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

     கோவை - சூலூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!!

    5000+ வேலைவாய்ப்புகள்! அனுமதி இலவசம்! உடனே வேலையில் சேரலாம் வாங்க!!



    கோவையில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவன காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கத்தோடு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 26ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

    இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள்  https://www.tnprivatejobs.tn.gov.in  Candidate login-இல் User id, Password உருவாக்கி கொள்ள தங்களது கைபேசிக்கு வரும் OTP-ஐ பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளவும்.

    மீண்டும் User id, Password-ஐ பயன்படுத்தி உட்சென்று தங்களுடைய கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களை முழுமையாக உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளலாம்.

     

    காலிப்பணியிடங்கள்:

    தனியார் துறை நிறுவனங்களில் இருந்து 5000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

    கல்வித்தகுதி :

    8-ஆம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ, அக்ரி, நர்சிங், பார்மஸி, பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட அனைத்து படிப்புகள் முடித்தவர்களும் கலந்துகொள்ளலாம்.

    வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம் & நாள்:

    இடம் : RVS கலை அறிவியல் கல்லூரி வளாகம், சூலூர், கோவை.

    நாள்: 26-03-2022 சனிக்கிழமை

    காலை 9 மணி முதல்

    முக்கிய குறிப்பு:

    கோவை மாவட்ட RVS கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் BIO DATA, பாஸ்போர்ட் அளவு போட்டோ, ஆதார் கார்டு, கல்விச்சான்று உள்ளிட்ட ஆவணங்களை நேர்காணலுக்கு கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

     

    Avani Lekhara was Inspired to take up the sport of shooting after reading Indian Olympic gold medallist Abhinav Bindra’s autobiography ‘A Shot At History: My Obsessive Journey to Olympic Gold’,


    20-year-old para shooter Avani Lekhara, who etched her name in the history books becoming India’s first women para-athlete to claim a gold medal at the Paralympic Games, with no less than a world record-equaling effort in Women’s 10m Air Rifle at the Tokyo Games last year, is among the 107 recipients to be awarded the Padma Shri. Lekhara was also among 12 sportspersons who were honoured with the Khel Ratna at the National Sports Awards 2021 for her exploits at the Tokyo Games.

    Inspired to take up the sport of shooting after reading Indian Olympic gold medallist Abhinav Bindra’s autobiography ‘A Shot At History: My Obsessive Journey to Olympic Gold’, teenager Lekhara has been wheelchair-bound since a road accident in 2012. Her father encouraged her to get involved in a sport, and she initially tried both shooting and archery. She found she enjoyed shooting more, and was also inspired by Indian shooter Abhinav Bindra after reading his book.

    She also won a bronze in the 50m Rifle Three Positions Standing SH 1 event at the Tokyo Games, becoming the first Indian female to win two medals in Games’ history. She has won many World Cup medals since 2017 including a Silver with a Junior World Record in R2 at the WSPS World Cup 2017, bronze at the WSPS World Cup Bangkok 2017, silver in the WSPS World Cup in Osijek, Croatia 2019 and silver in the WSPS World Cup Al-Ain 2021. She won the Tokyo Paralympics quota in February 2019 in the UAE. Since 2017, Government has supported Avani by including her in the Target Olympic Podium Scheme (TOPS) besides funding her training through the Annual Calendar for Training and Competition (ACTC). Thanks to such support, she has competed in 12 international competitions, attended National Coaching Camps with sports science support along with a sports kit. She also got financial assistance to install a computerized digital target at home, Air Rifle, ammunition, and accessories.



    In December last year, Lekhara won the “Best Female Debut" honour at the 2021 Paralympic Awards for her record-breaking gold medal at the Tokyo Games. Recalling her experience of her maiden Paralympic Games, Avani said she approach the competition, one shot at a time. “It was a dream come true for me at that time. When I came back to India, I met a lot of people. I went back to my school and kids there came to me and said they are inspired by me and also want to take up the sport. It is amazing but with success comes a lot of responsibility," she added.

    India won an unprecedented 19 medals at the Paralympic Games including five gold, eight silver and six bronze.

