செக்கிழுத்த செம்மல்
ஒட்டப்பிடார நாயகனே
உலகநாதனின் மகனே
வீரத்தின் விளைநிலமே
ஏழ்மையில் உழன்றவரே
வறுமைதன்னை ததுதெடுத்துக் கொண்ட போதிலும் வாடாமல் நாட்டுக்காக உழைத்திட்டவரே
அன்புள்ளம்
கொண்டவரே
.அமைதியின் பிறப்பாளரே
அகிம்சை வழியில் நடந்திட்டவரே
அன்னியரை எதிர்த்து சுதேசிக் கப்பல் விட்டவரே
சுதந்திரத்தின் ஆணிவேரானவரே
வழக்கறிஞரானவரே
கப்பல் வாணிகம் செய்திட்டவரே
தூத்துக்குடியில்
துறைமுகம்
கண்டவரே
சிறை சென்றவரே
செக்கிழுத்தவரே
தியாகத்திற்குப் பெயர் பெற்றவரே
பெருமை மிகு பண்பாளரே
எண்ணற்ற வழிகளில் எண்ணிலா வலிகளை அடைந்தவரே
வறுமையில. உழன்றவரே
நாட்டின் வரலாறானவரே
சுதந்திரக்கொடி பறக்கதனது சுதேசிக் கப்பலை விற்றவரே
கண்ணியத்தின் பிறப்பிடமானவரே
வ.உ.சி.யே நன்றி
கூற நாங்கள் கடமைப்பட்டுள்ளோமே
உம்மை வாழ்த்தி வணங்குகிறோமே
செம்மலே தியாகச்செம்மலே