தமிழகத்தில் நடப்பு ஆண்டில் மட்டும் மே மாதத்தில் இறுதித் தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வுகள்
நடைப்பெறாமல் இருந்தது. கடந்த ஆண்டு முழுவதும் பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புகளே
நடந்தன. தனியார் பள்ளிகளில் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டன.
கடந்த ஜனவரி மாதத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் படிப்படியாக குறையத்
தொடங்கியது. இதனால், தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் எடுக்க அனுமதிக்கப்பட்டன.
இதனால், தேர்வுகளும் நேரடியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வரும் மே மாதம் தேர்வு நடைப்பெறும்
எனவும், நடப்பு ஆண்டில் மட்டும் மே மாதத்தில் இறுதித் தேர்வு நடைபெறும் எனவும் பள்ளிக்
கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.