தமிழக சுகாதார துறையில் பார்மசிஸ்ட் பிரிவில் காலியிடங்களுக்கு, தமிழக மருத்துவ தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலியிடம்: பார்மசிஸ்ட் பிரிவில் ஓமியோபதி 3, யுனானி 2, ஆயுர்வேதா 6, சித்தா 73 என மொத்தம் 84 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: இந்திய மருத்துவ முறையில் டிப்ளமோ, தொடர்புடைய துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2022 அடிப்படையில் 18 - 59 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: கல்வித்தகுதி மதிப்பெண். டிப்ளமோ படிப்புக்கு 50%, பிளஸ் 2 படிப்புக்கு 30%, எஸ்.எல்.சி., படிப்புக்கு 20% வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 300.
கடைசிநாள் : 17.3.2022
விபரங்களுக்கு: http://mrbonline.in/