அனைவருக்கும் வேலை தரும் கல்வியை நாம் வழங்க வேண்டும் -முதல்வர் ஸ்டாலின்
கோவை பாரதியார் பல்கலை கழகத்தில் தமிழக முதல்வர் காணொளியின் உரை
தேசிய தமிழ்நாட்டில் பாரதியார் பல்கலைக்கழகம் முன்னோடியாக செயல்படுகிறது.
சமமான தரமான கல்வியை வலியுறுத்தி உலக நாடுகள் கோரிக்கை வைத்து வரும் சூழ்நிலையில் இந்த கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் 19 கல்வி நிலையங்கள் இந்திய அளவில் 100 இடங்களுக்குள் உள்ளது.
உயர் கல்வியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.
பெண்கள் சமூகத்திலும், பொருளாதரத்தில் முன்னேற முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.
பெண்களின் முன்னேற்றத்திற்கு தனி கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
உயர்கல்வி துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி செயல்பட்டு வருகிறது.
*அனைவருக்கும் வேலை தரும் கல்வியை நாம் வழங்க வேண்டும் என்பதை நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்*
*கல்வி மாநில அரசு பட்டியலுக்கு மாற்ற வேண்டும்
*மத்திய அரசு தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி பிற்போக்கு கருத்துகளை கல்வியில் புகுத்துகிறது - முதல்வர்*