• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

     போர்த்தொழில் பழகு....



    போர் என்பது அவசியமில்லை என்றாலும் போர்க்குணம் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்பதற்கு வரலாற்றில் இருந்து எடுத்துக்காட்டுகளை அள்ளி வீசுகிறார் ஆசிரியர். அவற்றில் என்னைக்கவர்ந்த சில பகுதிகள் மட்டுமே இங்கே. 

    போர்கள் வேண்டாம் என்று வாய்வலிக்க கத்தினாலும் போரால் உலகம் முழுக்க எத்தனையோ நன்மைகள் எழுந்திருக்கின்றன. 

    அணுகுண்டு தாக்குதலில் இருந்து அணு யுத்தத்தில் இருந்து காக்க எழுந்தது தான் இணையமாக ஆனது. 

    ரோமானியர்கள் எங்கெங்கே எல்லாம் போர் செய்யப் போனார்களோ அங்கெல்லாம் சாலைகளை அமைத்தார்கள். 

    உலகப்போரில் தகவல்களை பரிமாறிக்கொள்ள செய்யப்பட்ட முதலீடு தான் ரேடாரை உருவாக்கியது. 

    ராணுவ வீரர்களை கணக்கெடுக்க ஆரம்பித்தது தான் மக்கள் தொகை கணக்கெடுப்பாக விரிந்தது.

    பீரங்கியின் புதிய கோட்பாடு நூல் தந்த ஊக்கம் தான் நிலவை நோக்கிய விண்வெளி பயணத்தை சாத்தியப்படுத்தியது. 

    ஆயுதம் செய்ய ஊக்குவிக்கப்பட்ட அமோனியா உற்பத்தி உரத்தயாரிப்பு, குளிர்சாதன பெட்டி, சலவை சோப்பு என எங்கெங்கோ போனது. 

    விமானம் அதிவேக வளர்ச்சி அடைந்ததும் போருக்கான உந்துதலில் தான். போர்க்கள மரணங்கள் தான் ரத்தபிரிவை கண்டுபிடிப்பதை சாத்தியமாக்கியது. 

    கணினி என்கிற கனவின் தொடக்கம் நெப்போலியனின் படையெடுப்பால் இங்கிலாந்துஅரசு கொடுத்த நிதியால் துவங்கியது. ..

    கிஷ் நாட்டின் மீது படையெடுத்த தைமூர் இருநூறு பேர் கொண்ட சிருபடையை மரக்கிளைகளை ஏந்திக்கொண்டு போய் புழுதியை கிளப்பிவிட்டு நிறைய பேர் இருக்கிற மாதிரியான தோற்றத்தை உண்டு செய்து போரில் வென்றிருக்கிறான். 


    மூன்றாம் நெப்போலியனை படுக்கையிலேயே மூழ்க செய்து தனி இத்தாலி என்கிற கனவை சாதித்தார் விக்டர் இம்மானுவேல். 


    பானிபட் யுத்தத்தில் கண்ணை துளைத்த அம்பையும்,கண்ணையும் பிடுங்கி எறிந்து விட்டு போரிட்டான் ஹேமு. 


    ரோமானியர்களுக்கு பெருஞ்சவாலாக இருந்த ஹானிபால் ஒரு கண்ணை கிருமி தாக்கியது அடுத்த கண்ணுக்கும் அது பரவலாம் என்று அறிந்ததும் கண்ணை நொண்டி கூலாக எடுத்துவைத்து விட்டான் !

     

    ஒரு லட்சம் படைவீரர்கள் கொண்டிருந்த லோடியின் படையை எட்டாயிரம் வீரர்களை கொண்டு பாபர் வென்றார். காரணம்,பீரங்கிப்படை !


     ஆழ்குழி வெட்டி போர் செய்யும் முறையை ஷெர்ஷா கொண்டு வந்தார். பாலைவனங்களில் அது எடுபடாத பொழுது அவரின் பேரன் கோணிப்பைகளில் மணல் நிரப்பி போரிட வைத்து ஜெயித்தான். 


