கோவையில்
மாபெரும் உயர்கல்வி கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்
பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்று தேர்வு செய்வதுதான்
வாழ்க்கையின் திருப்பு முனையாகும்.
அவர்களுக்கு
உதவும் விதமாக, தமிழ்நாடு கல்வியாளர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் ஜி.வி. நிறுவனம் ஒருங்கிணைத்து நடத்தும் உயர்கல்வி கண்காட்சி - 2022 கோவையில் நடைபெற உள்ளது..
இந்த கல்வி கண்காட்சியில் மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம், கலை மற்றும் அறிவியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 100-க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு படிப்பிலும் இருக்கக்கூடிய பாடத்திட்டங்கள், அதற்குரிய தனியார் மற்றும் அரசு வேலை வாய்ப்புகள் பற்றிய அனைத்து விபரங்களையும் மாணவர்களுக்கு விளக்கும் வகையில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
கண்காட்சியில் பங்கேற்கும் கல்வி நிறுவனங்கள், அவர்களது சிறப்பம்சங்கள், பயிற்றுவிக்கப்படும் படிப்புகள், அதற்குரிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களையும் அளிக்கின்றன. எனவே, மாணவர்கள் தங்களது உயர் கல்வி குறித்த அனைத்து விவரங்களையும் இந்த கண்காட்சியில் பெறுவதோடு, மாணவர் சேர்க்கை நடைமுறைகள், கட்டண விவரங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை விபரங்கள் போன்றவற்றையும் கண்காட்சி அரங்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
புதிய படிப்புகள்
காலத்திற்கேற்ப ஒவ்வொரு துறையிலும் அறிமுகமாகி வரும்புதிய படிப்புகள், அதற்கான வேலை வாய்ப்புகள் பற்றி இந்த கண்காட்சியின் மூலம் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் சென்று படிக்கக்கூடிய படிப்புகள் பற்றியும், வெளிநாட்டில் படிப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகளையும் அறிந்து கொள்ளலாம்.
கண்காட்சியானது
காலை 10 மணி முதல் மாலை 7.00 மணி வரையில் நடைபெறும் கண்காட்சிக்கு
அனுமதி இலவசம்.
உயர்கல்வி கண்காட்சி
நிகழ்ச்சிக்கு மீடியா ஒருங்கிணைப்பு: தி கோவை டைம்ஸ் இதழ்
இந்த உயர்கல்வி கண்காட்சிக்கு
கல்வி நிறுவனங்கள் பங்கேற்க 90033 81888 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.