• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    Actor Nayanthara Launch Femi9


    A Women’s Hygiene and Empowerment Venture



    Popular actor Nayanthara, along with director Vignesh Shivan and Dr. Gomathi, have joined forces to introduce Femi9, a brand devoted to girls’s hygiene and menstrual safety.


    Drawing from her personal reports and collaborating with medical examiners, Nayanthara initiated Femi9.

    Femi9 aspires to grow to be a thriving community of women where fantastic vibes, health and well-being advice, and thrilling updates are frequently shared across various social media and virtual systems.

    Nayanthara, Co-Founder of Femi9, expressed, “Despite the advancements in social media and information sharing, menstruation stays a broadly stigmatized difficulty. Femi9 is greater than only a emblem; it’s a representation of ladies’s power, resilience, and harmony. It unveils a sisterhood and a emblem that actually cares for girls. Venturing into the area of private hygiene, I eagerly count on a continuous celebration of togetherness, sisterhood, and a shared aspiration for a more fit and happier destiny for all ladies.”

    Shivan, Co-Founder of Femi9, added, “Entrepreneurship isn’t always totally approximately innovation; it is also approximately addressing real-life demanding situations with useful answers. In this context, it is crucial to set up brands that resonate with the current wishes. Brands that confront important problems, consisting of the often-not noted demanding situations associated with menstruation that girls face, now not most effective signify progress but also foster a more inclusive society. This is our venture through Femi9.”

    கோவை, பாப்பம்பட்டியில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்



    கோவை மாவட்ட பார்வை தடுப்புச்சங்கம், சிகரம் பவுண்டேசன், பாப்பம்பட்டி ஊராட்சி, குளோபல் குரூப் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் வருகிற 23.02.2025 அன்று ஞாயிறு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, கோவை, பாப்பம்பட்டி ஊராட்சி மன்ற வளாகத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் கண்புரை உள்ள நோயாளிகள் முகாம் தினத்தன்றே கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

    மேலும் அவர்களுக்கு உள் விழி லென்ஸ் அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசம்.

    அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு ஒரு மாதம் கழித்து மறு பரிசோதனை இலவசமாக செய்யப்படும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண் விழித்திரையில் முன் அறிகுறி இல்லாமலேயே பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

    கண் நீர் அழுத்த நோய் 40 வயதுக்கு மேல் எந்தவித அறிகுறியும் இல்லாமல் கண் பார்வையை பாதிக்கும். மாறுகண், பிறவி கண் நீர் ழுத்த நோய் மற்றும் மாலைக்கண் நோய் உள்ள குழந்தைகளை அழைத்து வந்து கண் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    கிட்டப்பார்வை, தூரப்பார்வை வெள்ளெழுத்து உள்ளவர்களுக்கு கண் கண்ணாடிகள் முகாம் நடக்கும் இடத்திலேயே கிடைக்கும். முகாமிலேயே அவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

    உயர் ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், ஆஸ்துமா, இதய நோய் அல்லது உடம்பில் வேறு ஏதேனும் தொந்தரவு இருந்தால் அருகில் உள்ள பொது மருத்துவரிடம் பரிசோதனை செய்து கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொள்ள தகுதி சான்றிதழ் மற்றும் மருந்து மாத்திரைகளுடன் முகாமுக்கு வர வேண்டும்.

    முகாம் தொடர்புக்கு : 9894544778, 90035 95595

    அனைவரையும் வருக வருக என வரவேற்கும்

    சிகரம் விஸ்வா
    தலைவர்- சிகரம் பவுண்டேசன்

    www.sigaram.in

    Sigaram Vishwa
    Sigaram Foundation

    Sigaram Vishwa Sigaram Trust Sigaram International Sigaram Trust

    Sigaram Foundation Sigaram Foundation Sigaram Vishwa

    தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

    கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக கோவை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் S.பாபு அவர்களின் தலைமையில் சூலூரில் உள்ள நடராஜ் லட்சுமி திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.


    இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் விக்னேஷ் கலந்து கொண்டார். விழாவில் அறிமுக கூட்டத்தை தொடர்ந்து கட்சி வளர்ச்சி பணிக்கான ஆலோசனையும் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட நிர்வாகிகள் இணை செயலாளர் சபரிஷ் பொருளாளர் சரவணக்குமார் துணைச் செயலாளர் மோகனப்பிரியா துணைச் செயலாளர் ரோஹித் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜா செந்தில்குமார் சதீஷ்குமார் மாசானமுத்து வினோத்குமார் சதீஷ்குமார் கௌசல்யா பவித்ரா அவிலா கிரேசி, ஜனனி தர்சனா மற்றும் கழகத் தோழர்கள் மோகன் அக்‌ஷயாஸ் பிரகாஷ் மனோஜ்குமார் சந்தோஷ் தமிழ் செல்வன் அஸ்வின் மணி சுந்தர் கணேஷ் விமல் சேண்டல் சீனிவாசன் ஜெகன்நாதன் ராஜேஷ்குமார் மணிகண்டன் விஜய்மணி மற்றும் கழக நிர்வாகிகள் தோழர்கள் மகளிர்அணி வழக்கறிஞர்கள் அணி ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்




    🟣 பிளஸ் 2 தேர்வுக்கு பிப்.17-ல் ஹால்டிக்கெட் வெளியீடு!

