• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

     கோவை - சூலூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!!

    5000+ வேலைவாய்ப்புகள்! அனுமதி இலவசம்! உடனே வேலையில் சேரலாம் வாங்க!!



    கோவையில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவன காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கத்தோடு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 26ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

    இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள்  https://www.tnprivatejobs.tn.gov.in  Candidate login-இல் User id, Password உருவாக்கி கொள்ள தங்களது கைபேசிக்கு வரும் OTP-ஐ பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளவும்.

    மீண்டும் User id, Password-ஐ பயன்படுத்தி உட்சென்று தங்களுடைய கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களை முழுமையாக உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளலாம்.

     

    காலிப்பணியிடங்கள்:

    தனியார் துறை நிறுவனங்களில் இருந்து 5000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

    கல்வித்தகுதி :

    8-ஆம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ, அக்ரி, நர்சிங், பார்மஸி, பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட அனைத்து படிப்புகள் முடித்தவர்களும் கலந்துகொள்ளலாம்.

    வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம் & நாள்:

    இடம் : RVS கலை அறிவியல் கல்லூரி வளாகம், சூலூர், கோவை.

    நாள்: 26-03-2022 சனிக்கிழமை

    காலை 9 மணி முதல்

    முக்கிய குறிப்பு:

    கோவை மாவட்ட RVS கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் BIO DATA, பாஸ்போர்ட் அளவு போட்டோ, ஆதார் கார்டு, கல்விச்சான்று உள்ளிட்ட ஆவணங்களை நேர்காணலுக்கு கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

     

    A call-to-action text Contact us