• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES


    சொந்தமாக ஒரு வீடு கட்டி நிம்மதியாக இருக்கவேண்டும் என்கிற நோக்கில் வீட்டு மனை வாங்குகிறவர்கள் ஒருபக்கமிருக்க, முதலீட்டு நோக்கிலும் சிலர் வீட்டுமனை வாங்கவே செய்கிறார்கள். இப்படி மனை வாங்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் ரியல் எஸ்டேட் துறையில் அனுபவம் வாய்ந்த VISHWA DEVELOPERS நிறுவனத்தின் மேலாளர் திரு.ராஜேந்திரன்
    ''வீட்டுமனை விற்பதில் மாநில அரசு பல புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது. இந்த விதிமுறைகளின்படி இருந்தால் மட்டும்தான் மனைகள் விற்பனைக்கு அரசு அனுமதியே தருகிறது. என்னதான் விதிமுறைகள் அதிகம் கொண்டு வரப்பட்டாலும் நாமும் அந்த விதிமுறைகள் அனைத்தும் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை எல்லாம் கவனிப்பது அவசியம்.
    முதலில், எந்தத் தேவைக்காக மனை வாங்குகிறீர்கள் என்பதைத் தெளிவாகத் திட்டமிடுங்கள். அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மனை இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். ஏனெனில், விலை ஏறும் என நினைத்து முதலீட்டு நோக்கத்தில் வாங்கும் மனையின் விலை உயராமல் இருப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. எனவே, நீங்கள் வாங்கும் வீட்டு மனை எதிர்காலத்தில் விலை ஏறுவதற்கான வாய்ப்புள்ளதா இல்லையா என்பதை விசாரித்து தெரிந்துகொண்ட பிறகு வாங்குவது நல்லது. குறிப்பாக, சாலை வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கவனிப்பது அவசியம்.

    உள்ளூர், வெளியூர் என எந்த இடத்தில் மனை வாங்கினாலும் அந்த மனைக்கு சட்டப்படியான அப்ரூவல் உள்ளதா என்பதை ஆவணங்கள் மூலம் சரி பார்ப்பது அவசியம். சந்தேகம் ஏற்பட்டால் அப்ரூவல் தந்த அலுவலகத்திற்கே நேரடியாகச் சென்று விசாரிக்கலாம்.
    அக்கம்பக்கம் உள்ளவர்கள், ஏஜென்ட்கள், புரோக்கர்கள், விளம்பரங்கள் சொல்வதை மட்டுமே நம்பி மனை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இதில் பல பொய்யாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. மனைக்கு நீங்கள் தரும் விலை சரிதானா என்பதையும் ஆராய்ந்து பார்ப்பது அவசியம்.
    மனையை நேரில் சென்றுபார்த்த பிறகு வாங்குவது நல்லது. லேஅவுட் போட்ட இடத்தில் மனை வாங்கும் போது அதில் பூங்கா, சாலை, பொது இடம் என அனைத்தும் சரியாக ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும் கவனிப்பது அவசியம்.
    மனை வாங்கி உடனடியாக அதில் குடியேற நினைத்தால், அந்த இடத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளதா என்பதைக் கவனிப்பது முக்கியம். நீங்கள் மனை வாங்கும் பகுதியில் பள்ளிக்கூடம், மருத்துவமனை, கடைகள், மின்சார வசதி, கழிவு நீர் அகற்றும் வசதிகள் இருக்கும் மனைகளைத் தேர்வு செய்வது நல்லது. முதலீட்டு நோக்கில் வாங்கும்போதும் இந்த விஷயங்களைக் கவனிப்பது முக்கியம். அடிப்படை வசதிகள் இருந்தால்தான் அந்த இடத்தைப் பிற்காலத்தில் எளிதில் விற்க முடியும். இந்த வசதிகள் இல்லாத இடத்தை வாங்காமல் இருப்பது நல்லது'' என்றார் ராஜேந்திரன்.
    மனை வாங்கும்முன் நின்று நிதானித்து வாங்கினால் நிச்சயம் லாபம்தான்..!
    A call-to-action text Contact us