தகவல் துளிகள் : பீடம்பள்ளி
பீடம்பள்ளி ஊராட்சி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3520 ஆகும். இவர்களில் பெண்கள் 1763 பேரும் ஆண்கள் 1757 பேரும் உள்ளனர்.
பீடம்பள்ளி பெயர் காரணம் :
இடைக்காலத்தில் உயர் சாதியினருக்கு மட்டுமே படிப்பு எனும் ‘குருகுலக் கல்வி முறை’ தோற்றுவிக்கப்பட்டது. பன்னிரண்டு ஆண்டு படிக்கும் விரிவான குருகுலக் கல்வியில் உயர்சாதியினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். உழைக்கும் மக்களின் கல்வித் தாகத்தைத் தீர்க்கத் திண்ணைப்பள்ளிகள் தோன்றின. திண்ணைப்பள்ளிப் படிப்பு வெறும் இரண்டாண்டுகளே ! ஆங்கிலேயர் காலத்தில்தான் அது தொடக்கப் பள்ளியாக்கபப்ட்டு நான்காண்டானது. பின்பு ஐந்தாண்டாக விரிந்தது. எண்ணும் எழுத்தும் அறிமுகமான நிலையில், சாதிவழித் தொழில்களை மட்டுமே ‘கண்ணாக’ப் பேணுமாறு மக்கள் கட்டாயப் படுத்தப்பட்ட காலம் இருந்தது.
’பள்ளி’ வந்தது :
அனைவருக்கும் படிப்பு வழங்கும் முயற்சியைப் புத்தமதமும் சமணமதமும் மேற்கொண்டன. சமணர்களின் பாடசாலைகள் இருந்த ஊர்களின் பெயரில் ‘பள்ளி’ என்பது இருக்கும். பீடம்பள்ளி கிராமமும் ஒருகாலத்தில் சமணப்பள்ளி இருந்த ஊர்! இன்றைய ‘பள்ளி’க் கூடமும் அந்த வரலாற்றின் அடித்தளத்தில் முளைத்த சொல்லே ஆகும். தொடர்ந்து வந்த இசுலாமும் கிறித்தவமும் கல்வி விளக்கை அனைவரின் கைகளுக்கும் வழங்க எடுத்த முயற்சிகள், ஓர் எல்லையோடு நின்றுவிட்டன.
குரும்பை ஆடுகள் வளர்ப்பு தொழில் :
பீடம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் பல குடும்பத்தினர், குரும்பை ஆடுகள் வளர்ப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். ஒவ்வொருவரும், 50 ஆடுகள் வீதம், 10 பேர் ஒன்றாக சேர்ந்து, 500 முதல் 600 ஆடுகள் வரை வளர்க்கின்றனர். இவர்கள், மேய்ச்சல் நிலங்கள் உள்ள பகுதிக்கு ஆடுகளை ஓட்டிச் செல்வதும், இரவில் ஒரு தோட்டத்தில் தங்கிக் கொள்வதும் வாடிக்கையாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இத்தொழில் நல்ல லாபகரமாக இருந்தது. ஆனால், தற்போது நஷ்டம் தான் ஏற்படுகிறது குரும்பை ஆடுகள் வளர்த்து, இறைச்சிக்காக விற்பனை செய்து வருகிறோம். அவற்றிலிருந்து கிடைக்கும் ரோமம் மூலம் தயாரிக்கப்படும் கம்பளி பிரசித்தி பெற்றவை.
கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, அரசு புறம்போக்கு நிலம், தனியார் தரிசு நிலங்கள் நிறைய இருந்ததால், அதிகளவில் மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. தற்போது பெரும்பாலான தனியார் நிலங்கள் லே -அவுட்டுகளாக மாறி விட்டன. இடத்தை சுற்றியும் முள் கம்பிவேலி அமைத்ததால், மேய்ச்சல் நிலம் இல்லாமல் போனது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு, ஆடுகளை ஓட்டிச் செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது. முன்பு, பல இடங்களில் குட்டைகளும், தண்ணீரும் இருந்தன. ஆனால், தற்போது அந்த குட்டைகளை சமன் செய்து, வீட்டு மனைகளாக மாற்றி விட்டனர். அதனால், தண்ணீர் இருக்கும் பகுதிகளை தேர்வு செய்து, மேய்ச்சல் நிலங்களை தேடி அலைய வேண்டியுள்ளது.இதனால், தினமும் 8 கி.மீ., வரை ஆடுகளை ஓட்டிச் செல்ல வேண்டி உள்ளது. தண்ணீர் உள்ள பகுதி அருகே, இரவு ஆடுகளை தங்க வைத்து, காலையில் தண்ணீர் காட்டிய பிறகு, மீண்டும் மேய்ச்சலுக்கு செல்வோம். இதை ஒரு தொழிலாக தொடர்ந்து செய்து வருகிறோம். என, ஆடு வளர்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
பீடம்பள்ளி கிராமம் அஞ்சலக காப்பீட்டு திட்டத்தில் சாதனை
சூலூர் அருகே பீடம்பள்ளி கிராமம் அஞ்சலக காப்பீட்டுத் திட்டத்தில் நூறு சதவீதம் முழுமை அடைந்த கிராமமாகத் தேர்வு செய்யப்பட்டது. பீடம்பள்ளியில் கிராம அஞ்சலக காப்பீட்டு த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்டமானது நூறுசதவீத அளவை பீடம்பள்ளி அஞ்சலகம் எட்டி சாதனை படைத்தது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதில் இக்கிராமம் முன்னோடியாக விளங்குகிறது.
4750 மரக்கன்றுகள் :
பீடம்பள்ளி பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தின் கீழ் மா,வேம்பு,நாவல் ,பூவரசன் போன்ற 4750 மரக்கன்றுகள் C.R.A. முறைப்படி நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. மரம் வளர்ப்பில் ,C.R.A.முறைப்படி மரங்களை வளர்க்கும் போது நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுவதுடன் மரங்களுக்கு ஊற்றப்படும் நீரானது ஆவியாகாமல் மரங்களுக்கு பயன்படுகின்றது.மேலும் வறட்சியா காலங்களில் கூட தொடர்ந்து 3 மாதங்கள் வரை மரம் வாடமல் பாதுகாப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பீடம்பள்ளி, கள்ளப்பாளையம் அரசு பள்ளிகள் 'சென்டம்'
பீடம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.சூலுார் அடுத்த பீடம்பள்ளி எஸ்.கே.என் அரசு மேல்நிலைப்பள்ளியில், தேர்வு எழுதிய, 58 பேரும் வெற்றி பெற்றனர். கார்த்திகேயன்- 1,047 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பெற்றார். கோபிநாத்- - 1,037, மணிகண்டன்- - 1,005 மதிப்பெண் பெற்று அடுத்த இரு இடங்களை பெற்றனர்.
பீடம்பள்ளி கல்யாணவெங்கட்ரமணசாமி கோயில் :
இக்கோயிலில் வெங்கட்ரமணசாமி, ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.