கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையின் சார்பாக ‘NETSE-22’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு நடைபெற்றது.
கருத்தரங்கில் கல்லூரியின் முதல்வர் அகிலா லந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறமைகளை பற்றி கூறினார். கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையின் தலைவர் கதிரவேலு இந்த கருத்தரங்கின் முக்கியத்துவம் மற்றும் பலன்களைப் பற்றி பேசினார்.இதில் கேலிபர் இன்டர் கனெக்ட் சொலுஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் மோகனசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அவர் உரையாற்றும்போது, மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையில் சார்ந்த நிறுவனங்களுக்கு வேலைக்கு வரும் மாணவர்களிடம் எதிர்பார்க்கும் திறமைகள் மற்றும் அங்குள்ள நவீன தொழில்நுட்பங்கள், இத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றி எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு பொறியியல் கல்லூரிகளிலிருந்து 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகளிலும் கலந்து கொண்டனர்.