    Avani Lekhara Profile

    Date of Birth: 8th November 2001

    Native: Jaipur, Rajasthan

    Sports: Para Shooting

    Events: Women’s 10m Air Rifle SH1, Mixed 10m air Rifle Prone SH1, Mixed 50m Rifle Prone SH1,Women’s 50m 3 Position

    Training Base: JDA Shooting Range Jaipur and home Range

    Personal Coach: Shuma Shirur

    National Coach: Subhash Rana

    International debut: 2017 at the World Cup at Al Ain, UAE

    Acheivements

    World Rank 5 in R2 and 6 in R8

    Silver Medal in R2 at the WSPS World Cup AIA in 2021

    Silver Medal in R2 at the WSPS World Cup in Osijek, Croatia 2019

    Silver Medal with Junior World Record in R2 in the WSPS World Cup AIA in 2017

    Bronze Medal in R2 at the WSPS World Cup Bangkok 2017

     

     International Day of Forests

    International Day of Forests is celebrated on the 21st day of every March. Forests cover the dominant terrestrial ecosystem of the planet and are distributed across the globe. It is a large area that usually has hundreds and thousands of trees, herbs, shrubs, other living organisms, and more. The term forest usually defines the presence of trees in ample number, and the Earth has different types of forests and a wide variety of trees present in it. Trees are playing a significant role in maintaining the environment and living beings surviving on it. They are solely responsible for producing the vast majority of air or oxygen without which life would be impossible. For various reasons, forests are being depleted, destroyed and several million hectares of forests are cut down. With the increase in deforestation activities, the ecological system has been degraded completely.  

    International Day of Forests or Forest Day is an awareness Day celebrated in such a way to let people understand the importance of forests and the essential role of trees in our lives. The international Day will also address issues such as deforestation.

     

     

     

     “A nation that destroys its soils destroys itself. Forests are the lungs of our land, purifying the air and giving fresh strength to our people.” 

    – Franklin D. Roosevelt

     

    History of International Day of Forests

     

    The International Day of Forests (IDF) has been celebrated since the year 2013. The United Nations General Assembly proclaimed 21st March as IDF on November 28, 2012. Since then, the Day has been observed with various events and activities to raise awareness about the importance and benefits of the forests, its types, trees outside the forests to the people of current and future generations. Earlier to this IDF, World Forestry Day had been observed which has originated in 1971 at the 23rd General Assembly of the European Confederation of Agriculture. Food and Agriculture Organization (FAO) had established it and started celebrating it from the year 1972 till 2012. IFD is created to raise awareness about the forests and issues of deforestation as a whole. Each year, IDF or Forest Day is celebrated with a theme which is chosen by the Collaborative Partnership on Forests.

     

    On each Forest Day, countries from all over the world are encouraged to undertake useful efforts to organize any local, national, or international activities or events involving forests and trees. Also, the United Nations works together with the governments, community organizations, and the general public as a way to promote both local and global activities for the IDF. Activities include tree planting campaigns, photo exhibits that portray the importance of forests and trees, and sharing infographics, videos, news messages via social and other media. As human society and forests are influencing each other in both positive and negative ways, it is vital to promote awareness about the role of forests as with humankind. Forests are providing ecosystem services to humans and are serving as tourist attractions.

    However, human activities like harvesting forest resources, deforestation, and more have negatively affected the forest ecosystems and which in turn are affecting human life indirectly through natural disasters and environmental changes.

    The forests account for about 75 percent of the gross primary productivity of the Earth’s  biosphere. 

    It contains about 80 percent of the Earth’s plant biomass. According to the survey by FAO in 2006, forests covered four billion hectares, i.e., 15 million square miles or approximately 30 percent of the world’s land area in total. It contains more than 60,000 tree species and in which many of which are yet unidentified species. Forests are actively contributing to the balance of oxygen, carbon dioxide, and humidity in the air and they also protect the watersheds, which supply fresh water to the rivers.

     

    Forests are the primary source of food, fiber, water, and medicines for about 1.6 billion of the world’s poorest people approximately. It also included the indigenous peoples with unique cultures. More than 13 million hectares, i.e., 32 million acres of forests are lost every year which is an area roughly the size of England. Forests are providing shelter for 80 percent of the terrestrial species including animals, plants, and insects. It is essential to know that the forests are playing a critical role in climate change including global warming. According to the UN, deforestation results in 12 to18 percent of the world’s carbon emissions which is almost equal to all the CO2 from the global transport sector. Equally crucial, healthy forests are found to be one of the world’s primary ‘carbon sinks.’

