• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக்களுக்கு தடை! 



    🎈 ஜனவரி 1ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட உள்ளது.

    📌 பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் டீ கப், தண்ணீர் கப், தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி, மேசை விரிப்புக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் விரிப்பான், பிளாஸ்டிக் ஒட்டும் தாள் உட்பட 14 வகையான சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய பொருட்களை பயன்படுத்தக்கூடாது. மீறினால், 5 ஆண்டு சிறை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கவும் தொடர்ந்து சட்டத்தை மீறினால் நாள் ஒன்றுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் சட்டம் வழிவகை செய்கிறது.

    பிளாஸ்டிக் - பிரச்சனைகள் என்ன?

    🐂 நாம் பயன்படுத்தி விட்டு கீழே போடும் பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடும் கால்நடைகள் இறக்கின்றன. பிளாஸ்டிக்கை எரிக்கும்போது ஏற்படும் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. 

    🍲 கொதிக்கும் சாம்பாரையும், குருமாவையும் பிளாஸ்டிக் பையில் வைத்து சாப்பிடுகிறோம்.

    ☕ கைதாங்க முடியாத சூட்டுடன் காபியையும், டீயையும் கூட பிளாஸ்டிக் கப்பில் குடிக்கிறோம். 

    🍕 வடை, பஜ்ஜி, போண்டா சுட்டு விற்பவர்கள் சட்டியில் கொதிக்கும் எண்ணெய்யின் அளவு குறைந்துவிட்டால் இடது கையால் புதிய எண்ணெய் பொட்டலத்தை எடுத்து அதன் ஒரு முனையைக் கொதிக்கும் எண்ணெய்யில் நனைத்து அந்த சூட்டில் எண்ணெய் பொட்டலத்தின் முனை கருகி கொட்டும் எண்ணையில் செய்த பஜ்ஜியை ருசித்து சாப்பிடுகிறோம்.

    🍃 வாழை இலைகளுக்குப் பதில் வெள்ளை நிற பிளாஸ்டிக்கை இலையாக வைத்து, அட இன்னும் கொஞ்சம் பேஷனாக பச்சை நிறத்தில், வாழை இலையைப் போல் பச்சை நிற பிளாஸ்டிக் இலையில் நாம் உண்கிறோம்.

    இதுவரை நாம் ரசித்து ருசித்தது உணவை அல்ல. புற்றுநோயை!

    😟 பிளாஸ்டிக் பைகளில், கோப்பைகளில் சூடான உணவுப் பொருளை வைத்து சாப்பிட்டால், உணவோடு நச்சு ரசாயனங்கள் நம் உடலில் கலந்து புற்றுநோய் நிச்சயம் வரும்.

    இனியும் தேவையா பிளாஸ்டிக்? - அரசுக்கு நாம் கொடுக்க வேண்டிய ஒத்துழைப்புத்தான் என்ன?

    👜 மளிகை கடைக்குச் செல்வோர் துணிப்பையையோ, கூடையையோ தயங்காமல் எடுத்துச்செல்லுங்கள். உங்களை ஏளனமாக பார்ப்பவர்களை நீங்கள் இன்னும் ஏளனமாக பார்த்து சிரித்துச் செல்லுங்கள். அவர்கள் புற்றுநோயை பிளாஸ்டிக் வடிவில் கையில் வைத்திருப்பவர்கள்!. 

    🍵 ஹோட்டல்களில் உணவை பார்சல் செய்வதற்கு வீட்டிலிருந்தே அலுமினிய டிபன் கேரியர்களை எடுத்துச்செல்லுங்கள். பார்சலுக்கு மாற்றாக பாத்திரத்தை பயன்படுத்துங்கள்!

    🎉 விலை குறைவு, எடை குறைவு, உலோகத்துக்கு இணையான வலிமை என்று பிளாஸ்டிக்கை ஆதரித்து வீரவசனங்கள் பேசாமல் வீட்டு விசேஷங்களில் பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்த்திடுங்கள்!

    😳 நாம் இதுவரை பயன்படுத்திய பிளாஸ்டிக் மக்குவதற்கு சுமார் 400 முதல் 1,000 ஆண்டுகள் ஆகுமாம். இதற்கு மேலும் அலட்சியமாக பயன்படுத்தினால் டைனோசர் அழிந்தது போல அடுத்த சில நூற்றாண்டுகளில் மனித இனம் முழுமையாக அழிவது உறுதி. நமக்கோ நம் வருங்கால சந்ததியினருக்கோ புற்றுநோய் வருவதும் உறுதி!
    AD

    🙏 புதுமை, சௌகரியம், அழகு, விளம்பரம் போன்ற காரணங்களால் பிளாஸ்டிக் பை நம் வாழ்வில் ஊடுருவியது. இப்போது முற்றிலும் ஆக்கிரமித்துவிட்டது. பிளாஸ்டிக் ஒழிப்பின் முதல் படியாக, முதலில் நம் மனதிலிருந்து பிளாஸ்டிக்கை அகற்றுவோம். 

