மனிதனின் முழுமையான வெற்றிக்கு வாசிப்பே துணை நிற்கும் – SNMV கல்லூரி விழாவில் சிகரம் விஸ்வபாரதி பேச்சு!
இந்நிகழ்வை கல்லூரியின் முதல்வர்
போஜன் சுப்பிரமணி அவர்கள் துவக்கி வைத்தார். மேலாண்மைத்துறை இயக்குனர் திரு முத்துக்குமார்
அவர்களும், வணிகப்புலத்துறைத் தலைவர் முனைவர்
பத்மநாபன் அவர்களும் கலந்து கொண்டனர். தலைமை நூலகர் முனைவர் கே. உமாமகேஸ்வரி ஒருங்கிணைக்க,
சிறப்பு விருந்தினராக திருமிகு சிகரம் விஸ்வபாரதி, தலைவர்,மக்கள் நூலகம், தலைவர் மற்றும்
நிறுவனர், சிகரம் அறக்கட்டளை அவர்கள் கலந்து
கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கினார்.
அவர் மாணவர்களுக்கு ஆற்றிய சிறப்புரையில், இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதன்
வெற்றியாளனாக திகழ்வதற்கு முக்கியக் காரணமாக இருப்பது நேர மேலாண்மை மற்றும் புத்தக
வாசிப்பே என்றும், புத்தக வாசிப்பு ஒரு தனி மனிதனின் மேம்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது என்றும் வலியுறுத்தினார். சுதந்திர போராட்ட வீரர்
சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், பாரதியார், கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர், மகாத்மா காந்தி, அறிஞர்
அண்ணா, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், ஆப்ரஹம் லிங்கன், அலெக்ஸாண்டர், சாக்ரடீஸ், உமர் முக்தா இன்னும் பல எண்ணற்ற
ஆளுமை மிக்க மனிதர்கள் அனைவரும் மிகச் சிறந்த வாசிப்பாளர்களே என்றும் குறிப்பிட்டார்.
புத்தக வாசிப்பு மாணவர்களுடையே
மட்டுமின்றி நாளைய சமுதாயத்திலும் ஒரு
மிகப் பெரிய ஒரு மாற்றத்தை கொண்டுவரக்கூடிய பழக்கமாகவும் இருக்கும் என்றும் கூறினார்.
தன்னுடைய புத்தக வாசிப்பு பற்றிய அனுபவங்களையும் மாணவர்களுடன்
பகிர்ந்து கொண்டார்.
சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும்
120க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுடைய பெயர்களை வாசக முற்றத்தில் பதிவு செய்தனர்.
இந்த நிகழ்வு இறுதியாக நாட்டுப்பனுடன் நிறைவு பெற்றது.