     

    Themes of Forest Day

     

    2014 – My Forest | Our Future

    2015 – Forests | Climate | Change

    2016 – Forests and Water

    2017 – Forests and Energy

    2018 – Forests and Sustainable Cities

    2019 – Forests and Education

    2020 – Forests and Biodiversity

    2021 – Forests Restoration

    2022 – Forests and Sustainable Production and Consumption

     

    Other Celebrations on March 21

     

    March 21 is also celebrated as

    World Down Syndrome Day

    National French Bread Day

    National Common Courtesy Day

    National Single Parents Day

    World Poetry Day

    National Fragrance Day

     

    How to Celebrate International Day of Forests

     

    Celebrating the International Day of Forests is quite simple. Get to know more about the forests, their role in ecological balance, and different types of forest ecosystems. On this awareness Day, you can start planting a tree and encourage people around you to do so. Spread information regarding the positive effects the environment gains with proper maintenance of the forests. Make an initiative to save the planet from greenhouse emissions, pollution, climate changes, and more by planting as many trees as you can. You can start campaigns joining with any organization to work towards saving the Planet actively. You can share your information about the IDF on social media using the hashtag #InternationalDayOfForests or #ForestDay.

     


    School of Allied Health Sciences,VIMS Hospital Campus,Vinayaka Mission’s Research Foundation (DU) established and inaugurated the Radiotherapy & Nuclear Medicine Technology simulation laboratory with the aim to give hands on pre clinical training to its students.


    Radiotherapy and Nuclear Medicine students will be able to better understand the concepts and apply it during their clinical practice because of exposure in the well equipped lab.

    The lab was initiated and inaugurated by Prof.Dr.B.Sendilkumar,Dean-AHS Mrs.V.Kalaivani,Incharge-Radiotherapy & Nuclear Medicine, Ms.B.Nikitha,Asst.Professor,Ms. Sherin Percy,Asst.Professor, Mr.R.Inbasagar,Asst.Professor & S.Antony Ruban,Asso.Professor and other faculties and students were present for the event.
    வாகை அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணாக்கர்களுக்கு *மாலை நேர சிறப்பு வகுப்பில் பயிலும் போது சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சியை மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவர் உயிர் திரு.K.B சசிக்குமார் மற்றும் பதுவம்பள்ளி ஊராட்சி தலைவர் திரு.சப்தகிரி சரவணன் ஆகியோர் இன்று (17-03-2022) தொடங்கிவைத்தனர்.*
    இந்நிகழ்ச்சியில் *மோப்பிரிபாளையம் பேரூராட்சி துணைத் தலைவர் திரு.க பாலசுப்பிரமணியம்* , மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் திருமதி.மைதிலி தங்கவேல், திரு.ஜெயராஜ், திருமதி. மோகனப்பிரியா சசி, திரு.கணேசமூர்த்தி, திரு.கருப்பன், திரு.பூபதி மற்றும் தீபா Tex திரு.மூர்த்தி, திருமதி.ருக்மணி, திரு.இளங்கோவன் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

    அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது..!



    1. நீண்ட நேரம் ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில பாம்புகள் மிக உயர்ந்த உயரத்தை எட்டும்.
    2. மாலை வேளைகளில் வீட்டு முன், பின் கதவுகளை திறந்து வைப்பதை தவிர்க்கவும். இந்த ஊர்வன முற்றிலும் அமைதியாகவே நடமாடுவதால் அதன் ஓசை நமக்கு கேட்காமலே வீட்டிற்குள் நுழையலாம்.
    3 குளிர்ச்சியான நிழல் கொண்டிருக்கும் மரத்தின் கீழ் உட்கார்ந்திருப்பதற்கு முன்னர், கிளைகள் மீது பாம்புகள் உள்ளனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
    4.படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு கட்டிலை சுற்றி பரிசோதித்துக்கொள்ளுங்கள். போர்வைகளுக்குள் பாம்புகள் பதுங்கியிருக்க வாய்ப்பு அதிகம்.
    5. வீட்டுக்கு வெளியே மாலை நேரங்களில் பாய்கள் மற்றும் கட்டில்களைப் போட்டு தூங்கும் பழங்காலத்து பழக்கத்தை தவிர்க்கவும். மாலையானதுமே கொடிய விஷம் கொண்ட பாம்புகள் வேட்டையாட வெளியேறுகின்றன.
    6. பாம்புகள் மட்டுமல்ல பூரான், தேள், நட்டுவக்காலி போன்ற விஷ ஜந்துக்களும் இரவிலேயே நடமாடும்.

