அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினமான இன்று தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம், சூலூர் ஒன்றியம் ராசிபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கிராம சபை கூட்டம் ஆனது தலைவர் திருமதி. கவிதா தலைமை தாங்கினார். கூட்டத்தில் திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு. தளபதி முருகேசன், ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி. தமிழரசி, ராசிபாளையம் ஊராட்சி துணைத்தலைவர் மல்லிகா அங்கமுத்து, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் மாதப்பூர் தங்கராஜ் ,மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் திரு. பசுபதி, சூலூர் தெற்கு ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் சிபி.K. செந்தில்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு குடிதண்ணீர் பிரச்சனை, சாலை வசதி,தடுப்பூசி போடுதல் போன்ற அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டது