    பிளாஸ்டிக் தடை சாபமல்ல.. வரம்..! மாற்று நடைமுறைக்கு மாற வேண்டிய நேரம் இது!...


    சொந்தமாக ஒரு வீடு கட்டி நிம்மதியாக இருக்கவேண்டும் என்கிற நோக்கில் வீட்டு மனை வாங்குகிறவர்கள் ஒருபக்கமிருக்க, முதலீட்டு நோக்கிலும் சிலர் வீட்டுமனை வாங்கவே செய்கிறார்கள். இப்படி மனை வாங்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் ரியல் எஸ்டேட் துறையில் அனுபவம் வாய்ந்த VISHWA DEVELOPERS நிறுவனத்தின் மேலாளர் திரு.ராஜேந்திரன்
    ''வீட்டுமனை விற்பதில் மாநில அரசு பல புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது. இந்த விதிமுறைகளின்படி இருந்தால் மட்டும்தான் மனைகள் விற்பனைக்கு அரசு அனுமதியே தருகிறது. என்னதான் விதிமுறைகள் அதிகம் கொண்டு வரப்பட்டாலும் நாமும் அந்த விதிமுறைகள் அனைத்தும் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை எல்லாம் கவனிப்பது அவசியம்.
    முதலில், எந்தத் தேவைக்காக மனை வாங்குகிறீர்கள் என்பதைத் தெளிவாகத் திட்டமிடுங்கள். அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மனை இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். ஏனெனில், விலை ஏறும் என நினைத்து முதலீட்டு நோக்கத்தில் வாங்கும் மனையின் விலை உயராமல் இருப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. எனவே, நீங்கள் வாங்கும் வீட்டு மனை எதிர்காலத்தில் விலை ஏறுவதற்கான வாய்ப்புள்ளதா இல்லையா என்பதை விசாரித்து தெரிந்துகொண்ட பிறகு வாங்குவது நல்லது. குறிப்பாக, சாலை வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கவனிப்பது அவசியம்.

    உள்ளூர், வெளியூர் என எந்த இடத்தில் மனை வாங்கினாலும் அந்த மனைக்கு சட்டப்படியான அப்ரூவல் உள்ளதா என்பதை ஆவணங்கள் மூலம் சரி பார்ப்பது அவசியம். சந்தேகம் ஏற்பட்டால் அப்ரூவல் தந்த அலுவலகத்திற்கே நேரடியாகச் சென்று விசாரிக்கலாம்.
    அக்கம்பக்கம் உள்ளவர்கள், ஏஜென்ட்கள், புரோக்கர்கள், விளம்பரங்கள் சொல்வதை மட்டுமே நம்பி மனை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இதில் பல பொய்யாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. மனைக்கு நீங்கள் தரும் விலை சரிதானா என்பதையும் ஆராய்ந்து பார்ப்பது அவசியம்.
    மனையை நேரில் சென்றுபார்த்த பிறகு வாங்குவது நல்லது. லேஅவுட் போட்ட இடத்தில் மனை வாங்கும் போது அதில் பூங்கா, சாலை, பொது இடம் என அனைத்தும் சரியாக ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும் கவனிப்பது அவசியம்.
    மனை வாங்கி உடனடியாக அதில் குடியேற நினைத்தால், அந்த இடத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளதா என்பதைக் கவனிப்பது முக்கியம். நீங்கள் மனை வாங்கும் பகுதியில் பள்ளிக்கூடம், மருத்துவமனை, கடைகள், மின்சார வசதி, கழிவு நீர் அகற்றும் வசதிகள் இருக்கும் மனைகளைத் தேர்வு செய்வது நல்லது. முதலீட்டு நோக்கில் வாங்கும்போதும் இந்த விஷயங்களைக் கவனிப்பது முக்கியம். அடிப்படை வசதிகள் இருந்தால்தான் அந்த இடத்தைப் பிற்காலத்தில் எளிதில் விற்க முடியும். இந்த வசதிகள் இல்லாத இடத்தை வாங்காமல் இருப்பது நல்லது'' என்றார் ராஜேந்திரன்.
    மனை வாங்கும்முன் நின்று நிதானித்து வாங்கினால் நிச்சயம் லாபம்தான்..!
    #பில்கேட்ஸ் வெற்றிக்கு #துணையாய் இருந்தது இந்த '6' !

    உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவர் தான் பில்கேட்ஸ் (William Henry Bill Gates). மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவராவர். இவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. இவருடைய தலைமையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நோக்கமானது, நிறுவனத்தின் தொடர் வளர்ச்சியும், கணினி உபயோகிப்போருக்கு பூரண மன திருப்தியையும் ஏற்பட வேண்டும் என்பதே ஆகும்.
    பில் கேட்ஸ் இதுவரை இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். பில் கேட்ஸின் “த ரோட் அகெட்' எனும் நூல் 1995 ஆண்டு பிரசுரிக்கப்பட்டு பெரும் பாராட்டினைப் பெற்றது. அதே ஆண்டு நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் அதிகம் விற்பனையான நூல்களின் பட்டியலிலும், தொடர்ந்தும் ஏழு வாரங்கள் முன்னணி நூலாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "பிசினஸ் @ தி ஸ்பீட் ஆப் தாட்" என்ற நூலில் வியாபாரமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பது பற்றியும் தொழில்நுட்பக் கட்டமைப்புகளும் தகவல் வலையங்களும் எப்படி போட்டி நிறைந்த வியாபார உலகில் கைகொடுக்கும் என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது.
    கடந்த 23 வருடங்களில் 18 வருடங்கள் உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்தவர். ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் முழுக்க முழுக்க தனது சொந்த முயற்சியால் இந்த இடத்தை அடைந்தவர். பெரும் செல்வந்தனாக வலம்வர 6 பழக்கங்கள் காரணமாக அமைந்ததாக குறிப்பிடுக்கிறார்.
    1. வெற்றிக்கான சக்தியை வைத்திருங்கள்
    உங்கள் முயற்சியில் தோல்விகள் வரலாம் அவற்றை எதிர்கொள்ள உங்களிடம் மன தைரியமும் சக்தியும் இருக்கவேண்டும் என்கின்றார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தபோது அந்த நிறுவனம் திவாலாகிவிடும் நிலை தோன்றியதாகவும், இருப்பினும் தானும் தனது நண்பனும் என்ன நடந்தாலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை மூடுவதில்லை என்பதில் விடாப்பிடியாக இருந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.
    2. வாய்ப்புக்கள் அடிக்கடி கிடைக்காது
    வாழ்வில் சரியான வாய்ப்புக்கள் அடிக்கடி வராது. அவை வரும்போது நாம் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்"
    "நான் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போதே மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதை ஆரம்பிப்பதாக இருந்தால் எனது படிப்பைப் பாதியில் விடவேண்டியிருந்தது. உலகிலேயே தலைசிறந்த பல்கலைக்கழகத்தை மற்றும் படிப்பைப் பாதியில் விடுவது முட்டாள் தனமாகத் தோன்றினாலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஆரம்பிக்க அதுவே சரியான நேரமாக இருந்தது. எனவே எனது படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு நிறுவனத்தை ஆரம்பித்தேன். வாழ்வில் சரியான வாய்ப்புக்கள் அடிக்கடி வராது. அவை வரும்போது நாம் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்கின்றார்.
    3. கடினமாக உழையுங்கள்
    கடின உழைப்பே வெற்றிக்கான வழி. இதனையே அனைத்து வெற்றியாளர்களும் குறிப்பிடுகின்றார்கள். பில்கேட்ஸ்-ம் அதற்கு விதிவிலக்கல்ல. இது குறித்து அவர் குறிப்பிடும்போது.
    "மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தபோது நாங்கள் இரவு பகலாக வேலைசெய்தோம். வருடம் முழுக்க வாடிக்கையாளர்களை சந்திப்பதிலும், மென்பொருட்களை வடிவமைப்பதிலுமே செலவு செய்வோம். வருடத்தில் இரண்டு வாரங்கள் மட்டுமே நான் ஒய்வு எடுத்து, அதை வெளி இடங்களில் செலவு செய்வேன்" என்கின்றார்.
    4. அறிவுரைகள் கேளுங்கள்
    "உங்களுக்கென நம்பிக்கையான ஒரு சிறு குழுவை வைத்திருங்கள். நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுங்கள்" என்கின்றார். நீங்கள் அனைவரிடமும் அறிவுரை கேட்கவேண்டிய அவசியமில்லை, நீங்கள் நம்பும் ஒரு சிலரிடம் மட்டும் கேட்டால் போதுமானது.
    5. சரியானவர்களைத் தேர்ந்தெடுங்கள்
    தனது வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக பில்கேட்ஸ் கூறுவது பங்குதாரர்களையம் தன்னுடன் வேலை செய்தவர்களையும் தான். நீங்கள் உங்களுக்கான அணியினை உருவாக்கும்போது அதிலுள்ள ஒவ்வொருவரையும் அவர் உங்கள் தேவைகளிற்குப் பொருத்தமானவரா என்பதையும், அதே நேரம் அவர் உங்களுடன் ஒன்றி வேலை செய்வாரா என்பதையும் ஆராய்ந்த பின்னரே அணியில் சேர்க்கவேண்டும் என்கின்றார்.
    6. அதிகம் அலட்டிக்கொள்ளாதீர்கள்
    வெற்றியோ, தோல்வியோ எதையும் அதிகமாக அலட்டிக்கொள்ளாதீர்கள். எப்போதும் நகைச்சுவை உணர்வோடு இருங்கள். கோபம் பதற்றம் இவை உங்கள் வெற்றியை தடுத்துவிடக்கூடியவை. பிரச்சனைகளுக்கு விரைவாகத் தீர்வுகாணப் பழகுங்கள். அவற்றை உங்கள் தலைக்குள் அதிகமாகச் செல்லவிடாதீர்கள் என்கின்றார்.
    வெற்றிக்கான வாய்ப்புக்கள் கடினமாக இருந்தாலும் கடின உழைப்போடு சிறந்த அறிவுரைகள் மற்றும் உடன் பயணிக்க சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்து செயல்பட்டால் வாழ்க்கை என்றும் சிறக்கும் என்கிறார் பில்கேட்ஸ்.
    ஆண்கள் கோலோச்சும் பின்னலாடைத் தொழில்துறையில் சாதனைப் பெண்ணாக ஜொலிக்கிறார் 45 வயது லீலாவதி. தொழிலில் அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டு, ஆண்டுக்கு 100 கோடி ஏற்றுமதி வர்த்தகம் செய்து சாதித்துவருகிறார் லீலாவதி. 

    கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் லீலாவதி. கணவர் திருக் குமர னுக்குச் சொந்த ஊர் ஈரோடு. திருமணத்துக்கு முன்பே பின்னலாடைத் துறையில் ஈடுபட்டுவந்தார் திருக்குமரன். திருமணம் முடிந்ததும் புதுமணத் தம்பதி, ஏற்றுமதித் தொழிலில் ஈடுபடத் தொடங்கினர். தொழில் பங்குதாரர்களாக இருந்தவர்கள் அந்த நேரம் பார்த்து விலகிச்செல்ல, பெரும் சிரமத்துக்கு ஆளாயினர் லீலாவதி- திருக்குமரன் தம்பதி. 

    குழந்தை சிறீநிதிக்கு ஆறு மாதமானபோது குடும்பச் சூழலால் பின்னலாடைத் தொழி லுக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் லீலாவதிக்கு. தனியொரு பெண்ணாக எவ்வித முன் அனுபவமும் இன்றித் துணிந்து கால்பதித்தார். தொழிலில் கணவருக்குப் பக்கபலமாக இருந்து, தொழில் நிர்வாகத்தை ஏற்று நடத்தத் தொடங்கியபோது லீலாவதிக்கு 25 வயது! 

    திருப்பூர் கொங்கு பிரதான சாலையில் 20 பேருடன் நிறுவனத்தை நடத்தத் தொடங் கினார் லீலாவதி. இன்று அவரது நிறுவனத்தில் 1,000 பேர் வேலை செய்கிறார்கள் என்பதே அவர் எட்டியிருக்கும் உயரத்துக்குச் சான்று. 700 ஆண்கள், 300 பெண்கள் எனப் பரந்து விரிந்த பின்னலாடைத் தொழிற்சாலையாக, வடக்கு பூலுவபட்டியில் உள்ளது லீலாவதியின் எஸ்.டி. பின்னலாடை உற்பத்தி ஏற்றுமதி நிறுவனம். 

    பரபரவென்று பம்பரமாக நிறுவனத்தில் சுழன்றபடி பேசத் தொடங்குகிறார் லீலாவதி. நான் பி.காம். பட்டதாரி. 1997இல் திருமணம் நடந்தது. மணம் முடித்த கையோடு, பின் னலாடைத் தொழிலுக்குள் நுழைந்தேன். நிர்வாகத்தைக் கவனிக்கும் பொறுப்பைப் பெரும் நெருக்கடிக்கு இடையே ஏற்றேன். மிகச் சிறிய அளவில் மிகுந்த சிரமத்தோடு தொழிலைத் தொடங்கினோம். அப்போது வங்கியில் கடனுதவிப் பெற்றுத் தொழிலை விரிவுபடுத்தினோம். 

    எனக்கு வேலைசெய்யப் பிடிக்கும். நேரம், காலம் பார்க்காமல் வேலைசெய்யத் தொடங் கினேன் என்று பேசியபடியே அலுவலக வேலையையும் இடையிடையே செய்து விடுகிறார் லீலாவதி. 

    பிறகு பெல்ஜியம், பிரான்சு, ஜெர்மனி, அமெரிக்கா எனப் பல நாடுகளுக்குப் பின்ன லாடையை ஏற்றுமதி செய்யத் தொடங்கி னார்கள். தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருந்த கடன் நெருக்கடியால் தான் மனம் தளரவில்லை என்று சிரித்தபடியே சொல்கிறார் லீலாவதி. 


