கோவை,
அக்-2, கோயம்புத்தூர்
மாவட்டம், சூலூர் பாப்பம்பட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர், தெருவிளக்கு வசதி செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினமான இன்று தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம், சூலூர் தொகுதிக்குட்பட்ட சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் பாப்பம்பட்டி ஊராட்சி பகுதியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி தலைமையில்,
சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் மனோகரன் முன்னிலையில்
நடைபெற்றது.
கூட்டத்தில் பாப்பம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராம மக்கள் சமூக இடைவெளியிடனும், முக கவசம் அணிந்தும் கலந்து கொண்டனர்.
இந்த கிராம சபை கூட்டத்தில் மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், தெருவிளக்கு,
குடிநீர் வசதிகள் குறித்தும் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து இக்கிராம சபை கூட்டத்தின் தீர்மானமாக வரன்முறைபடுத்தப்பட்ட வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்பு அளித்தல், தெருவிளக்கு வசதி அமைத்தல்,
அத்திகடவு குடிநீர் அதிகரிக்க ஆவண செய்தல், கூடுதலாக
தூய்மை காவலர்கள் நியமித்தல், சிதிலமடைந்த சமுதாய கூடத்தை
அகற்றி புதிய சமுதாய கூடம் அமைத்தல், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை
அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துதல் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் ஒன்றிய ஊராட்சி பற்றாளர்
வெள்ளிங்கிரி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாரணி ஸ்ரீதர், பள்ளி ஆசிரியர்கள்,
நியாய விலைக்கடை ஊழியர்கள், கிராம நிர்வாக
அலுவலர், காவல்துறை
அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள் பூர்ணிமா கோபாலகிருஷ்ணன், மகேஸ்வரி
மருதாசலம், சுரேஸ்குமார், ராமாத்தாள் பரமசிவம்,
சித்ரா செல்வராஜ், கார்த்திக், ராஜன், தேவராஜ், இதர துறை அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான
இளைஞர்கள்
உள்ளிட்ட பொதுமக்கள் இருநூறுக்கும் மேற்பட்டோர் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.