பிசியோதெரபி மருத்துவம் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் விளையாட்டு வீரர்கள், எலும்பு முறிவுக்கு பின் ஏற்படும் தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கு, நரம்பு பிரச்சனைகளுக்கு இப்பொழுது கட்டாயமான ஒரு மருத்துவ முறையாக வளர்ந்து வருகிறது.
நம்மில் பலர் முதுகுவலியை ஒருமுறையாவது உணர்ந்திருப்போம், தற்போது உள்ள வாழ்க்கை முறையில் இளம் வயதினர் கூட முதுகுவலி, முதுகு தண்டுவட பாதிப்பினால் பாதிக்கப்படுவதை பெரும்பாலும் தற்போது பார்த்துக்கொண்டு வருகிறோம். முதுகு வலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன என்று தவறாக உட்காரும் முறை, வண்டி ஓட்டுவது, நாள் முழுவதும் திரும்பத்திரும்ப ஒரே வேலையை செய்வதனால், நீண்ட நேரம் பயணம் செய்வதினால் இப்படி பல காரணங்களால் முதுகு வலி வருவதற்கான வாய்ப்பும் உண்டு.
சில நேரங்களில் விபத்து, தவறி விழுதல் இந்த மாதிரி காரணங்களாலும் வருவது உண்டு. இந்த லேசான தொந்தரவாக இருக்கும் பொழுதே முறையாக முழுவதும் சரி செய்து விடும் பொழுது, மறுபடியும் அந்த பிரச்சனை வராமல் நிரந்தரமாக குணப்படுத்த முடியும்.
பிசியோதெரபி சிகிச்சை என்பது எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல் செய்யக்கூடிய மருத்துவ முறைதான். முதுகு வலி ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது சில நேரங்களில் தண்டுவட பிரச்சனை இல்லாமல் வெறும் முதுகு சதை பிரச்சினைகளாக கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது.

அப்படி முதுகுத் தசைகள் பிரச்சனை ஆகும் போது சாதாரண பயிற்சிகள் கொஞ்சம் மசாஜ், எலக்ட்ரோ தெரபி மற்றும் எக்சைஸ் தெரபி பண்ணும் போது சாதாரணமாக சரியாகிவிடும். மீண்டும் வராமல் இருப்பதற்காக சில உடற்பயிற்சிகளை சில நாட்கள் செய்ய வேண்டிவரும். சில நேரங்களில் எவ்வாறு உட்காருவது, எவ்வாறு வண்டி ஓட்டுவது, எவ்வாறு ஒரு பொருளை தூக்குவது என்பதை சரி செய்யும் போது வலி குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
தண்டுவட பிரச்சனை நிலைகள்:
தண்டுவட பிரச்சனை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம் தண்டுவட பிரச்சினையில் முதல் நிலை ஆரம்பநிலை நீங்கள் புதிதாக ஒரு வேலையை செய்யும் போதோ அல்லது நெடுந்தூரம் பயணம் செய்யும் போதோ, நீண்ட நேரம் உட்கார்ந்து இருக்கவேண்டிய சூழ்நிலை, பொருளை தள்ளும்போது, தூக்கும் போது லேசான வலி வரும். இது ஆரம்ப நிலையாகும், அதாவது முதல் நிலையாகும் .
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவும் அந்த வலி தொடர்ந்து இருந்தால் அல்லது அவ்வப்போது வந்து சரியாகி கொண்டிருந்தால் அது கொஞ்சம் முற்றிய நிலை அல்லது இரண்டாம் நிலை (கிரானிக் ஸ்டேஜ்)
மூன்றாம் நிலை அல்லது அவசரநிலை மிகவும் முற்றிய நிலையாகும் .
தண்டுவட சவ்வு முழுவதுமாக நழுவி நரம்பு அழுத்தும் சூழ்நிலையாக மாறும்போது நரம்பின் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.
முதல் நிலை தண்டுவட பிரச்சனை பொருத்தவரை சதை அளவில் மட்டும் தான் பாதிப்பு இருக்கும். தண்டுவட சவ்வு எந்தவித பாதிப்பும் இருக்காது. தசைகளில் ஏற்படும் பாதிப்பை சரி செய்தாலே போதும் சரியாகிவிடும். முதல் நிலையில் பாதிப்பிற்கு சில உடற்பயிற்சிகள்,
மசாஜ், ஸ்ட்ரெச்சிங் இது போன்ற சிறிய அளவிலான மருத்துவ சிகிச்சை போதுமானது.
இரண்டாவது நிலையில் தண்டுவட சவ்வில் லேசான பாதிப்பு முதல் மிதமான பாதிப்பு வரை வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
சவ்வு லேசாக விலகி தண்டுவட நரம்பு இலேசான அழுத்த வாய்ப்பு இருக்கிறது இது நாள்பட நாள்பட கொஞ்சம் கொஞ்சமாக விலகி அந்த நரம்பு அழுத்தி அழுத்தி கை நரம்பு, கால் நரம்பு விருத்து போதல், மரத்துப்போதல், குடைச்சல், பலம் குறைந்து போதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
இந்த சூழ்நிலையில் பிசியோதெரபி சிகிச்சை ஒரு வாரமோ, 2 வாரமோ தேவைப்படும் அந்த சூழ்நிலையில் மசாஜ், உடற்பயிற்சி, எலக்ட்ரோ தெரப்பி எக்யூப்மென்ட்,மேனுவல் தெரப்பி, மையோ பேசியல் தெரப்பி, போன்றவற்றை பயன்படுத்தி ஓரிரு வாரங்களில் சரி செய்து விட முடியும்.