    7. உங்கள் வீட்டை சுற்றியுள்ள புதர்களை அகற்றிச் சுத்தப்படுத்துங்கள். கொடிய பாம்புகள் விரும்பி உண்ணக்கூடிய எலி போன்றவை புதர்களில் பதுங்கிக் கிடக்கின்றன.
    8. பாம்பு விரட்டும் தூள் வாங்கி அதை உங்கள் வீட்டை சுற்றியுள்ள முற்றத்தில் தூவிவிடுங்கள். அது உங்கள் வீட்டிற்குள் பாம்புகள் நுழைவதனை 90% குறைத்துவிடும்.
    உங்கள் வீடுகளில் நுழைந்த பாம்புகளை விரட்ட முயற்சிக்கும் போது மிகவும் கவனமாக இருங்கள். ஏனெனில் அதிக வெப்பத்தின் காரணமாக பதுங்க இடம் தேடும் பாம்புகள் அதிக கோபம் கொண்டிருக்கும். நம்மைத் தாக்க முற்படும்.
    நீங்கள் இதனை பகிர்வதன் மூலம் அதிகமானனவர்களை இந்த ஆபத்தில் இருந்து காத்துக்கொள்ள உதவும். கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு அதிகம் பலனளிக்கக்கூடும்.

    பன்னாட்டு அரிமா சங்கம் 324-C கீழ் வரும் கோயமுத்தூர் ராம்நகர், கோயமுத்தூர் இமயம், குறிஞ்சி, ஸ்மார்ட் சிட்டி என 16 அரிமா சங்கங்கள் உள்ளடக்கிய பவளம் மண்டல மாநாடு கோவை சின்னியம்பாளையம் பகுதியில் கோகுலம் பார்க் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

    செல்வி 2022 எனும் தலைப்பில் நடைபெற்ற இதில், மண்டல தலைவர் அரிமா நாராயணசாமி தலைமை தாங்கினார். கோயமுத்தூர் சிகரம் அரிமா சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன் மண்டல கூட்டத்திற்கு வந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.


    மண்டல மாநாட்டை மாவட்ட ஆளுநர் நடராஜன் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கவுன்சில் தலைவர் கருணாநிதி கலந்து கொண்டார். தொடர்ந்து விழாவில் கடந்த ஆண்டுகளில் சமுதாய சேவை பணிகள், பசிப்பிணி போக்கும் திட்டத்தில் சிறப்பாகச் செயல் பட்ட அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    முன்னதாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவ உதவியும், அரசூர் ஊராட்சி தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு கல்வி உதவி தொகையும், சமூக நல மேம்பாட்டு நிதியாக பேரூர் அன்பு இல்லத்திற்கு நிதி உதவியும் வழங்கப்பட்டது. சேவை திட்டத்தை ஒருங்கிணைப்பாளர் நித்யானந்தம் துவக்கி வைத்தார்.

    இதில் ஜி.எல்.டி.ஒருங்கிணைப்பாளர் மதனகோபால், முதல் நிலை ஆளுநர் ராம்குமார், இரண்டாம் நிலை ஆளுநர் ஜெயசேகரன், ஐ.எம்.ஏ.மாநில தலைவர் டாக்டர் பழனிசாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் அரிமா செந்தில் குமார் மற்றும் முன்னாள் ஆளுநர்கள் சாரதாமணி பழனிச்சாமி, காளி சாமி, ஆறுமுகம் மணி, சண்முகம் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ரவிச்சந்திரன், ஜோசப் உட்பட பல்வேறு அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையின் சார்பாக ‘NETSE-22’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு நடைபெற்றது.



