கோவை, பாப்பம்பட்டியில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
கோவை மாவட்ட பார்வை தடுப்புச்சங்கம், சிகரம் பவுண்டேசன், பாப்பம்பட்டி ஊராட்சி, குளோபல் குரூப் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் வருகிற 23.02.2025 அன்று ஞாயிறு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, கோவை, பாப்பம்பட்டி ஊராட்சி மன்ற வளாகத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் கண்புரை உள்ள நோயாளிகள் முகாம் தினத்தன்றே கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
மேலும் அவர்களுக்கு உள் விழி லென்ஸ் அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசம்.
அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு ஒரு மாதம் கழித்து மறு பரிசோதனை இலவசமாக செய்யப்படும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண் விழித்திரையில் முன் அறிகுறி இல்லாமலேயே பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
கண் நீர் அழுத்த நோய் 40 வயதுக்கு மேல் எந்தவித அறிகுறியும் இல்லாமல் கண் பார்வையை பாதிக்கும். மாறுகண், பிறவி கண் நீர் ழுத்த நோய் மற்றும் மாலைக்கண் நோய் உள்ள குழந்தைகளை அழைத்து வந்து கண் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
கிட்டப்பார்வை, தூரப்பார்வை வெள்ளெழுத்து உள்ளவர்களுக்கு கண் கண்ணாடிகள் முகாம் நடக்கும் இடத்திலேயே கிடைக்கும். முகாமிலேயே அவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
உயர் ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், ஆஸ்துமா, இதய நோய் அல்லது உடம்பில் வேறு ஏதேனும் தொந்தரவு இருந்தால் அருகில் உள்ள பொது மருத்துவரிடம் பரிசோதனை செய்து கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொள்ள தகுதி சான்றிதழ் மற்றும் மருந்து மாத்திரைகளுடன் முகாமுக்கு வர வேண்டும்.
முகாம் தொடர்புக்கு : 9894544778, 90035 95595
அனைவரையும் வருக வருக என வரவேற்கும்
சிகரம் விஸ்வா
தலைவர்- சிகரம் பவுண்டேசன்
www.sigaram.in
Sigaram Vishwa
Sigaram Foundation
Sigaram Vishwa Sigaram Trust Sigaram International Sigaram Trust
Sigaram Foundation Sigaram Foundation Sigaram Vishwa