     


    பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

     

    இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் ந.லதா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

     

    தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் பிளஸ் 2 மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் பிப்ரவரி 17-ம் தேதியும், பிளஸ் 1 மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் பிப்ரவரி 19-ம் தேதியும் வெளியிடப்பட உள்ளது.

     

    இதையடுத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் https://www.dge.tn.gov.in/ எனும் வலைதளத்தில் சென்று மாணவர்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

     

    தனித்தேர்வர்கள்: இதேபோல், 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் பிப்ரவரி 14-ம் தேதி மதியம் வெளியிடப்பட உள்ளது. தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் தங்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பிளஸ் 1 (அரியர்) மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு 2 தேர்வுக்கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    கல்லூரி அட்மிஷன் &  ஆலோசனைகளும் வழங்கப்படும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் தொடர்பு கொள்ளவும்

     

    GLOBAL ACADEMY – COIMBATORE

    Cell – 9003381888, 74188 99144


     நிதி தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பாக  பன்னாட்டு கருத்தரங்கம்



    கே.பி.ஆர். கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் வணிகத் தொழில்சார் கணக்கியல் துறை, ஆசிய பசிபிக் பல்கலைக்கழகம், கிறிஸ்ட் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் இணைந்து பன்னாட்டு கருத்தரங்கம் நடத்தியது.

    ஏபியு ஃபின்டெக் அகாடமியின் தலைவர் டாக்டர் மீரா ஈஸ்வரன், ”நிதித் தொழில்நுட்பத்தில் எண்ணிமப் புதுமை”, பெங்களூரு கிறிஸ்ட் நிகர்நிலைப் பல்கலைக்கழக வணிகம், நிதி மற்றும் கணக்கியல் பள்ளியின் இயக்குநர் டாக்டர் பிஜு டாம்ஸ், ”மின்னணுக் கணக்கியலில் வளர்ந்து வரும் போக்குகள்” ஆகிய தலைப்புகளில் சிறப்புரை வழங்கினர்.

    மாநாட்டின் தொடக்கவிழாவில் வணிகத் தொழில்சார் கணக்கியல் துறைத்தலைவர், கார்த்திகா வரவேற்புரை நிகழ்த்தினார். வணிகவியல் புல முதன்மையர் குமுதாதேவி, மாநாட்டின் நோக்கங்களை விளக்கினார். கல்லூரி முதல்வர் கீதா,”நிதித்துறையில் மின்னணுத் தொழில்நுட்பத்தின் பங்கு” குறித்து தலைமை உரை வழங்கினார்.

    பேராசிரியர்கள் மற்றும் சுமார் 970 மாணவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு, நிதித் தொழில்நுட்பத்தில் உள்ள புதிய போக்குகள் மற்றும் வளர்ச்சிகளைப் பற்றிய பயனுள்ள தகவல்களை பெற்றனர்.

    சரித்திரங்களை வாசிப்பதன் மூலம் நாம் சாதனையாளராக மாறமுடியும்!

    SNMV கல்லூரியில் சிகரம் விஸ்வநாதன் பேச்சு 

    கோவை ஸ்ரீ நேரு மஹா  வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,06.02.2025 அன்று நூலக வாசகர் முற்றம் மற்றும் தென்றல்  தமிழ் மன்றம் சார்பாக  சிறப்புக்கருத்தரங்கம் நடைபெற்றது.

    விழாவின் தலைமை உரையை கல்லூரி முதல்வர் முனைவர் போ.சுப்ரமணி அவர்கள் வழங்கினார். இவ்விழாவினை தலைமை நூலகர்  முனைவர் க. உமா மகேஸ்வரி அவர்களும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் செ.வி வெங்கடலட்சுமி அவர்களும் ஒருங்கிணைத்தனர்.



    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிகரம் பவுண்டேசன் நிறுவனர் மற்றும் குளோபல் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் திரு சிகரம் விஸ்வநாதன் அவர்கள், நூலைப் பிடி வாழ்வைப்படி என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.


    தனது உரையில் புத்தக வாசிப்பு என்பது நமது  சிந்தனையை ஒருமுகப்படுத்தும், தலைமைப்பண்பை மேம்படுத்தும், எண்ணங்களை புதுப்பிக்கும், போட்டி நிறைந்த உலகில் நம்மை நாம் தகவமைத்துக்கொள்ள உதவும் என்றும் சரித்திரங்களை வாசிப்பதன் மூலம் நாம் சாதனையாளராக மாறமுடியும் என்றும் கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

    நன்றி உரையை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் அர.ஆறுச்சாமி வழங்கினார். 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். விழா தேசிய கீதத்துடன் இனிதே நிறைவுற்றது.




    A call-to-action text Contact us