    நம் பிரச்சினையை நாம்தான் எதிர் கொள்ள வேண்டும் என்பதால், அதிலிருந்து பின்வாங்கவில்லை. மாறாக, கடன் பெற்றவர்களிடம், சிறிது சிறிதாகப் பணம் கொடுத்து நம்பிக்கையை ஏற்படுத்தினோம். பெண் என்பதைக் காரணமாக வைத்து நான் எதிலும் பின்வாங்க வில்லை. பிரச்சினையை எதிர்கொள்ளத் தொடங்கிய பிறகு, தொழிலும் மெதுவாக வளரத் தொடங்கியது. இதையடுத்து 50 பேருடன் வடக்கு பூலுவபட்டியில் 2005இல் பின்னலாடை உற்பத்தி ஏற்றுமதி நிறுவனத் தைத் தொடங்கினோம் என்கிறார் லீலாவதி. 

    நேர்மையும் நேரம் தவறாமையும் 

    நேர்மை, நேரம் தவறாமை ஆகிய இரண்டு இரண்டையும் தொழிலுக்கு மிக முக்கியமானவையாகக் கருதுவதாகச் சொல் கிறார். தொழிலைத் தொழிலாக மட்டுமன்றி, வாழ்க்கையாகவும் அவர் பார்த்தார். 

    பெண்கள் அலுவலக நெருக்கடியையும் கையாள வேண்டும்; அதே நேரம் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும். வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு வேலைக்கும் செல்லும் பெண்கள் பாவப்பட்டவர்கள் என்று சொல்லும் லீலாவதி போட்டி நிறைந்த பின்னலாடைத் துறையில் சாதிப்பது பெரும் சவால் நிறைந்ததாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். 

    லேசாகக் கவனம் திசை திரும்பினால் தொழிலும் தடம்புரளும். கணவர் மார்கெட்டிங் துறையை மட்டும் பார்த்துக்கொண்டதால், அலுவலகத்தில் என்னால் நிர்வாகத்தை நன்கு கவனிக்க முடிந்தது. தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இருந்தும், இருபது ஆண்டுகளாக நிர்வாகத்தைச் சிறப்பாகக் கவனித்து வருகிறேன். 

    இதை நான் சாதனையாகக் கருதவில்லை. என் திறமையை நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாகவே கருதுகிறேன். தொழிலைக் கடந்து சமூகத்தில் பணியாற்றுவதும் தற்போது பிடித்துள்ளது. தொழில்துறையில் ஈடுபட்டுள்ள பெண்கள் பிரச்சினைகளைக் கண்டு ஓடி ஒழியக் கூடாது. அவற்றை எதிர்கொள்ளப் பழகுவதே வெற்றிக்கான வழி என்று சொல் லும் லீலாவதி, தனது சொல்லுக்கு இலக் கணமாக வாழ்கிறார்

    Eco-friendly marriages are need of the hour. Keeping this in view, Brookefields Mall is coming up with a wedding show to spread awareness on this count.
    For the second consecutive year Brookefields is back with the award winning Kalyana Vaibhavam from Dec 22 to Dec 25 .There will be exhibits catering to wedding needs, eco-friendly products and services. There will also be a drama cum fashion show called Wedding Suthra which will showcase eco-friendly alternates in various parts of a wedding. And the event includes eco-friendly wedding stories wherein the most inspiring will win Brookefields gift hampers.
    The stories will be shared during the wedding show to reach out to more people. For stall details and to send the green wedding story ring 9551255536 or 99412 35552.
    Brookefields has won an award in the recently concluded TAVF forum, Mumbai, in the category of the Best IP of the year – Marketing-Non metro at the recently concluded TAVF award at Mumbai.
    This is the third consecutive mall has won the award. Brookefields strives to offer the best experience to all the mall visitors ensuring they have a delightful experience.



    தமிழ்நாடு மாநில எல்லை வரையறை ஆணையத்தின் உத்தரவுப்படி, கோவை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சியில், மறு சீரமைக்கப்பட்ட வார்டுகளின் எல்லைகள் குறித்த அறிவிப்பு, மாவட்ட சிறப்பு அரசிதழில் கடந்த டிச.,14ல் வெளியிடப்பட்டது. 

    இது குறித்த மாவட்ட சிறப்பு அரசிதழ் அறிவிப்பு, பொதுமக்கள் பார்வைக்காக கலெக்டர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என, கலெக்டர் ஹரிஹரன் கூறியுள்ளார்.
    காக்கி சட்டைக்குள்ளும் ஈரம் உண்டு என்பதை மெய்ப்பிக்கும் வகையில், குடும்ப சூழ்நிலை குறித்து புலம்பிய வாகன ஓட்டிக்கு, போலீசார் தங்கள் சொந்த பணத்தில் இன்சூரன்ஸ் எடுத்து கொடுத்தனர். 


    கோவை, சிங்காநல்லுார் போக்குவரத்து எஸ்.ஐ., முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை திருச்சி ரோடு, சாந்தி கியர்ஸ் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபரை நிறுத்தி, ஆவணங்களை ஆய்வு செய்தனர். இதில், வாகனத்துக்கான இன்சூரன்ஸ் காலாவதியானது தெரிந்தது.விசாரித்தபோது, பைக்கில் வந்தது கடலுாரை சேர்ந்த சரவணன், 33, என்பதும், மூணாறு பகுதியை சேர்ந்த சுதா என்பவரை, காதலித்து திருமணம் செய்து, கோவை வந்து விட்டதாகவும் கூறியுள்ளார். 

