கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் ஒன்றியம், பட்டணம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினமான இன்று தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம்,
சூலூர் பட்டணம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
ஊராட்சி மன்ற தலைவர் திருமதி கோமதி செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது.
அதில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர்
மோகன்ராஜ் அவர்களும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் ஒன்றிய குழு உறுப்பினர் ரகு
அவர்களும் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்