• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    CUET EXAM சி.யு.இ.டி. 

     


    நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய அளவிலான பொது நுழைவுத்தேர்வு, காமன் யுனிவர்சிட்டி என்ட்ரன்ஸ் டெஸ்ட்- சி.யு.இ.டி.

     

    இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு தனித்தனியாக இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்திய அரசின் சார்பில், மத்திய கல்வி அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய தேர்வு முகமை - என்.டி.ஏ., இத்தேர்வை நடத்துகிறது. தற்போது இளநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    பங்குபெறும் பல்கலைக்கழகங்கள்:

    அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், அசாம் பல்கலைக்கழகம், பாபாசாகெப் பீமாராவ் பல்கலைக்கழகம், பனாராஸ் ஹிந்து பல்கலைக்கழகம், ஆந்திர பிரதேசம் மத்திய பல்கலைக்கழகம், தெற்கு பிஹார் மத்திய பல்கலைக்கழகம், குஜராத் மத்திய பல்கலைக்கழகம், ஹரியானா மத்திய பல்கலைக்கழகம், ஹிமாச்சல் பிரதேசம் மத்திய பல்கலைக்கழகம், ஜம்மு மத்திய பல்கலைக்கழகம், ஜார்கண்ட் மத்திய பல்கலைக்கழகம், கர்நாடகா மத்திய பல்கலைக்கழகம், காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகம், கேரளா மத்திய பல்கலைக்கழகம், ஒடிசா மத்திய பல்கலைக்கழகம், பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகம், ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகம், திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், டாக்டர் ஹரிசிங் கவுர் விஸ்வ வித்யாலாயா, குரு காஷிதாஸ் விஸ்வவித்யாலாயா, ஹேம்வதி நந்தன் பகுகுனா கார்வால் பல்கலைக்கழகம், இந்திரா காந்தி நேஷனல் டிரைபல் பல்கலைக்கழகம், ஜாமியா மில்லா இஸ்லாமியா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உட்பட ஏராளமான பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளநிலை பட்டப்படிப்புகள்.

     

    தேர்வு விபரம்:

    மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளநிலை மற்றும் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, இத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்படுகிறது. கம்ப்யூட்டர் வாயிலாக நடைபெற உள்ள இத்தேர்வில் மல்டிபில் சாய்ஸ்வடிவில் கேள்விகள் இடம்பெறும். ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமீஸ், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் கேள்விகள் இடம்பெறும். 

     

    தேர்வு மையங்கள்: 

    நாட்டில் மொத்தம் 547 நகரங்களிலும், 13 வெளிநாடுகளிலும் தேர்வு மையம் அமைக்கப்படுகிறது.

     

    தேர்வு நாட்கள்: ஜூலை முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் நடத்தப்பட உள்ளது.

     

    தேர்வு நேரம்: காலையில் 195 நிமிடங்கள், மாலையில் 225 நிமிடங்கள் என இரண்டு பிரிவுகளில் தேர்வு நடைபெறுகிறது. முதல் பிரிவு காலை 9 மணி முதல் 12:15 மணிவரையிலும், மாலை 3 மணி முதல் 6:45 மணிவரையிலும் தேர்வு நடைபெறுகிறது. 

     

    விண்ணப்பிக்கும் முறை: https://cuet.samarth.ac.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

     

    விபரங்களுக்கு: 

    இணையதளங்கள்: https://www.nta.ac.in/ மற்றும் https://cuet.samarth.ac.in/

    தொலைபேசி: 011-40759000, 69227700

    இ-மெயில்: cuet-ug@nata.ac.in

     

    A call-to-action text Contact us