மரைன் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அரசு மற்றும் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள்
மரைன் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அரசு மற்றும் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன.
கடலில் இயங்கும்
பொருட்களை வடிவமைப்பது, பயன்படுத்துவது தொடர்பான படிப்பு தான்,
ஓஷன்
இன்ஜினியரிங். படகு, கப்பல், நீர்மூழ்கி வடிவமைப்பில் இவர்கள் முக்கிய
பங்காற்றுகின்றனர். மரைன்/ஓஷன் இன்ஜினியரிங் - பி.டெக்.,
படிப்பில் கடல்
சார்ந்த அறிவியல் மற்றும் வடிவமைப்பு குறித்தும் கற்றுத் தரப்படுகிறது.
தெர்மோ
டைனமிக்ஸ், புளூயிட் மெக்கானிக்ஸ், எலக்ட்ரிக்கல் சர்க்யூட் பற்றியும்
கற்றுத் தரப்படுகிறது.டேட்டா அனாலிசிஸ், ஓஷன் இன்ஸ்ட்ரூமென்டேஷன், அண்டர் வாட்டர் அக்குஸ்டிக்ஸ்,
மரைன் ஹைட்ரோ
டைனமிக்ஸ், ஓஷனோகிராபி, மரைன் ஜியோ மெக்கானிக்ஸ் போன்ற பாடங்கள் நடத்தப்படுகின்றன.
துறைமுகங்கள்
வடிவமைக்கவும், கடலில் கட்டுமானங்கள் அமைக்கவும் ஓஷன் இன்ஜினியரிங்
படித்திருக்க வேண்டியது அவசியம். கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்,
கார்ப்பரேட்
நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன. கடல் அரிப்பு,
கடற்கரை எண்ணெய்
வளம், சுற்றுச்சூழல்
பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சி பணிகளிலும் ஈடுபடலாம்.மரைன் இன்ஜினியரிங் - பி.இ.,பயணிகளுக்கான கப்பல்கள்,
சரக்குகளை ஏற்றி
செல்லும் கப்பல்கள் இயக்கம் குறித்த பல்வேறு பயிற்சிகளை உள்ளடக்கியது தான் மரைன்
இன்ஜினியரிங் படிப்பு.
கப்பலில்
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சார்ந்த பல்வேறு சாதனங்களை இயக்கவும் பழுது
பார்க்கவும் கற்றுத்தரப்படும். இப்பாடப்பிரிவு மாணவர்களுக்குக் கப்பலில் நேர்முகப்
பயிற்சியும் அளிக்கப்படும். இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான
உடல் தகுதியும், உரிய பார்வை திறனும் இருக்க வேண்டும். இது நான்கு ஆண்டுப்
படிப்பாகும். இதே துறையில், முதுநிலைப் படிப்புகளை படிக்க வாய்ப்புகள் உள்ளன.
-வி.விஸ்வபாரதி, கல்வி ஆலோசகர்.