தண்டுவட சவ்வு விலகல் :
தண்டுவட சவ்வு விலகல் பல விதமான நிலைகள் உள்ளது டிஸ்க் டிஜெனரேசன், டிஸ்க் புரலாப்ஸ், டிஸ்க் ஹேர்னியேஷன், டிஸ்க் எக்ஸ்ட்ருஷன், டிஸ்க் சிக்யோஸ்குரஜன்,
பக்கவாட்டில் அழுத்தலாம், சவ்வு நேராக பின்பக்கமாக அழுத்தலாம் இவ்வாறு பல்வேறு நிலைகள் உள்ளது.
பக்கவாட்டில் அழுத்தும் போது ஒரு கையில் மட்டுமோ அல்லது ஒரு காலில் மட்டும் அறிகுறி தெரிய வாய்ப்பு உள்ளது.நேராக பின்பக்கமாக அழுத்தும் பொழுது இரண்டு கைகளிலும் அல்லது இரண்டு கால்களிலும் அறிகுறி தெரிய வாய்ப்புள்ளது. பக்கவாட்டில் அழுத்தும்போது எந்த பக்கம் அழுத்துகிறது அந்த பக்கம் மட்டும் வருவதற்கான வாய்ப்பு உண்டு. வலி, மரத்துப் போதல் போன்ற அறிகுறிகள் கை முழுவதுமோ அல்லது கால் முழுவதும் தெரிய வாய்ப்பு உள்ளது.
டிஸ்க் எக்ஸ்ட்ருஷன் இந்தநிலையில் தண்டுவட அறுவை சிகிச்சை தேர்ந்தெடுப்பதே சரியான முடிவாக இருக்கும்.அவ்வாறு அறுவை சிகிச்சை செய்த பிறகும் பிசியோதெரபி சிகிச்சை தேவைப்படும். மற்ற அனைத்துப் பிரச்சினைகளையும் பிசியோதெரபி சிகிச்சை மூலமே சரிசெய்து விட முடியும். தற்போது வயது குறைந்த 25 வயது உள்ளவர்களுக்குமே தண்டுவட பிரச்சனை அதிகமாக வருகிறது.
சர்விகல் மற்றும் லம்பார்
ராடிக்யூலோபதி, சயாடிக்கா போன்றவற்றை முழுவதும் சரிசெய்துவிட முடியும். சில நேரங்களில் அலோபதி மருத்துவரின் மருத்துவ ஆலோசனையுடன் மருந்துகளும் சேர்ந்து எடுத்துக்கொள்ளும்போது நாள்பட்ட பிரச்சினைகள் குணமாகும் வாய்ப்பு சற்று அதிகம்.
யாருக்கெல்லாம் வருவதற்கான வாய்ப்புகள்
தண்டுவட பிரச்சனை பெண்களுக்கு அதிகமாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
டூ-வீலர் ஃபோர் வீலர் ஓட்டக்கூடிய ஆண்களுக்கு அதிகமாக உள்ள அதற்கான வாய்ப்புகள் உள்ளது. சிஎன்சி ஆப்பரேட்டர், ஐடி ப்ரொபஷனல், நகை செய்பவர்கள், அக்கவுண்டன்ட், மார்க்கெட்டிங் பீப்பிள்ஸ், ஆர்க்கிடெக்ட், கிராபிக் டிசைனர் போன்ற பலருக்கு கழுத்து எலும்பு தேய்மானம், சவ்வு விலகல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
அவசரம் வேண்டாம்
பிசியோதெரபி சிகிச்சையில் எலக்ட்ரோ தெரபி, மசாஜ் தெரபி மற்றும் டிரை நீட்லிங், கப்பிங்,
மையோ பேசியல் ரிலீஸ், மேணிபுலேஷன்,
ஸ்ட்ரெச்சிங் இன்னும் பல புதிய சிகிச்சை முறைகள் பிசியோதெரபி சிகிச்சையில் இணைந்துள்ளன. இதுபோன்ற பல்வேறு சிகிச்சை முறைகளால் தண்டுவட அறுவை சிகிச்சை இல்லாமல் பிரச்சனையை முற்றிலுமாக சரிசெய்ய முடியும்.
தண்டுவட அறுவை சிகிச்சை செய்வதற்கு அவசரப்பட வேண்டாம். பெரும்பாலான பிரச்சனைகளை பிசியோதெரபி மூலமே சரிசெய்ய செய்துவிடமுடியும்.
என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் சேவையில்
Dr.M.தேவேந்திரன்
M.P.T. (Ortho), MIAP,
AIFPT, MBA
தேவ் பிசியோதெரபிக் கிளினிக்
திருச்சி ரோடு, சிந்தாமணிப்புதூர்,
கோயம்புத்தூர்-641103.
தொடர்புக்கு : +9199946 69354