    இரு வீட்டிலும் ஆதரவின்றி, கோவையில் கூலி வேலை செய்து வருவதாகவும், மனைவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு இடங்களில் கடன் வாங்கி, மருத்துவம் செய்து வருவதாகவும் கூறி அழுதுள்ளார். அவரது வீட்டுக்கு சென்ற போலீசார், மருத்துவ செலவுக்கு, ரூ.3.50 லட்சம் வரை செலவானதை உறுப்படுத்தினர். தொடர்ந்து தங்கள் சொந்த பணத்தில், சரவணனின் வாகனத்துக்கான ஒரு வருட இன்சூரன்சை நேற்று புதுப்பித்து கொடுத்தனர். 

    ஒரு புதிய ஹெல்மெட்டையும் வாங்கி கொடுத்தனர்.மனம் நெகிழ்ந்து போன தொழிலாளி, கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். 

    போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அறிவுரைப்படி, வாகன ஓட்டிகள், பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து வருகிறோம். இதனால், அவர்களும் தங்கள் சிரமங்களை பகிர்ந்து கொள்கின்றனர். இதன்மூலம் பொதுமக்கள்-போலீஸ் நல்லுறவு மேம்படும்' என்றனர்

    கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டது. 


    பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகன எண்ணிக்கைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சாலை விபத்துகளும் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக இப்படி நடைபெறும் விபத்துக்களால் இறப்பவர்கள் சாலை விதிகளை மதிக்காததே காரணம் என ஆய்வுகளில் தெரிய வருகிறது.ஆகவே சாலை விதிகளை மதித்து தங்கள் உயிரையும் உடமையையும் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தபட்டு வருகிறது. 


    இந்தநிலையில் கோவை பந்தய சாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து காவலராக பணிபுரியும் மகேஸ்வரன் சாலை விதிகளை மதிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'மதிக்கனும் மதிக்கனும்'என்ற பாடலை தயாரித்து உள்ளார். இந்த பாடலை கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் சுமித் சரண் ஐ பி எஸ்,போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித் குமார் ஐஎஸ்.மற்றும் சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் டாக்டர். பாலாஜி சரவணன் ஆகியோர் வெளியிட்டனர்
    கோர்ட் உத்தரவை தொடர்ந்து, கோவையில் உள்ள விளம்பர பதாகைகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் அகற்றும் பணியில், மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். 

    போக்குவரத்துக்கு இடையூறாக, வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைதிருப்பும் வகையில், ரோடு சந்திப்புகள் மற்றும் ரோட்டோரங்களில், விளம்பர பதாகைகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது என, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

    உத்தரவை மீறி, நகர்ப்பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், பிளக்ஸ் பேனர்களும், விளம்பர பதாகைகளும் வைக்கப்படுகின்றன. அரசியல் கட்சியினர் வைக்கும் பிளக்ஸ்களை அகற்ற, அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அரசியல் கட்சிகளுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.இதையடுத்து, கோவையில் ஆங்காங்கே உள்ள பிளக்ஸ் பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகளை அகற்றும் பணியில், நகரமைப்பு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். 

    அதிகாரிகளின் கண்காணிப்பு குறைந்ததும், மீண்டும் விளம்பர பதாகைகள் வைக்கப்படுகின்றன. அதை தடுக்க, கட்டடங்களின் மேற்கூரையில் வைக்கப்பட்டுள்ள இரும்பு கிரில்களையும் கழற்றும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. கட்டட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் ஸ்டேஷன்களிலும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. 

    விதி மீறினால் சிறை உறுதிநகரமைப்பு பிரிவினர் கூறுகையில், 'அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைத்தால், ஓராண்டு சிறை அல்லது, ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என்றனர்
    கோவை, கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக்கல்லூரி(KIT), அமெரிக்காவில் 150 ஆண்டுகளுக்கு மேல் பழமையான  இஷ்டென் மிஷிகன் பல்கலைகழகத்துடன் (Eastern Michigan University (EMU) அண்மையில்  புரிந்துணர்வு ஒப்பந்தம்  மேற்க்கொண்டது.
    இவ்ஒப்பந்தம்  கல்லூரி தலைவர் ப.பைந்தமிழ் பாரி,  கல்லூரி துணைத்தலைவர் பி.இந்துமுருகேசன், கல்லூரி செயல்  அறங்காவலர் ஏ.சூர்யா, ஸ்ரீ.டி.விவேக்,தலைவர்,க்ளோபல் எங்கேஜ்மென்ட் கவுன்சில், மார்க்கெட்டிங் மற்றும் சப்ளே ஜெயின் மனேஜ்மண்ட், இஷ்டென் மிஷிகன் பல்கலைகழகம், அமெரிக்கா, கல்லூரி நிறுவனத்தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி மற்றும் சிவா பழனிச்சாமி,தலைவர்  & சி.இ.ஒ , மேஸ்ட்ரோ மீடியா பிரிண்ட் சொலியுசன்ஸ், ப்ளூம் பீல்டு ஹில்ஸ், மிஷிகன் , அமெரிக்கா ஆகியோரது  முன்னிலையில் கையெழுத்தானது. இதை தொடர்ந்து ஒரு நாள் கருத்தரங்கம்


