கோவையில் - இலவச கண் பரிசோதனை முகாம்
சிகரம் பவுண்டேசன், குளோபல் குரூப் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து, வரும் 21.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, கோவை – பாப்பம்பட்டி ஊராட்சி மன்ற வளாகத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமை நடத்துகின்றன.
இந்த முகாமில் கண்புரை பாதிப்பு உள்ள நோயாளிகள், முகாம் நடைபெறும் அதே நாளில் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவர். அவர்களுக்கு உள் விழி லென்ஸ் அறுவை சிகிச்சை, மருந்துகள், தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முழுமையாக இலவசமாக வழங்கப்படும். மேலும், அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு ஒரு மாதம் கழித்து மறு பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண் விழித்திரையில் முன் அறிகுறிகள் இல்லாமலேயே பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எந்தவித அறிகுறியும் இன்றி பார்வையை பாதிக்கும் கண் நீர் அழுத்த நோய் (Glaucoma) குறித்தும் பரிசோதனை செய்யப்படும். மேலும், மாறுகண், பிறவி கண் நீர் அழுத்த நோய், மாலைக்கண் நோய் போன்ற பிரச்சினைகள் உள்ள குழந்தைகளையும் முகாமிற்கு அழைத்து வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.
கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் வெள்ளெழுத்து உள்ளவர்களுக்கு தேவையான கண் கண்ணாடிகள் முகாம் நடைபெறும் இடத்திலேயே வழங்கப்படும்.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஆஸ்துமா, இதய நோய் அல்லது பிற உடல் நலக் குறைபாடுகள் உள்ளவர்கள், அருகிலுள்ள பொது மருத்துவரிடம் பரிசோதனை செய்து, கண்புரை அறுவை சிகிச்சைக்கு தகுதி சான்றிதழ் மற்றும் மருந்து மாத்திரைகளுடன் முகாமிற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முகாம் தொடர்புக்கு:
📞 98945 44778, 90035 95595
இந்த முகாமிற்கு பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு சிகரம் பவுண்டேசன், பாப்பம்பட்டி, கோவை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.






