சரித்திரங்களை
வாசிப்பதன் மூலம் நாம் சாதனையாளராக
மாறமுடியும்!
SNMV கல்லூரியில் சிகரம் விஸ்வநாதன் பேச்சு
கோவை ஸ்ரீ நேரு
மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல்
கல்லூரியில்,06.02.2025 அன்று நூலக
வாசகர் முற்றம் மற்றும் தென்றல் தமிழ்
மன்றம் சார்பாக சிறப்புக்கருத்தரங்கம்
நடைபெற்றது.
விழாவின் தலைமை உரையை கல்லூரி முதல்வர் முனைவர் போ.சுப்ரமணி அவர்கள் வழங்கினார். இவ்விழாவினை தலைமை நூலகர் முனைவர் க. உமா மகேஸ்வரி அவர்களும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் செ.வி வெங்கடலட்சுமி அவர்களும் ஒருங்கிணைத்தனர்.
சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்ட சிகரம் பவுண்டேசன் நிறுவனர் மற்றும் குளோபல் கல்வி
அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் திரு சிகரம் விஸ்வநாதன் அவர்கள், நூலைப் பிடி வாழ்வைப்படி என்ற தலைப்பில்
சிறப்புரை வழங்கினார்.
தனது உரையில் புத்தக வாசிப்பு என்பது நமது சிந்தனையை ஒருமுகப்படுத்தும், தலைமைப்பண்பை மேம்படுத்தும், எண்ணங்களை புதுப்பிக்கும், போட்டி நிறைந்த உலகில் நம்மை நாம் தகவமைத்துக்கொள்ள உதவும் என்றும் சரித்திரங்களை வாசிப்பதன் மூலம் நாம் சாதனையாளராக மாறமுடியும் என்றும் கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
நன்றி உரையை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் அர.ஆறுச்சாமி வழங்கினார். 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். விழா தேசிய கீதத்துடன் இனிதே நிறைவுற்றது.