    கருத்தரங்கில் கல்லூரியின் முதல்வர் அகிலா லந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறமைகளை பற்றி கூறினார். கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையின் தலைவர் கதிரவேலு இந்த கருத்தரங்கின் முக்கியத்துவம் மற்றும் பலன்களைப் பற்றி பேசினார்.இதில் கேலிபர் இன்டர் கனெக்ட் சொலுஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் மோகனசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அவர் உரையாற்றும்போது, மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையில் சார்ந்த நிறுவனங்களுக்கு வேலைக்கு வரும் மாணவர்களிடம் எதிர்பார்க்கும் திறமைகள் மற்றும் அங்குள்ள நவீன தொழில்நுட்பங்கள், இத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றி எடுத்துரைத்தார்.

    இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு பொறியியல் கல்லூரிகளிலிருந்து 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகளிலும் கலந்து கொண்டனர்.

    இடம் விற்பனைக்கு..!



    மதுரை மாநகர மைய பகுதியில், வணிக வளாக இடம் , பழைய திண்டுக்கல் சாலையில், நேதாஜி சிலை அருகில், ஆர்யபவன், போத்தீஸ் அருகே

    அகலம்= 50 அடி

    நீளம்=230 அடி

    ஒரு சதுர அடி விலை = 50,000 

    விலை குறைய வாய்ப்பு உள்ளது, 

    மெயின் ரோடு

    வடக்கு பார்த்த இடம்

    ஜவுளி கடை, நகை கடைக்கு உகந்த இடம்.

    தொடர்புக்கு

    97517 14569

    கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் உலக மகளிர் கொண்டாட்டங்கள் கல்லூரி வளாகத்தில் களைகட்டின.



    உலக மகளிர் தினம் இன்று நாடு முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், மகளிர் மேம்பாட்டு மையம் மற்றும் தமிழ் மன்றம் சார்பில், உலக மகளிர் தினவிழா, கல்லூரி வளாகத்தில் உள்ள எஸ்.என்.ஆர். சன்ஸ் கலையரங்கில் நடைபெற்றது. 

    விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். மகளிர் மேம்பாட்டு மைய மாணவியர் தலைவி ஸ்ரேயா வரவேற்றார். மகளிர் மேம்பாட்டு மைய செயலர் முனைவர் ஜி.கவிதா ஆண்டறிக்கை வாசித்தார். அதைத்தொடர்ந்து நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்த விளங்கும் மாணவிகளுக்கு முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கினார். 

    அதைத்தொடர்ந்து சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்குத் தேவை அன்பா? அதிகாரமா? என்ற தலைப்பில், மகளிர் தின சிறப்பு பட்டிமன்றம் நடுவர் கோவை சத்யா தலைமையில் நடைபெற்றது. இதில் அன்பே என்ற தலைப்பிலும், அதிகாரமே என்ற தலைப்பிலும் தலா 3 மாணவிகள் உரையாற்றினர். பட்டிமன்றத்தை தொடர்ந்து ஆங்கிலம் முதலாமாண்டு மாணவி பவதாரணி கராத்தே பயிற்சியை செய்து காட்டினார். 


    முன்னதாக புற்றுநோயில் இருந்து மீண்டவர்களுக்கு உதவும் வகையில், சிகை தானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் என 185 பேர் கலந்து கொண்டு சிகை தானம் செய்தனர். புற்றுநோயில் இருந்து மீண்டவர்களுக்கு செயற்கை தலைமுடி தயாரிப்பதற்காக, கிரீன் டிரெண்ட்ஸ் நிறுவனத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் மற்றும் மகளிர் மேம்பாட்டு மையத் தலைவர் முனைவர் எஸ்.தீனா, செயலர் ஜி.கவிதா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    இன்ஜினியரிங் படித்தால் வாய்ப்புகள் ஏராளம்!

