கியூட் தேர்வு
எழுத 10 லட்சம் பேர் ஆர்வம்!
நாடு முழுவதும் உள்ள மத்திய
பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற அவசியம்
எழுத வேண்டிய நுழைவுத்தேர்வான கியூட் - சி.யூ.இ.டி., எனும்
பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு எழுத ஆர்வம் தெரிவித்து, சுமார் 10 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
மொத்தம் 45 மத்திய பல்கலைக்
கழகங்களுக்கான சேர்க்கை இந்த நுழைவுத்தேர்வு அடிப்படையிலேயே நடைபெறும் என்றும், 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அவசியம் இல்லை என்றும் கடந்த மார்ச் மாதம் யு.ஜி.சி., - பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜெகதேஷ் குமார் அறிவித்திருந்த நிலையில், இத்தேர்வுக்கு 10 லட்சம் மாணவர்கள் பதிவு செய்தும், 7.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தும் உள்ளனர்.
சி.யூ.இ.டி., தேர்வுக்கு
பதிவு செய்வதற்கான கடைசி தேதி மே 22.