கோவையில் நாளை ஜல்லிக்கட்டு
கோவையில் இரண்டாவது ஆண்டாக, நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது; 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
கோவையில் கடந்தாண்டு முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இவ்வாண்டும் நாளை போட்டி நடக்கிறது. இம்முறை மாவட்ட நிர்வாகத்துடன், கோவை ஜல்லிக்கட்டு சங்கம் அமைப்பு கைகோர்த்துள்ளது. நீலம்பூர் - மதுக்கரை பை - பாஸ் ரோட்டில், வெள்ளலுார் - கஞ்சிக்கோணாம்பாளையம் பிரிவுகளுக்கு எதிர்பகுதியில், 25 ஏக்கர் பரப்பில் போட்டி நடக்கிறது.பார்வையாளர்கள் அமருவதற்கு, 750 அடி நீளத்தில் காலரி அமைக்கப்பட்டுள்ளது.
20-க்கும் மேற்பட்ட இடங்களில், குடிநீர் தொட்டிகள், மொபைல் டாய்லெட்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.பாதுகாப்பு பணியில் மொத்தம், 3000 போலீசார் ஈடுபடவுள்ளனர். 600 காளைகள் போட்டியில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.