SNMV கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் "புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம்"
SNMV கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் (NSS) திட்ட அமைப்பின் சிறப்பு முகாம் கோவை மாவட்டம் பீடம்பள்ளி கிராமத்தில் நடைபெற்று வருகிறது. முகாமின் ஒரு பகுதியாக "புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் " 30.03.2022 அன்று பீடம்பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு ஊராட்சி மன்றத் தலைவர் கோ. குமாரவேல் அவர்கள் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் ரவிகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.
கோவை மாவட்டப் புகையிலை கட்டுப்பாட்டு விழிப்புணர்வு மைய ஒருங்கிணைப்பாளர் K. முரளி கிருஷ்ணன் அவர்கள் பேரணியை துவக்கி வைத்து உரையாற்றினார்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் க. லெனின்பாரதி, ஜெ.ஜான் மனோகரன்,கே.ஜான்சி ஜெனிதா ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். பேரணியில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.