• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம்
    கோவை அரசு மருத்துவமனையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை துவக்கி வைத்தார். எஸ்.பி.வேலுமணி, சென்ற ஆண்டு 3.33 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு 3.34 இலட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கோயமுத்தூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1202 மையங்களும், நகர்ப்புறங்களில் 379 மையங்களும் என மொத்தம் 1581 போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும், பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 30 மையங்கள் மற்றும் 18 நடமாடும் மையங்கள் சிறப்பு மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார். போலியோ சொட்டுமருந்து வழங்கும் பணியில் 6536 பேர் ஈடுபட்டுள்ளதாகவும், அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப்பானது எனவும் கூறிய அவர், அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
    A call-to-action text Contact us