பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகன எண்ணிக்கைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சாலை விபத்துகளும் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக இப்படி நடைபெறும் விபத்துக்களால் இறப்பவர்கள் சாலை விதிகளை மதிக்காததே காரணம் என ஆய்வுகளில் தெரிய வருகிறது.ஆகவே சாலை விதிகளை மதித்து தங்கள் உயிரையும் உடமையையும் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தபட்டு வருகிறது.
இந்தநிலையில் கோவை பந்தய சாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து காவலராக பணிபுரியும் மகேஸ்வரன் சாலை விதிகளை மதிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'மதிக்கனும் மதிக்கனும்'என்ற பாடலை தயாரித்து உள்ளார். இந்த பாடலை கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் சுமித் சரண் ஐ பி எஸ்,போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித் குமார் ஐஎஸ்.மற்றும் சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் டாக்டர். பாலாஜி சரவணன் ஆகியோர் வெளியிட்டனர்