    முளைகட்டிய பயறு ஒரு சத்தான உணவாகும். இது உடலை வன்மையாக்கும். இது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று.

    முளைக்க வைக்கப்பட்டு பயன்படுத்தும் அனைத்து பயறு வகைகளுமே சிறந்த புரதச்சத்து உடையதாக இருக்கிறது. இதன் காரணமாகவே பயறு வகையை நீரில் ஊற வைத்து, பின்பு முளைக்க வைத்து அதனை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

    முளை கட்டிய தானியங்கள் என்றவுடன் பெரிதாகவும் நினைக்க வேண்டியதில்லை. நம்முடைய அன்றாட வாழ்க்கையில், எளிதில் கிடைக்கும் பயறு வகைகளையே முளைகட்டச்செய்து பயன்படுத்தலாம். அந்த வகையில் பாசிப்பயறு, கொண்டைக் கடலை, தட்டைப்பயறு, உளுத்தம்பயறு, சோயா பயறு இந்த ஐந்து முளை கட்டிய தானியங்களிலும் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது.

    அதனால் இந்த பயறு வகைகளை முளைகட்டி பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். முளை கட்டிய தானிய வகைகளில் சிட்ரஸ் அமிலம் (Citrus Acid) என்று சொல்லக்கூடிய வைட்டமின் சி மற்றும் ஈ சத்துக்களும் அதிகப்படியான நார்ச்சத்துக்களும் செறிவாகக் காணப்படுகிறது.

    மேலும் புரதம், கார்போஹைட்ரேட், பீட்டா, கரோட்டின் போன்றவை அதிக அளவில் உள்ளன. முளை கட்டிய தானியங்களில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டும், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.

    இதனால் உடல் உறுதி, உடல் சுறுசுறுப்பு, மனத்தெளிவு, புத்திக் கூர்மை, ஞாபக சக்தி அதிகரிப்பு, மனத்தெளிவு போன்றவற்றுடன் அவர்களின் இளம் வயதிலயே உடல் எடை கூடாமல் இருக்கும் வண்ணமும் பார்த்துக் கொள்ள முடியும். முக்கியமாக கூந்தல் வளர்ச்சி, தோலுக்கு மினுமினுப்பு தருவதோடு கொலஸ்ட்டிராலை சமன்படுத்தும் வேலையையும் முளைகட்டிய தானியங்கள் செய்கின்றன. வீட்டிலேயே செய்யக்கூடிய ஓர் எளிய ஆரோக்கியமான உணவும் கூட.

    முளைகட்டிய பயறு ஒரு சத்தான உணவாகும். இது உடலை வன்மையாக்கும். இது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று. உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கும் ஏற்ற உணவு.



    அமினோ அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் ஈ அதிகளவில் உள்ளது. இது எலும்பு வளர்ச்சிக்கும், சீரான ரத்த ஓட்டத்துக்கும், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் ஏற்ற உணவாகும்.முளை கட்டிய பாசிப்பயறு பெருங்குடல் தொந்தரவுகளைத் தீர்த்து, மலச்சிக்கலைப் போக்குகிறது.

    இதில் புரதம், கலோரி, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவை அதிகளவில் இருக்கின்றன. மாவுச்சத்து, கொழுப்பு, கோலின், பீட்டா கரோட்டின், கால்சியம், இரும்பு, மெக்னீஷியம், தாமிரம், சோடியம் ஆகியவையும் உள்ளடங்கி இருக்கிறது. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளலாம். எலும்பு வளர்ச்சிக்கும், ரத்த ஓட்டத்துக்கும், வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளின் தசைகளை வலுவாக்குவதற்கும் ஏற்றது முளைகட்டிய பச்சைப் பயறு.

    பச்சைப்பயறு 100 கிராம் அளவு எடுத்துக்கொண்டு அதனை ஒரு பாத்திரத்தில் நன்றாக நீரில் ஊற வைக்க வேண்டும். 10 மணி நேரம் ஊறவைத்து, பின்பு தண்ணீரை வடிகட்டி பயரினை ஒரு நல்ல சுத்தமான காட்டன் துணியில் வைத்து கட்டிவிட வேண்டும்.

