காக்கி சட்டைக்குள்ளும் ஈரம் உண்டு என்பதை மெய்ப்பிக்கும் வகையில், குடும்ப சூழ்நிலை குறித்து புலம்பிய வாகன ஓட்டிக்கு, போலீசார் தங்கள் சொந்த பணத்தில் இன்சூரன்ஸ் எடுத்து கொடுத்தனர்.
கோவை, சிங்காநல்லுார் போக்குவரத்து எஸ்.ஐ., முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை திருச்சி ரோடு, சாந்தி கியர்ஸ் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபரை நிறுத்தி, ஆவணங்களை ஆய்வு செய்தனர். இதில், வாகனத்துக்கான இன்சூரன்ஸ் காலாவதியானது தெரிந்தது.விசாரித்தபோது, பைக்கில் வந்தது கடலுாரை சேர்ந்த சரவணன், 33, என்பதும், மூணாறு பகுதியை சேர்ந்த சுதா என்பவரை, காதலித்து திருமணம் செய்து, கோவை வந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
இரு வீட்டிலும் ஆதரவின்றி, கோவையில் கூலி வேலை செய்து வருவதாகவும், மனைவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு இடங்களில் கடன் வாங்கி, மருத்துவம் செய்து வருவதாகவும் கூறி அழுதுள்ளார். அவரது வீட்டுக்கு சென்ற போலீசார், மருத்துவ செலவுக்கு, ரூ.3.50 லட்சம் வரை செலவானதை உறுப்படுத்தினர். தொடர்ந்து தங்கள் சொந்த பணத்தில், சரவணனின் வாகனத்துக்கான ஒரு வருட இன்சூரன்சை நேற்று புதுப்பித்து கொடுத்தனர்.
ஒரு புதிய ஹெல்மெட்டையும் வாங்கி கொடுத்தனர்.மனம் நெகிழ்ந்து போன தொழிலாளி, கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அறிவுரைப்படி, வாகன ஓட்டிகள், பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து வருகிறோம். இதனால், அவர்களும் தங்கள் சிரமங்களை பகிர்ந்து கொள்கின்றனர். இதன்மூலம் பொதுமக்கள்-போலீஸ் நல்லுறவு மேம்படும்' என்றனர்