31வது சாலை போக்குவரத்து வார விழா தமிழகம் முழுவதும் அனுசரிக்கபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி துவக்கி வைத்தார்.கடந்த ஆண்டை விட19.3 விழுக்காடுகள் சாலை விபத்துகளில் உயிரழிப்பு குறைந்து உள்ளது. 31வது சாலை போக்குவரத்து வார விழாவை துவக்கி வைத்த பின் மாவட்ட ஆட்சியர் தகவல். 600க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன பேரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் துவங்கி அவினாசி சாலை, மகளிர் தொழில்நுட்ப கல்லூரி, காந்திபுரம் வழியாக வ.ஊ.சி மைதானத்தில் நிறைவடைந்தது. வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் சாலைகளில் சாகசம் வேண்டாம், மித வேகம் மிக நன்று, தலை கவசம் உயிர் கவசம் போன்ற பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர். இந்த பேரணியில் காவல்துறையினர், அதி விரைவு படை, அனைத்திந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர் சங்கங்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.