• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    அஜீரணம் ஏற்பட காரணம் தீர்வுகள்

    அஜீரணம் என்பது குழந்தை முதல் முதியோர் வரை அனைவருக்கும் உண்டாகின்ற ஒரு முக்கியமான வயிற்றுத் தொல்லை. நாம் சாப்பிடும் உணவு வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் ஆகிய நான்கு இடங்களில் செரிமானமாகிறது. உணவு செரிமானமாவதற்குச் செரிமானப் பாதையில் உற்பத்தியாகின்ற என்சைம்கள் அடங்கிய செரிமான நீர்கள், ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஹார்மோன்கள் போன்றவை உதவுகின்றன. ஓர் ஆரோக்கியமான நபருக்கு இந்தச் செரிமான நீர்களும் என்சைம்களும் குறிப்பிட்ட நேரத்தில் தேவையான அளவிற்குத் தேவையான இடத்தில் சுரந்து செரிமானம்’ எனும் அற்புதப் பணியைச் சரியாகச் செய்து முடிக்கின்றன. 

    அஜீரணம் என்பது என்ன?

    சில அசாதாரணமான நேரங்களில் செரிமானப் பாதையில் உண்டாகின்ற குறைபாடுகளால் அல்லது நோய் நிலைகளால் இந்தச் செரிமான நீர்கள் சுரப்பதில் தவறுகள் நேரலாம். அப்போது செரிமானப் பணிகளில் இயல்புநிலை மாறிவிடும். இதனால் இந்த வேதிப்பணிகளில் மாறுபாடுகள் தோன்றும். இதன் விளைவாக செரிமானம் தடைபடும். இதையே அஜீரணம் என்றும் செரிமானமின்மை (Indigestion) என்று பெயர். 

    முக்கிய எச்சரிக்கை..

    அஜீரணத்தை அலட்சியம் செய்யக் கூடாது. ஆரம்பநிலையிலேயே அதற்குத் தகுந்த சிகிச்சையைப் பெற்று விட வேண்டும். ஏனென்றால் இது பல நேரங்களில் வயிற்றில் உள்ள உள்ளுறுப்பு நோய்களின் ஆரம்ப நோய்க்காட்டியாகத் தோன்றும். 

    அறிகுறிகள்

    நமக்கு அஜீரணமிருந்தால்  அடையாளம் கண்டு கொள்வது எளிது. உணவு உண்டபின் வயிற்றில் ஏற்படும் சுகமின்மை, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், குமட்டல், வாந்தி, வயிறு உப்புசம், வயிற்றில் இரைச்சல். 

    பசிக்குறைவு, வாய் வழியாகவும் ஆசனவாய் வழியாகவும் அடிக்கடி வாயு பிரிதல், பேதி அல்லது மலச்சிக்கல், வாயில் அதிகமாக உமிழ்நீர் சுரத்தல், வாய்நாற்றம் போன்றவை அஜீரணத்தின் அறிகுறிகள்.  

    காரணங்கள்..

    • அதிக காரம், புளிப்பு, மசாலா நிறைந்த உணவுகளால் இரைப்பையின் சளிப்படலம் சிதைந்து, செரிமான நீர்கள் சுரப்பது தடைபடும். இது அஜீரணத்திற்கு வழி அமைக்கும். 

    • அளவுக்கு மீறிய ஊறுகாய், மிளகாய், வற்றல் போன்றவற்றைச் சாப்பிடுபவர்களுக்கு அஜீரணம் உண்டாகும். 

    • விருந்து மற்றும் விழாக்கால நேரங்களில் அளவுக்கு அதிகமாக உணவு உண்பது. 

