• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக்களுக்கு தடை! 



    🎈 ஜனவரி 1ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட உள்ளது.

    📌 பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் டீ கப், தண்ணீர் கப், தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி, மேசை விரிப்புக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் விரிப்பான், பிளாஸ்டிக் ஒட்டும் தாள் உட்பட 14 வகையான சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய பொருட்களை பயன்படுத்தக்கூடாது. மீறினால், 5 ஆண்டு சிறை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கவும் தொடர்ந்து சட்டத்தை மீறினால் நாள் ஒன்றுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் சட்டம் வழிவகை செய்கிறது.

    பிளாஸ்டிக் - பிரச்சனைகள் என்ன?

    🐂 நாம் பயன்படுத்தி விட்டு கீழே போடும் பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடும் கால்நடைகள் இறக்கின்றன. பிளாஸ்டிக்கை எரிக்கும்போது ஏற்படும் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. 

    🍲 கொதிக்கும் சாம்பாரையும், குருமாவையும் பிளாஸ்டிக் பையில் வைத்து சாப்பிடுகிறோம்.

    ☕ கைதாங்க முடியாத சூட்டுடன் காபியையும், டீயையும் கூட பிளாஸ்டிக் கப்பில் குடிக்கிறோம். 

    🍕 வடை, பஜ்ஜி, போண்டா சுட்டு விற்பவர்கள் சட்டியில் கொதிக்கும் எண்ணெய்யின் அளவு குறைந்துவிட்டால் இடது கையால் புதிய எண்ணெய் பொட்டலத்தை எடுத்து அதன் ஒரு முனையைக் கொதிக்கும் எண்ணெய்யில் நனைத்து அந்த சூட்டில் எண்ணெய் பொட்டலத்தின் முனை கருகி கொட்டும் எண்ணையில் செய்த பஜ்ஜியை ருசித்து சாப்பிடுகிறோம்.

    🍃 வாழை இலைகளுக்குப் பதில் வெள்ளை நிற பிளாஸ்டிக்கை இலையாக வைத்து, அட இன்னும் கொஞ்சம் பேஷனாக பச்சை நிறத்தில், வாழை இலையைப் போல் பச்சை நிற பிளாஸ்டிக் இலையில் நாம் உண்கிறோம்.

    இதுவரை நாம் ரசித்து ருசித்தது உணவை அல்ல. புற்றுநோயை!

    😟 பிளாஸ்டிக் பைகளில், கோப்பைகளில் சூடான உணவுப் பொருளை வைத்து சாப்பிட்டால், உணவோடு நச்சு ரசாயனங்கள் நம் உடலில் கலந்து புற்றுநோய் நிச்சயம் வரும்.

    இனியும் தேவையா பிளாஸ்டிக்? - அரசுக்கு நாம் கொடுக்க வேண்டிய ஒத்துழைப்புத்தான் என்ன?

    👜 மளிகை கடைக்குச் செல்வோர் துணிப்பையையோ, கூடையையோ தயங்காமல் எடுத்துச்செல்லுங்கள். உங்களை ஏளனமாக பார்ப்பவர்களை நீங்கள் இன்னும் ஏளனமாக பார்த்து சிரித்துச் செல்லுங்கள். அவர்கள் புற்றுநோயை பிளாஸ்டிக் வடிவில் கையில் வைத்திருப்பவர்கள்!. 

    🍵 ஹோட்டல்களில் உணவை பார்சல் செய்வதற்கு வீட்டிலிருந்தே அலுமினிய டிபன் கேரியர்களை எடுத்துச்செல்லுங்கள். பார்சலுக்கு மாற்றாக பாத்திரத்தை பயன்படுத்துங்கள்!

    🎉 விலை குறைவு, எடை குறைவு, உலோகத்துக்கு இணையான வலிமை என்று பிளாஸ்டிக்கை ஆதரித்து வீரவசனங்கள் பேசாமல் வீட்டு விசேஷங்களில் பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்த்திடுங்கள்!

    😳 நாம் இதுவரை பயன்படுத்திய பிளாஸ்டிக் மக்குவதற்கு சுமார் 400 முதல் 1,000 ஆண்டுகள் ஆகுமாம். இதற்கு மேலும் அலட்சியமாக பயன்படுத்தினால் டைனோசர் அழிந்தது போல அடுத்த சில நூற்றாண்டுகளில் மனித இனம் முழுமையாக அழிவது உறுதி. நமக்கோ நம் வருங்கால சந்ததியினருக்கோ புற்றுநோய் வருவதும் உறுதி!
    AD

    🙏 புதுமை, சௌகரியம், அழகு, விளம்பரம் போன்ற காரணங்களால் பிளாஸ்டிக் பை நம் வாழ்வில் ஊடுருவியது. இப்போது முற்றிலும் ஆக்கிரமித்துவிட்டது. பிளாஸ்டிக் ஒழிப்பின் முதல் படியாக, முதலில் நம் மனதிலிருந்து பிளாஸ்டிக்கை அகற்றுவோம். 

    பிளாஸ்டிக் தடை சாபமல்ல.. வரம்..! மாற்று நடைமுறைக்கு மாற வேண்டிய நேரம் இது!...

    A call-to-action text Contact us