தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் உலக பிசியோதெரபி தின விழா
கோவை ஹோப்ஸ் காலேஜிலுள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில் கோவை சிங்காநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.கார்த்திக் அவர்களுக்கும் சமூக விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவன தலைவர் வக்கீல் சாக்ரடீஸ் அவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சங்க மாநில செயலாளர் டாக்டர்.ராஜேஸ் கண்ணா வரவேற்புரை வழங்கினார்.
அப்போது அவர் உலக பிசியோதெரபி தினம் இந்த ஆண்டு நாள்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் பிசியோதெரபி மருத்துவம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனுசரிக்கப்படுகிறது எனவும் கொரோனாவிலிருந்து மீண்டு வர பிசியோதெரபி உதவும் எனவும் கூறினார்.
இதனை தொடர்ந்து சங்க மாநில தலைவர் டாக்டர்.ராஜா செல்வகுமார் வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசும் போது கொரோனா பெருந்தொற்றில் பிசியோதெரபி மருத்துவர்களின் பணி அளப்பரியது. எனென்றால் பிசியோதெரபி மருத்துவர்கள் பிற மருத்துவர்களை விட நோயாளிகளிடம் அதிக நேரம் மிக அருகில் சிகிச்சை அளிக்கும் சூழல் உண்டாகும் எனவே நோய் தொற்றும் அபாயம் மிக அதிகம். இருந்தபோதிலும் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் சிகிச்சை அளித்து உயிர்களை காத்த பிசியோதெரபி மருத்துவர்களுக்கு என் சிரம் தாழ்த்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் கூறியிருப்பதாவது: பிசியோதெரபி மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான தமிழக பிசியோதெரபி கவுன்சில் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வட்டார மருத்துவமனைகளில் பிசியோதெரபி பிரிவு தொடங்கப்பட வேண்டும் என்பதை ஏற்று அதனை திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்தோம். அதனை முதல்வரிடமும் சுகாதாரத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தி பெற்றுத்தர முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறேன். விரைவில் அதை நமது தமிழக முதல்வர் நிறைவேற்றி தருவார் என உறுதி அளிக்கிறேன் என்று கூறினார்.
சமூக விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் வக்கீல் சாக்ரடீஸ் பேசும் போது பிசியோதெரபி மருத்துவத்தின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்லவும் போலி பிசியோதெரபி மருத்துவர்கள் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்தவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் சமூக விழிப்புணர்வு இயக்கம் உறுதுணையாக இருக்கும் என கூறினார்.
இவ்விழாவில் சிறந்த பிசியோதெரபி மருத்துவர்களுக்கு விருதுகள் வழஙகப்பட்டது. தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக பிசியோதெரபி மருத்துவத்தை வழங்கி வரும் நெய்வேலியை சேர்ந்த டாக்டர்.தேவக்குமார் அவர்களுக்கு டாக்டர்.அப்துல்கலாம் நினைவு விருதும்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிசியோதெரபி மருத்துவ மாணவர்களுக்கு தொடர்ந்து இணைய வழியில் பிசியோதெரபி கல்வி கிடைக்க செய்ததுடன் கொரோனா குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் மாணவர்கள் மூலம் கொண்டு செல்ல முயற்சிகள் செய்த கோவை கே.ஜி பிசியோதெரபி மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர்.மனோஜ் ஆப்ரகாம் அவர்களுக்கு சிறந்த பிசியோதெரபி மாணவ ஊக்குவிப்பாளர் விருதும்