கோவை இரத்தினம் கல்விக் குழுமமும், பொள்ளாச்சி அருண்
மருத்துவமனையும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்
கோவை இரத்தினம் கல்விக் குழுமமும், பொள்ளாச்சி அருண் மருத்துவமனையும் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி அருண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் துணை முதல்வர் முனைவர். கீதா அவர்கள் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர் டாக்டர். ஜெயக்குமார் அவர்கள் பேசுகையில் மாணவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் நடக்கும் பிரச்னைகளுக்கு கண்டறிந்து அதற்கு தங்கள் துறை சார்ந்த அறிவின் மூலம் தீர்வு காண வேண்டும் என்று கூறினார். பின்னர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் துறை சார்ந்த அறிவைப் பெருக்கிக் கொள்ள முடியும். மாணவர்கள் கல்லூரி பயிலும் போதே இண்டன்ஷிப், கல்லூரி படிப்பு முடிந்ததும் வேலை வாய்ப்பு பெற முடியும். இந்த நிகழ்ச்சிக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் உயிரி மருத்துவவியல் துறைத் தலைவர் பேராசிரியர். ச. அருள் ராஜ் அவர்கள் மற்றும் துறை பேராசிரியர்கள் அனைவரும் இணைந்து செய்திருந்தனர்.