இந்திய முதுநிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி மற்றும் டாக்டோரல் படிப்பு மாணவர்களுக்கு கொரியா உதவித்தொகை - 2022
கொரியா நாட்டின் கல்வித் துறை அமைச்சகம்
வழங்கும் குளோபல் கொரியா ஸ்காலர்ஷிப் - 2022 திட்டத்தில்
இந்திய மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும்
மாணவர்கள் கொரியாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் இன்டர்நேஷனல் எஜுகேஷன்
(என்.ஐ.ஐ.இ.டி.,) நிறுவனத்தால் இணைக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு
கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அல்லது ஆராய்ச்சி மேற்கொள்ளலாம்.
உதவித்தொகையின் மொத்த எண்ணிக்கை: 23. முதுநிலை
பட்டப்படிப்பு மற்றும் டாக்டோரல் படிப்புகளுக்கு 22 மாணவர்களும், ஆராய்ச்சி படிப்பிற்கு ஒருவரும் தேர்வு செய்யப்படுவர்.
இந்திய அரசால் பரிந்துரைக்கப்படும்
மாணவர்களின் எண்ணிக்கை: 46. முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் டாக்டோரல் படிப்புகளுக்கு 44 மாணவர்களும், ஆராய்ச்சி படிப்பிற்கு இருவரும் பரிந்துரை
செய்யப்படுவர். இவர்களில் தகுதியான 23 பேரை கொரிய அரசு
தேர்வு செய்யும்.
படிப்பு நிலைகள்: முதுநிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி மற்றும் டாக்டோரல் படிப்பு.
வயது வரம்பு: செப்டம்பர் 1ம் தேதியின் படி, 40 வயதிற்குள் இருக்க வேண்டும். பேராசிரியராக பணிபுரிபவர்கள் 45 வயதிற்கள் இருக்கலாம்.
கல்வி தகுதிகள்: முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு, இளநிலை பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். ஆராய்ச்சி படிப்புகளுக்கு, முதுநிலை
பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உரிய கல்வித்தகுதியை ஆகஸ்ட் 31,
2022ம் தேதிக்குள்
பெற வேண்டும்.
உதவித்தொகை சலுகைகள்: விமானக் கட்டணம், மாத உதவித்தொகை, ஆராய்ச்சி கட்டணம், தங்குமிடம், மருத்துவ
காப்பீடு உட்பட பல்வேறு சலுகைகள் உண்டு.
விண்ணப்பித்தல்: தகுதியானவர்கள் எனும் http://proposal.sakshat.ac.in/scholarship/ இணையதளம் வாயிலாக தேவையான ஆவணங்களுடன்
விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 9
விபரங்களுக்கு: https://www.education.gov.in/en