    ஆன்லைன் வழி கல்வி

    ஆன்லைன் வழியாகவே தொழில் துறையினர் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி மாணவர்களை தேர்வு செய்தது கூடுதல் சிறப்பு. இவ்வாறு எந்த ஒரு சவாலான தருணத்தையும், சாதகமாக மாற்றும் திறன் இன்ஜினியரிங் கல்விக்கு உள்ளது. வழக்கம்போல் கல்லூரி செயல்படும் தற்போதும், மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக சுயமாக கற்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்வது நல்லது. ஆன்லைன் வழிக் கல்வியையும் அனைத்து காலகட்டத்திலும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    வேகமான வளர்ச்சி

    ஐ.ஓ.டி., கிளவுட் டெக்னாலஜிஸ், ஆர்ட்டிபிசியல் இண்டெலிஜென்ஸ், மிசின் லேர்னிங், ஏ.ஆர்., வி.ஆர்., உட்பட பல நவீன தொழில்நுட்பங்களில் சிறந்த விளங்கும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்கள் புராஜெக்ட் செய்ய வேண்டும்.  ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் ஊதியத்தில் வேலைக்கு சேரும் இன்ஜினியரிங் மாணவர்கள் இரண்டே ஆண்டுகளில் 16 லட்சம் ரூபாய் ஊதியம் பெறுகின்றனர். இன்ஜினியரிங் தவிர மற்ற துறைகளில் இத்தகைய வளர்ச்சி வெகுக் குறைவாகவே அமைந்துள்ளது. 


    மாணவர்கள் திறன் வளர்ப்பிற்கு ஏற்ப, அவர்கள் விரும்பும் டொமைனில் உரிய திறன்களை பெற தேவையான வசதிகளை கல்லூரி நிர்வாகம் செய்துதருவதோடு, மாணவர்களுக்கு ஊக்கமும் அளிக்க வேண்டும். மாணவர்களும் அவற்றை முறையாக பயன்படுத்திக்கொண்டு திறனை வளர்த்திக்கொள்ள வேண்டும். இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அவர்கள் சார்ந்த துறை மட்டுமின்றி வங்கி, காப்பீடு, சுற்றுலா, ஹோட்டல் என அனைத்து துறைகளிலும் வாய்ப்புகள் பரந்து விரிந்துள்ளன.



    கல்லூரியை தேர்வு செய்தல்


    தொழில்நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்டர் ஆப் எக்ஸெலன்ஸ், சிறப்பான கல்வி கற்கும் சூழல், உரிய நுழைவுத்தேர்வு பயிற்சி மற்றும் ஆங்கில மொழிப்புலமை பயிற்சி ஆகியவற்றை மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் முறையாக வழங்க வேண்டும். 


    உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் உள்ள உயர்கல்வி வாய்ப்புகள் குறித்தை மாணவர்களுக்கு முதலாம் ஆண்டிலேயே வழங்க வேண்டும். தொழில் முனைவோர் பயிற்சி வழங்கப்படுவதோடு, தேசிய அளவிலான ஏராளமான போட்டித் தேர்வுகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட வேண்டும். இத்தகைய வசதிகளையும், வாய்ப்புகளையும் வழங்கும் கல்வி நிறுவனங்களை மாணவர்கள் தேர்வு செய்வது நல்லது!

    இன்ஜினியரிங் படித்தால் வாய்ப்புகள் ஏராளம்!

    சி.பி.எஸ்.இ., 10, பிளஸ் 2 தேர்வு அட்டவணை வெளியீடு

    சி.பி.எஸ்.இ., 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

    கொரோனா பரவல் காரணமாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளில், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் சில மாற்றங்களை கொண்டு வந்தது. 


    இதன்படி, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வுக்குப் பதில், இரண்டு பருவ தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களுக்கான முதல் பருவ தேர்வுகள், கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடந்தன.


    இந்நிலையில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு களுக்கான இரண்டாம் பருவ தேர்வுகள், வரும் ஏப்ரல் 26ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


    இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது. எனவே, அவர்களின் நிலையை கருத்தில் வைத்து, இரண்டாம் பருவ தேர்வுகளுக்கான அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு தேர்வுகளுக்கு இடையில், கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது, மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    800 மாணவர்களை மீட்டு வந்த 24 வயது பெண் பைலட்: குவிகிறது பாராட்டு

    போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கி தவித்த 800 மாணவர்களை 'ஆபரேஷன் கங்கா' திட்டத்தின் கீழ் 6 விமானங்களை இயக்கி மீட்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார் 24 வயதே ஆன பெண் பைலட் மகாஸ்வேதா சக்ரவர்த்தி. அவரது பணியை சமூக ஊடகங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


    உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் அங்கு மருத்துவம் படிக்கச் சென்றவர்கள், பணியாளர்கள் என ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களை போலந்து, ஹங்கேரி ஆகிய உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு வரவழைத்து இந்தியா மீட்கிறது. இதற்காக பிப்ரவரி 24 அன்று ஆபரேஷன் கங்கா என்ற திட்டம் தொடங்கப்பட்டு 3வது வாரமாக தொடர்கிறது. இதுவரை சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதில் தமிழக மாணவர்களும் அடக்கம்.

    ஆபரேஷன் கங்கா திட்டத்தில் கோல்கட்டாவைச் சேர்ந்த மகாஸ்வேதா சக்ரவர்த்தி என்ற 24 வயதாகும் பெண் பைலட் முக்கியப் பங்காற்றியுள்ளது தற்போது கவனத்திற்கு வந்துள்ளது. இவர் தனியார் நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வருகிறார். பிப்ரவரி 27 முதல் மார்ச் 7 வரை உக்ரைன் எல்லை நாடுகளுக்கு 6 விமானங்களை இயக்கி சுமார் 800 மாணவர்களை மீட்க உதவியுள்ளார். இது தனது வாழ்நாள் அனுபவம் என பேட்டி தந்துள்ளார். ஒரு நாளைக்கு 13 - 14 மணிநேரம் ஏர்பஸ் ஏ320 விமானத்தில் பறக்க வேண்டியிருந்ததாகவும் பயத்துடன் வீட்டிற்கு எப்போது செல்வோம் என்ற விரக்தியில் இருந்த மாணவர்களை பார்த்த போது அது தனக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை என கூறியுள்ளார்.


    latest tamil news




    உத்தர பிரதேசத்தின் அமேதியில் உள்ள விமானிகளுக்கான பயிற்சி நிறுவனமான இந்திரா காந்தி ராஷ்டிரிய உரான் அகாடமியில் மகாஸ்வேதா பட்டம் பெற்றவர். பெருந்தொற்று காலத்தில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்கும் திட்டமான வந்தே பாரத் திட்டத்திலும் இவரது பங்களிப்பு இருந்தது. 2ம் அலையின் போது ஆக்சிஜன் செறிவூட்டிகளை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வந்துள்ளார். தடுப்பூசிகளை புனேவிலிருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு விமானம் மூலம் கொண்டு சென்றுள்ளார்.

    Mega Job Fair for Teachers conducted by Find Teacher Post and TNCAPS at
    Bharath College of Science and Management, Trichy Main Road, Thanjavur.
    Date : 13.03.2022 Time : 9.00 am to 4.00pm



    All subject teachers can participate in this Mega Job Mela.

    100+ Schools are recruiting directly.

    Further Details Contact : 7010936431, 95975 34613, 83443 32218, 99761 60721,

    கோவையில் மாபெரும் உயர்கல்வி கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்

    பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்று தேர்வு செய்வதுதான் வாழ்க்கையின் திருப்பு முனையாகும்.
    அவர்களுக்கு உதவும் விதமாகதமிழ்நாடு கல்வியாளர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் ஜி.வி. நிறுவனம் ஒருங்கிணைத்து  நடத்தும்  உயர்கல்வி கண்காட்சி - 2022  கோவையில் நடைபெற உள்ளது..




    இந்த கல்வி கண்காட்சியில் மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம், கலை மற்றும் அறிவியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 100-க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு படிப்பிலும் இருக்கக்கூடிய பாடத்திட்டங்கள், அதற்குரிய தனியார் மற்றும் அரசு வேலை வாய்ப்புகள் பற்றிய அனைத்து விபரங்களையும் மாணவர்களுக்கு விளக்கும் வகையில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

    கண்காட்சியில் பங்கேற்கும் கல்வி நிறுவனங்கள், அவர்களது சிறப்பம்சங்கள், பயிற்றுவிக்கப்படும் படிப்புகள், அதற்குரிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களையும் அளிக்கின்றன. எனவே, மாணவர்கள் தங்களது உயர் கல்வி குறித்த அனைத்து விவரங்களையும் இந்த கண்காட்சியில் பெறுவதோடு, மாணவர் சேர்க்கை நடைமுறைகள், கட்டண விவரங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை விபரங்கள் போன்றவற்றையும் கண்காட்சி அரங்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.


