காலி மனை வாங்கும் போது வாஸ்து விதிகளை பின்பற்றி வாங்கினால் அற்புத பலன்கள் கிட்டும்.
மனைவி
அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.
மனைவி அமைவது மட்டுமல்ல,
மனைவியுடன்
சேர்ந்து வாழ்கின்ற வீட்டை நல்ல அமைப்பாக அமைப்பது கூட இறைவன் கொடுத்த வரம்தான்
என்பேன்.
அந்தவகையில்
திருமண நிகழ்வுக்காக வரன் தேடும்போது எப்படி பத்து பொருத்தங்களில் அதிகபட்சம்
ஐந்திற்கு மேற்கொண்டு இருக்கும் போது திருமணம் செய்ய முடிவு செய்கின்றோமோ அதுபோல, காலிமனை வாங்கும் போது கவனமாக வாஸ்து விதிகளை
பின்பற்றி வாங்கினால் நல்ல அற்புதமான பலன்களை பெறமுடியும்.
காலிமனையை
வாங்கும் போது,
வாங்க கூடிய
இடம் என்பது தெற்கே உயர்ந்து வடக்கே தாழ்ந்து இருக்கவேண்டும். இதைப் போலவே மேற்கு உயர்ந்து, கிழக்கு தாழ்வான அமைப்பில் இருக்க வேண்டும்.
இந்த அடிப்படையில் நைருதி உயர்ந்து ஈசான்யம் என்று சொல்ல கூடிய வடகிழக்கு தாழ்ந்த
அமைப்பாக இருப்பது தனிச்சிறப்பு கொண்ட மனையாக அமையும்.
மாறாக, கிழக்கு உயர்ந்து மேற்கு சரிவாக இருந்தால், குடும்பத்தில் உள்ள முதல் ஆண் மக்களின்
வாழ்வில் பலவீனப்படுத்துவதுடன் பொருளாதாரச் சீரழிவைத் தரும்.உடல் சார்ந்த நோய்களை
ஏற்படுத்தி மருத்துவ செலவுகளை கொடுக்கும்.
மனைகளை
அமைக்கும் போது 8×8
என்றோ அல்லது 9×9 என்றோ பெருக்கும் போது, அதன் விடை என்பது முறையே 64 மற்றும் 81 என்று வரும். இதுவே நமது சாஸ்திரம் சதுர மனை என்று சொல்கிறது. ஆகவே சதுர
அமைப்பில் இருக்கும் மனை முதல் தரமானது. செவ்வக வடிவ மனையில் வீடு கட்டினாலும்
நல்ல பலன் கிடைக்கும். ஆனால் இதனை இரண்டாவது கணக்காக வைத்துக்கொள்ள வேண்டும்.
இடங்கள் எப்படி
இருந்தாலும்,
வீடு
கட்டுவதற்கு முன்பாக கட்டிடம் கட்டும் பகுதியை முடிந்த வரை செவ்வகமாக அல்லது
சதுரமாக மாற்றிக் கொள்வது நல்ல பலனைத் தரும். மீதமுள்ள இடத்தை கழித்து நமது
சுற்றுசுவரில் இணைக்காமல் காலியிடமாக விடுதல் நலம்.
மனைக்கு
வடக்கிலும் கிழக்கிலும் சாலைகள் இருக்கும் மனை,வடகிழக்கு ஈசான்ய மனை என்கிறோம்.. இது அனைத்துச் சிறப்புகளும் கொண்ட மனையாக
சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. சிவபெருமானின் முக்கிய மூர்த்தங்களில் ஒன்றான ஈசான
மூர்த்தியின் அருளை தரக்கூடிய, குபேர சம்பத்துடன் கூடிய, இந்திர போகத்தை அருளக்கூடிய பாக்கியத்தை தரும் மனைகளாகும்.
அதேபோல
கிழக்கிலும்,
தெற்கிலும் சாலை
அமைப்பும் நல்லதே. இங்கே குடியிருப்பதை விட வர்த்தக விற்பனை கூடங்கள் அமைப்பது
நல்லது.இந்த விதி வடக்கு மற்றும் மேற்கு சாலைகள் இருக்கும் இடத்திற்கும்
பொருந்தும். இதுபோ மற்ற இடங்களில் சாலைகள் வரும் போது ஒரு வாஸ்து நிபுணரை துணைக்கு
வைத்துக்கொண்டு செயல்படுவது நல்லது.
தொடர்புக்கு: Vishwa Properties - 90033 81888.