• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    #கோவை மாநகர போக்குவரத்து சிக்னலில் பாதசாரிகளுக்கு தனி சிக்னல் மற்றும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.



    கோவை மாநகர காவல் ஆணையர் திரு . V. பாலகிருஷ்ணன் IPS . , அவர்கள் உத்தரவின் பேரில் , கோவை மாநகர எல்லைக்குட்பட்ட முக்கிய சாலைகளில் செயல்பட்டு வரும் தானியங்கி போக்குவரத்து சிக்னல்களில் பாதசாரிகள் நடப்பதற்கென தனிப்பட்ட முறையில் சிக்னல்கள் ஏதும் இல்லாமல் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு சிரமப்படும் நிலையை போக்கி முக்கிய சாலை சந்திப்பகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



    அதன் முன்னோடியாக லட்சுமி மில் சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னலில பாதசாரிகளும் கடந்து செல்வதற்கு ஏதுவாக Countdown சிக்னல் வசதி, பாதசாரிகள் சாலையை பாதுகாப்பான முறையில் கடந்து செல்ல மேம்படுத்தப்பட்ட Pedestrian Crossing Marking வசதி, போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு ஆடியோ ஒலிபரப்பு செய்யும் வசதி , பணியிலிருக்கும் போக்குவரத்து காவலர் ஒலிபெருக்கி மூலம் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் அறிவுறைகள் வழங்கும் வசதி , ஆகியவைகளை கோவை மாநகர காவல் ஆணையர் அவர்கள் இன்று 18,07.2022 - மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்.


    A call-to-action text Contact us