    புதிய படிப்புகள்

    காலத்திற்கேற்ப ஒவ்வொரு துறையிலும் அறிமுகமாகி வரும்புதிய படிப்புகள், அதற்கான வேலை வாய்ப்புகள் பற்றி இந்த கண்காட்சியின் மூலம் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் சென்று படிக்கக்கூடிய படிப்புகள் பற்றியும், வெளிநாட்டில் படிப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகளையும் அறிந்து கொள்ளலாம்.

    கண்காட்சியானது காலை 10 மணி முதல் மாலை 7.00 மணி வரையில் நடைபெறும் கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

    உயர்கல்வி கண்காட்சி நிகழ்ச்சிக்கு மீடியா ஒருங்கிணைப்பு: தி கோவை டைம்ஸ் இதழ்

    இந்த உயர்கல்வி கண்காட்சிக்கு கல்வி நிறுவனங்கள் பங்கேற்க 90033 81888 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


    உயர்கல்வி பெற விரும்பும் இந்திய மாணவர்களுக்கு இன்லேக்ஸ் சிவ்தாசனி ஸ்காலர்ஷிப் திட்டத்தில் உதவித்தொகை


    இன்லேக்ஸ் சிவ்தாசனி உதவித்தொகை

    அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பெற விரும்பும் இந்திய மாணவர்களுக்கு இன்லேக்ஸ் சிவ்தாசனி ஸ்காலர்ஷிப் திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    அறிமுகம்: 1976ம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த உதவித்தொகை திட்டத்தில் சுமார் 76 லட்சம் ரூபாய் வரையில் தகுதியும், திறமையும் உள்ள இந்திய மாணவர்கள் பெறலாம்.

     

    கல்வி நிறுவனங்கள்: இம்பெரியல் காலேஜ் லண்டன், ராயல் காலேஜ் ஆப் ஆர்ட் - லண்டன், யுனிவர்சிட்டி ஆப் கேம்ப்ரிட்ஜ் மற்றும் சயின்சஸ் போ - பாரிஸ் ஆகிய புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

     

    படிப்பு நிலைகள்: முழுநேர முதுநிலை பட்டப்படிப்பு, எம்.பில்., மற்றும் பிஎச்.டி.

     

    துறைகள்: 

    பிசினஸ் மற்றும் பினான்ஸ்

    கம்ப்யூட்டர் சயின்ஸ்

    இன்ஜினியரிங்

    பேஷன் டிசிஅன்

    பிலிம் அண்டு பிலிம் அனிமேஷன்.

    ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் டூரிசம்

    இந்தியன் ஸ்டடீஸ்

    மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ்

    மெடிசின், டென்டிஸ்ட்ரி மற்றும் அவை சார்ந்த தெரபி படிப்புகள்

    மியூசிக் 

    பப்ளிக் ஹெல்த்,

     

    உதவித்தொகை: கல்விக் கட்டணம், தங்குமிட செலவு, போக்குவரத்து செலவு, மருத்துவ காப்பீடு ஆகியவை இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. 

     

    தகுதிகள்: இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். குறைந்தது கடந்த 6 மாத காலமாக  இந்தியாவில் தங்கியிருந்திருக்க வேண்டும்.  ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட இந்திய கல்வி நிறுவனத்தில் முதல் வகுப்பில் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். 

     

    வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

     

    விண்ண்ப்பிக்கும் முறை: உரிய ஆவணங்களுடன் முற்றிலும் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 

     

    தேர்வு செய்யப்படும் முறை: முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்த நபர்களுக்கு முதல்கட்ட நேர்முகத்தேர்வு நடத்தப்படும். அதில் தேர்வு செய்யப்படுபவர்களில் இருந்து இறுதிகட்ட நேர்முகத்தேர்வு வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

     

    விண்ணபிக்க கடைசி நாள்: மார்ச் 30

     

    விபரங்களுக்கு: www.inlaksfoundation.org

     


     

    A call-to-action text Contact us