கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி
2025 - தமிழ்நாடு கூடைப் பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கூடைப் பந்து கழகம் ஆகியவை இணைந்து 16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான கூடைப் பந்து சாம்பியன்ஷிப் போட்டி இன்று கோவையில் துவங்கியது.
இன்று தொடங்கிய இந்த போட்டியில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு ஒரு அணி என 38 அணிகளும், கோவை, தூத்துக்குடி, சென்னை மாவட்டங்களுக்கு இரண்டு அணி என மொத்தம் 41 அணிகள் கலந்து கொண்டன.