    தற்காப்பு போரில் மட்டுமே ஈடுபட்டுக்கொண்டு இருந்த சீனா மூவாயிரம் போர்க்கலை நூல்களை உலகுக்கு தந்திருக்கிறது.

     எங்கேயும் எதிராளியை முதலில் தாக்கு என்று சொல்லவில்லை இந்த நூல்கள். அந்த போக்கை மாற்றி முதலில் அடி,முரட்டு அடி என்கிற ஆக்ரோஷ மனோபாவத்தை விதைத்தவர் மாவோ ! 

     முப்பத்தி மூன்று  கப்பல்களைக்கொண்டு இருந்த பிரெஞ்சு படையை 

    இருபத்தி ஏழு கப்பல்களை கொண்டு பதினைந்து பன்னிரண்டு என்று பிரித்து முன்பக்கம்,பின்பக்கம் என்று தாக்கி முழு நிர்மூலம் செய்தார் நெல்சன் ! 


    முகமது அலி தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பொழுதில் அடித்து ஆடி வென்றார்,

     

    எதிரிகளை திசை திருப்பி வெல்வது என்பது மிக முக்கியமான போர் முறையாக இருந்து வருகிறது. போரசை நேரடியாக தாக்குவது போல காட்டிக்கொண்டே பின்புறம் இருந்து தாக்கியது அலெக்சாண்டரின் படை, வடக்கு பெல்ஜியம்,ஹாலந்து ஆகியவற்றை தாக்கப்போவதாக காட்டிகொண்ட ஹிட்லரின் படை திரும்பி பிரான்சை பாக்கெட்டுக்குள் போட்டுகொண்டது. 

    சூ என்கிற நாட்டின் அரசன் பெரும்படையோடு எதிரிகள் வந்த பொழுது தெருவை சுத்தமாக பெருக்கி,எல்லா கதவுகளையும் திறந்து வைக்க சொல்லி எதிரிகளை குழப்பி படையெடுப்பை சந்திக்காமலே வென்றிருக்கிறான். 

    ரஷ்யா நெப்போலியன்,ஹிட்லர் ஆகியோரை சந்திக்க இருக்கும் எல்லா உணவு,விவசாயம், போக்குவரத்து காலிபண்ணும் கருகிய மண் கொள்கையால் மண்ணைக் கவ்வ வைத்திருக்கிறது. 

     போரை ஆரம்பிப்பதை விட முடிப்பது தான் சவாலான விஷயம். ஆப்கானில் ஒட்டுமொத்தமாக ஒழிந்து போன ரஷ்யா,வியட்நாமில் உலகப்போரை விட அதிக குண்டுகள் போட்டும் ஜெயிக்க முடியாமல் திரும்பிய அமெரிக்கா என்று எக்கச்சக்க ஆதாரங்கள். 

    களைப்படைய செய்து வெற்றியடைவது என்கிற போர்முறையை காந்தி மிக அற்புதமாக பயன்படுத்தினார் என்பதே உண்மை. 

    பிரசாரத்தின் மூலம் சாதிக்க முடியும் என்று நிரூபிக்கிறார்கள் சாக்ரடீஸ்,கோயபல்ஸ். தட்சசீலத்தை அடக்க கிளம்பிய அசோகரும் வதந்திகளை கிளப்பி சாதித்தார்.    

    போர் என்பது களங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது என்று நீங்கள் எண்ணினால் அது ரொம்ப தப்பு ! ஒரு நாட்டின் தானியங்களை மற்றொரு நாட்டின் மணிகளால் மாற்றுவது,அயல்மொழியை மாற்றிப்பேச வைப்பது,தங்களின் அடிப்படை பண்பாட்டை மறப்பது என்று நீண்டு எல்லாமும் மாறிப்போய் பிச்சை ஏந்தும் தேசமாக மாறும் பண்பே இறுதியில் முளைக்கிறது! 

    போர்க்குணம் இல்லாத தேசம் புதைந்து போகும் ; மனிதர்களும் தான்

    A call-to-action text Contact us