    • எண்ணெயில் வறுத்த மீன், இறைச்சி போன்ற அசைவ உணவுகள் மற்றும் அப்பளம், வடை, இனிப்புப் பண்டங்கள், நெய், வெண்ணெய், டால்டா போன்றவற்றை விரும்பி உண்டால் இரைப்பையில் எண்ணெய் மட்டும் தனியாகப் பிரிந்து இரைப்பையின் மேற்பரப்பில் மிதக்கும். இதன் விளைவாக செரிமான நீர்கள் இரைப்பையில் இயல்பாகச் சுரப்பது தடைபடும். இது அஜீரணத்தை வரவேற்கும். 

    • அதிக அளவு காபி, தேநீர் சாப்பிடுவது, புகைபிடிப்பது, மது அருந்துவது, வெற்றிலை புகையிலை போடுவது, பான்மசாலா பயன்படுத்துவது, விரைவு உணவுகளை அடிக்கடி உண்பது, காற்றடைத்த மென்பானங்களை அளவின்றி குடிப்பது போன்றவையும் அஜீரணம் ஏற்பட காரணமாகலாம். 

    • நச்சுணவு தெருக்களில் தள்ளுவண்டிகளில் விற்கப்படும் ஈக்கள் மொய்க்கும் பண்டங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை உபயோகிப்பதற்கு முன்பு நன்றாகச் சுத்தம் செய்யத் தவறினால் அவற்றின் மூலம் நோய்க்கிருமிகள் குடலுக்குள் நுழைந்து நோய்த்தொற்றை உண்டாக்கும். அப்போது அந்த நோயின் துவக்க அறிகுறியாக அஜீரணம் தலைகாட்டும். 

    • மாசுபட்ட குடிநீரை பயன்படுத்தினாலும், உணவைச் சமைக்கும் போது சுத்தம் கடைப்பிடிக்கத் தவறினாலும், சமையல் பாத்திரங்களில் உலோகக் கலவை சரியில்லை என்றாலும் இதே நிலைமை ஏற்படும். 

    • அசுத்தமான சமையலறையில் சமைப்பது, கைவிரல் நகங்களில் அழுக்குடன் சமைப்பது, அடிக்கடி உடலைச் சொறிந்து கொண்டும் வியர்வையைத் துடைத்துக் கொண்டும் சமைப்பது, சுகாதாரம் குறைந்த அசுத்தமான உணவுவிடுதிகளில் தொடர்ந்து உணவு சாப்பிடுவது போன்றவற்றால் செரிமானப்பாதையில் நோய்த்தொற்று ஏற்பட்டு அஜீரணம் தோன்றும். 

    • குழந்தைக்கு பால் புட்டியை சரியாக சுத்தம் செய்யாமல் பால் புகட்டினால் குழந்தைக்கு அஜீரணம் ஏற்படும். 

    • கலப்பட உணவுகள் உணவு தயாரிக்கும் போது கலப்பட எண்ணெய் மற்றும் கலப்பட உணவுப் பொருட்களைப் பயன்படுத்துதல் அஜீரணத்தை வரவேற்கும். 

    • உணவைச் சரியான அளவில் வேகவைத்துச் சமைக்காவிட்டாலும் இதே நிலைமை ஏற்படும். 

    • வயதிற்கு மீறி சத்து மிகுந்த உணவு சாப்பிடுவதும், வயதிற்குத் தேவையான சத்து இல்லாத உணவு சாப்பிடுவதும், குறிப்பாக நார்ச்சத்து குறைந்த உணவுகளைச் சாப்பிடுவதும் அஜீரணத்திற்கு வழி அமைக்கும். 

    • நேரந்தவறிய உணவு அதிகாலையில் எழுந்து வெகுதூரம் பயணித்து வேலைக்குச் செல்பவர்கள், வியாபாரிகள், மருத்துவப் பிரதிநிதிகள் போன்றோர் பெரும்பாலும் சரியான நேரத்தில் உணவு உண்பதில்லை. இவர்கள் நேரம் தவறி உண்ணும்போது இவர்களுக்குக் குடலியக்கம் மாறுபடுகிறது. இதனால் அஜீரணம் ஏற்படுகிறது.
    A call-to-action text Contact us