உலக தேங்காய் தினம் 2021 | தேங்காய் பற்றி உங்களுக்கு தெரியாத சூப்பரான தகவல்கள்!
World Coconut Day 2021
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2 அன்று, உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் குறிப்பாக ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது.
உலகின் பெரும்பாலான தேங்காய் உற்பத்தி செய்யும் பகுதிகள் மற்றும் உற்பத்தி மையங்களை நினைவுகூரும் விதமாகவும் தேங்காயின் ஆரோக்கியம் மற்றும் வணிக நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் உலக தேங்காய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
பல லட்சம் ஆண்டுகளாக வெப்பமண்டல இடங்களில் தேங்காய் பயிர் செய்யப்பட்டு வருகிறது. தேங்காய் மூலமாகவும் தேங்காய் மரங்களின் மூலமாகவும் மனிதகுலத்திற்கு பல்வேறு வழிகளில் நன்மைகள் கிடைத்தும் வருகிறது.
அப்படிப்பட்ட இயற்கை தந்தருளிய தேங்காயை உலகமே இந்நாளில் போற்றி கொண்டாடுகிறது. இந்த உலகத் தேங்காய் தினத்தில், தேங்காயின் சில ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி நாமும் அறிந்துக்கொள்வோம்.
வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
தேங்காயில் இருக்கும் MCFA களினால் நுன்னுயிர் எதிர்ப்பு விளைவுகள் ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை பற்குழிகள் சிதைவு மற்றும் பிற பல் பிரச்சினைகளால் ஏற்படும் தொற்றுநோய்களைத் தடுக்க உதவும்.
தேங்காய் சாப்பிடுவது நல்ல பல் சுகாதாரத்திற்கு ஏற்றது.
மேலும், இது உங்கள் வாயில் உள்ள சில கெட்ட பாக்டீரியாக்களை அகற்ற உதவுகிறது மற்றும் உங்கள் ஈறுகள் மற்றும் பற்களை தொற்று அல்லது துர்நாற்றங்களிலிருந்து பாதுகாக்கிறது.
உடல் ஆற்றலை மேம்படுத்தும்
தேங்காயில் நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்கள் (MCFAs) அதிகமாக உள்ளது, இது ஒரு வகையான நிறைவுற்ற கொழுப்பு, இவை விலங்குகளின் கொழுப்புகளை விட மனித உடல் மிகவும் எளிதில் ஜீரணிமாகும்.
நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் (MCTs) என்றும் அழைக்கப்படும் இந்த லிப்பிடுகள் பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்களின் உடல் ஆற்றலை மேம்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.
எடை இழப்புக்கு உதவும் மற்றும் இதய நோய்களைத் தடுக்கும்
தேங்காயில் நிறைவுற்ற கொழுப்புகள் இருந்தாலும், கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள நிறைவுற்ற கொழுப்புகளைப் போல இது தீங்கு விளைவிப்பதில்லை. தேங்காய் நல்ல கொழுப்பை (HDL) வழங்குகிறது. உலர்ந்த தேங்காயிலிருந்து பெறப்பட்ட தேங்காய் எண்ணெய், தொப்பை கொழுப்பை குறைக்க உதவும். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் வயிற்று கொழுப்பு உங்களுக்கு இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான அபாயத்தை ஏற்படுத்தக்கூடும்.
ரத்தம்- சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்
தேங்காயில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், அமினோ அமிலங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், இது உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த விரும்புவோருக்கு தேங்காய் ஒரு சிறந்த உணவாக இருக்கும்.
தேங்காயின் அதிக நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தவும் மற்றும் இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தவும் உதவும். இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது.
நீரேற்றத்துடன் இருக்க உதவும்
இளநீரை உட்கொள்வது உங்களுக்குத் தேவையான அனைத்து எலக்ட்ரோலைட்டுகளையும் வழங்கும். இது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க எலக்ட்ரோலைட்டுகளின் சிறந்த ஆதாரமாக இருக்கும். இது உங்கள் நரம்புகள் மற்றும் தசைகளை பராமரிக்க உதவியாக இருக்கும்.