    பின்பு 12 மணிநேரம் கழித்து பார்க்கிறபோது முழுவதுமாக முளை கட்டிய பயறு தயாராகிவிடும். முளை கட்டிய தானியங்களை பயன்படுத்தும் போது அதனுடைய முழுமையான புரதச்சத்தை நாம் பெறமுடியும் ஏனெனில் முளைகட்டுவதால் அதில் அதிகஅளவு புரதச்சத்து இருக்கும்.

    முளைகட்டிய தானியங்களை நேரடியாக சாப்பிடுவதென்றால் குறைந்த அளவு சாப்பிடுவது நல்லது. ஏனெனில், இது செரிமானம் அடைவதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும். சில நேரங்களில் வயிறு உபாதைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, வயிற்றுப் பொருமல், வயிறு உப்புசம், ஜீரணம் ஆகாமல் அடிக்கடி ஏப்பம் வருதல், சில நேரங்களில் வயிறு இரைந்து பேதி செல்லல் போன்றவைகள் ஏற்படலாம்.

    அதனால் முளைகட்டிய தானியங்களை லேசாக வேகவைத்து சாப்பிட்டால் ஒருவர் 50 கிராம் அளவு வரை சாப்பிடலாம்.குறிப்பாக முளை கட்டிய பயறு வகைகளை சாப்பிட காலை நேரம் உகந்தது. மாலை வேளையிலும் தேநீர் சாப்பிடும் நேரத்தில் உட்கொள்ளலாம்.
    பிளாஸ்டிக் மீதான தடை
    பிளாஸ்டிக் பொருட்களை மிகுதியாக பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. இதனால், இந்திய அரசு பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016-ல், தற்போது நடைமுறையில் உள்ள விதிகளை திருத்தியமைத்து, 50 மைக்ரான் தடிமனுக்குட்பட்ட பிளாஸ்டிக் கைப்பைகளை தேசிய அளவில் தடைசெய்து உத்தரவிட்டுள்ளது. எனினும், இத்தடையானது தேசிய அளவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. மேலும், ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் மட்டுமே பெருமளவு சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
    இதன் தீவிரத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு இதனை கடுமையாக கையாளும் விதமாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதித்து, 01.01.2019 முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
    இதற்குண்டான முன்னேற்பாடாக, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு 6 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டு 01.01.2019 முதல் பிளாஸ்டிக் மீதான தடை அமல்படுத்தப்படவுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி/மறுபயன்பாடு செய்வது மற்றும் நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களைப் பின்பற்றுதல் ஆகியவை பிளாஸ்டிக் ஒழிப்பிற்கான ஒரு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     Shri Nehru Maha Vidyalaya College of Arts and Science conducted its 26th Graduation day. R.Nandhagopal, Director, Xavier Institute of Management and Entrepreneurship, Kochi was the Chief Guest for the occasion while the Guest of Honor was Kailash Kumar Jain, Partner, Meethalal Jain & Co, Auditors, Coimbatore.


    Bharathkumar Jaghamani, Secretary of the College, welcomed the gathering. B.Balchand, Past President, M.M.Bhauradia, Former Vice-President and Governing Council Member of Coimbatore Welfare Association, graced the occasion with their august presence.

     The Academic Procession was headed by B.Subramani, Principal SNMV college. The Chief Guest delivered the Graduation day address and presented Gold and Silver medals to the University Rank Holders. Degrees were conferred upon 414 graduates by the Chief Guest.


    உரம் செய்ய விரும்பு ! 

    உங்கள் வீட்டில் சேரும் மக்கும் குப்பைகளை ( kitchen waste) வைத்து உரம் தயாரித்து 8190000400 என்ற எண்ணிற்கு அனுப்பி ,பரிசு பெருங்கள் !



    Coimbatore: Bharathiar University is conducting a placement drive for the final year students of its university and affiliated colleges.


    According to the release from the University, December 11 to 13 has been scheduled for Cognizant IT & BPS wing. Nandha Arts and Science College, Erode, Hindustan College of Arts and Science, Coimbatore and Sri Krishna College of Arts and Science, Coimbatore will serve as nodal centres. Online tests will be held on December 11 and final interview on December 12 and 13, with appointment letters issued on the same day. 

    For placement in Infosys IT, the drive is scheduled from December 13 to 15. Kongu College of Arts and Science, Erode, Dr. NGP Arts and Science College Coimbatore and Sri Krishna College of Arts and Science will serve as nodal centres. Online tests will be conducted on the first day, followed by a final interview and appointment letters issued on the same day.

    The release from the University further stated that December 18 to 20 has been scheduled for the Infosys BPM placement drive at the Hindustan College of Arts and Science, Coimbatore and Kongu College of Arts and Science, Erode.

    Those interested can contact Prof. Dr. A Vimala, Head, and Dr. C Dhayanand, Department Placement Coordinator, Extension and Career Guidance, Bharathiar University, Coimbatore-641 046 on 0422-2424600, 2428237/ 239.


    A call-to-action text Contact us