• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

     நலம் தரும் யோக முத்திரைகள்



     

    நலம் தரும் யோக முத்திரைகள்

                                -வி.விஸ்வபாரதி

    உடல்நிலையில் பிரச்சனை உருவாவதைத் தடுக்கவும், பிரச்சனை வந்தால் குணமடையவும் யோக முத்திரை பயிற்சிகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் பலன் பெற முடியும்.   

    உடலின் இந்த ஐந்து நிலைகளும் சமச்சீராக இருந்தால் ஒருவர் ஆரோக்கியமானவராக இருப்பார். அவற்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் உடலில் நோய்த்தாக்கம் உண்டாகும். அப்படி உடல்நிலையில் பிரச்சனை உருவாவதைத் தடுக்கவும், பிரச்சனை வந்தால் குணமடையவும் யோகப் பயிற்சிகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முடியும் என்று பரிந்துரைக்கின்றன சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவங்கள்.

    குறிப்பாக, முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள் யோகக் கலை நிபுணர்கள்.


    முத்திரை பயிற்சி செய்யும் முன்...

           முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை என்கின்றன யோக சாஸ்திரம்.

    கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல் நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.

     * பத்மாசனத்தில் அமர்ந்து யோக முத்திரைகளை செய்வது நல்லது.

    * நேரம் கிடைக்காதவர்கள் டி.வி பார்க்கும்போது, நிற்கும்போது, பயணம் செய்யும்போதுகூட செய்யலாம்.

    * முத்திரைகளை விரலோடு விரல் அழுத்தி செய்ய வேண்டும் என்பதில்லை. மெதுவாகத் தொட்டாலே போதும்.

    * எல்லா முத்திரையும் நெருப்பைக் குறிக்கும். அதனால், கட்டை விரலை இணைத்துத்தான் செய்ய வேண்டும்.

    * ஆரம்பத்தில் 10-15 நிமிடம் செய்யத் தொடங்கி, போகப்போக நேரத்தை கூட்டிக்கொண்டே போகலாம். 45 நிமிடங்கள் வரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    * வலது பக்க உறுப்புகளுக்கு இடது கையால் செய்வதும், இடப்பக்க உறுப்புகளுக்கு வலது கையால் செய்வதும் பலனைக் கொடுக்கும்.                                                                                 

    -
    ஞாபக மறதியைப் போக்கி நினைவுத்திறனை அதிகரிக்கும் ''ஹாகினி முத்திரை''


    செய்முறை:-
    இரண்டு கைகளின் நுனிகளையும் ஒன்றுடன் ஒன்று பொருந்துமாறு வைத்துக் கொத்துக் கொண்டால் அது தான் ''ஹாகினி முத்திரை''.
    பலன்கள்:-
    நமது நினைவுகள் சேமிக்கப்பட்டுள்ள வலது அரைக் கோலத்தைத் திறக்க இந்த முத்திரை உதவுகிறது. அத்துடன், மூளையின் வலது மற்றும் இடது பாகங்களை ஒன்றிணைக்கிறது.
    மூச்சு விடுதலை ஆழமாக்கி, நுரையீரலைப் பலப்படுத்துகிறது. ஆழமான மூச்சினால், மூளையும் பயன் அடைகிறது.
    கவனம் திசை திரும்பாமல் ஒருமுகப்படுத்துதலை அதிகரிக்கிறது.
    விரல் நுனிகளில் சக்திப் புள்ளிகள் உள்ளன. அவை இணையும்போது உடலின் சக்தி அதிகரிக்கிறது.
    ஹாகினி முத்திரை வைத்த பின் ஏற்கனவே படித்த நல்ல கருத்துகள் நினைவுக்கு வரும்.
    இந்த ஹாகினி முத்திரையை மாணவர்கள் தேர்வு நேரத்தில் வைத்துக் கொண்டால் விரல் நுனிகளின் மூலம் நினைவாற்றல் அதிகரித்து படித்தவை நினைவுக்கு வரும்.
    சிறுகுறிப்பு:-

    எழுதும்போதோ, படிக்கும்போதோ, சிந்திக்கும்போதோ, மூளைக்கு வேலை கொடுக்கும்போதோ கால்களை ஒன்றின் மீது ஒன்று குறுக்கே வைத்துக் கொள்ளக் கூடாது. மேற்குத் திசை நோக்கி உட்கார்ந்து இந்த ஹாகினி முத்திரையைச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.



    A call-to-action text Contact us