• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES


    மே-2022-ல் நடைபெற்ற 2021-2022-ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாமாண்டு(+2) மற்றும் பத்தாம் வகுப்பு-S.S,.L.C பொதுத்தேர்வு முடிவுகள்  மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 20.06.2022 (திங்கட்கிழமை) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படப்படவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்  நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

    வகுப்பு தேர்வு முடிவு வெளியடப்படும் நாள் மற்றும் நேரம் இணைய தள முகவரி
    மேல்நிலை இரண்டாமாண்டு (+2) 20.06.2022
    (திங்கட்கிழமை)
    காலை  9.30  மணிக்கு www.tnresults.nic.in
    www.dge1.tn.nic.in
    www.dge2.tn.nic.in
    www.dge.tn.gov.in

    பத்தாம் வகுப்பு
    (S.S.L.C) 20.06.2022
    (திங்கட்கிழமை)
    நண்பகல்  12.00  மணிக்கு

    தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
    பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் ,  தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
    A call-to-action text Contact us