தோல் நோய்களை குணப்படுத்தும் புங்கன்
புங்கன்மரத்தின் பயன்கள்
- சுத்தமான காற்றை கொடுக்கக் கூடியது
- தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது,
- மூட்டு வலியை போக்கவல்லது
- உடலில் ஏற்படும் அரிப்பை சரிசெய்ய கூடியது
- சோரியாஸிஸ்ஸை குணப்படுத்த கூடியது
- பசியின்மை போக்க கூடியது
- உடல் நோய்களை போக்கும் தன்மை கொண்டது
புங்கன்மரத்தின் இலைகள் புறஊதாக் கதிர்களை தாங்கி நிழலை தரக்கூடியது.
வீட்டின் முன்பு இருக்கக் கூடியது புங்கன்மரம். இது அடர்ந்த பசுமையான இலைகளை உடையது. பூமிக்கு சத்துக்களை தரக்கூடியது. நல்ல சுத்தமான காற்றை கொடுக்கக் கூடியது. வீட்டுக்கு உள்ளே செல்லக் கூடிய நச்சு கிருமிகளை தடுக்க கூடியது.
- புங்கன் மரத்து இலைகள், காய்கள், பூ, வேர், பட்டை ஆகியவை மருந்தாகிறது.
- புங்க விதைகளை பயன்படுத்தி மூட்டு வலி, தோலில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம்.
- புங்கன் மரத்து விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
- இதைப் பொடித்து வைத்துக் கொள்ளவும். இதை தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம்.
- புங்க மரத்தின் இலைகள் நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்ககூடியது. இதன் விதைகள் எண்ணெய் நிறைந்ததாக இருக்கிறது.
- இது ஆஸ்துமா, நெஞ்சுக் கோளாறுகளுக்கு மருந்தாகிறது. சீயக்காயுடன் புங்கன் காய்களை சேர்த்து பயன்படுத்தலாம்.
- புங்க எண்ணெய்யை பயன்படுத்தி சோரியாஸிஸ்சுக்கான மருந்து தயாரிக்கப்படுகிறது. புங்கன் எண்ணெய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
- புங்க இலையை பயன்படுத்தி தலையில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம்.
- புங்க இலைகளை, மஞ்சள் பொடியுடன் நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி துணியில் எடுத்து அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவலாம்.
- நெஞ்சின் மீது பூசுவதால் நெஞ்சு சளி, இருமல் குறைகிறது.
- தலையில் பொடுகு இருந்தால் இதை தடவி பத்து நிமிடம் கழித்து குளித்தால், அரிப்பு சரியாகும்.
- புங்க இலை தோலுக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது. தோல் மென்மை தன்மை அடைகிறது. அக்கி புண்கள், அம்மை கொப்பளங்கள் சரியாகிறது.
- புங்க இலையுடன் மஞ்சள் சேர்த்து தேனீராக்கி குடிப்பதன் மூலம் பசியின்மை, உடல் வீக்கம் சரியாகும்.
இத்தகைய சிறப்புகளை தரும் புங்கன் மரத்தை அனைவரும் வீட்டில் வளர்த்து, அதன் பயனைப் பெறுவோம்.