ட்விட்டர், மெட்டா வரிசையில் கூகுள்; 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு!
உலகின் முன்னணி சோசியல் மீடியா நிறுவனங்களான ட்விட்டர், மெட்டாவைத் தொடர்ந்து முன்னணி தகவல்
தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது ஐ.டி. உலகில்
பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் முன்னணி சோசியல் மீடியா நிறுவனங்களான ட்விட்டர், மெட்டாவைத் தொடர்ந்து முன்னணி தகவல்
தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது ஐ.டி. உலகில்
பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பணவீக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு நாடுகளிலும் மக்களிடையே
பணப்புழக்கம் குறைந்துள்ளது. உலகம் முழுவதும் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை
காரணமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் நெக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால்
செலவினங்களைக் குறைப்பதற்காக ட்விட்டர் 50 சதவீத ஊழியர்களையும், மெட்டா 11
ஆயிரம்
ஊழியர்களையும் பணி நீக்கம் செய்தது.
கடந்த வாரம் அமேசான் நிறுவனம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில்,
உலகின்
முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
மேலும், பணி நீக்கம்
செய்யப்பட வேண்டிய ஊழியர்களை அடையாளம் கண்டறிவதற்காக புதிய மதிப்பீட்டு முறையை
செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் தாய்
நிறுவனமான ஆல்பாபெட் சுமார் 10,000 'மோசமாக செயல்படும்' ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி இன்ஃபர்மேஷன் அறிக்கையின்படி, “புதிய செயல்திறன் மேம்பாடு மற்றும் தரவரிசைத் திட்டத்தைச் செயல்படுத்துவதன்
மூலம் கிட்டத்தட்ட 10,000 பணியாளர்களை வெளியேற்ற கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதிய முறையின் கீழ், நிறுவனம் தனது மேலாளர்களிடம் 6% ஊழியர்கள் அதாவது, 10,000 பேரை, குறைவான செயல்திறன் கொண்ட ஊழியர்களாக வகைப்படுத்துமாறு
கேட்டுக்கொண்டுள்ளது,”எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டின் தொடக்கம் முதல் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வெளியேற்ற
திட்டமிட்டுள்ள கூகுள் நிறுவனம், இதற்காக குறைந்த செயல்திறன் கொண்ட ஊழியர்களை மேனேஜர்கள் எளிதில் அடையாளம் காண
புதிய செயல்திறன் மேலாண்மை அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
அதேபோல், இந்த மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு குறைவான செயல்திறன் கொண்ட ஊழியர்களுக்கு போனஸ், ஸ்டாக் கிராண்ட் போன்ற பலன்களை மறுக்கவும் முடியும். இதுகுறித்து ஆல்பாபெட் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் 1,87,000 ஊழியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை பி.எஸ்.ஜி. ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா கல்லூரியில் உள்ள ஆடிட்டோரியத்தில் இன்று நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரியின் தலைவர் டாக்டர் ஆர்.நந்தினி தலைமை
தாங்கி அனைவரையும் வரவேற்று பேசினார்.விழாவில் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும்
தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர் செயலர் டாக்டர் ஆர்.சீனிவாசன் சிறப்பு
விருந்தினராக கலந்துகொண்டு 2576 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சான்றிதழ்கள் வழங்கி பட்டமளிப்பு
விழா உரை நிகழ்த்தினார்.
விழாவில் 2018ம் ஆண்டு யு.ஜி.மாணவிகள் மற்றும் 2019
-ம் ஆண்டு பி.ஜி.மாணவிகள் 2531
மாணவிகளுக்கும், 45 ரேங்க் பெற்ற மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு
சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவில் கல்லூரியின் செயலாளர் டாக்டர் என்.யசோதா
தேவி, கல்லூரி முதல்வர் டாக்டர் பி.மீனா உள்பட பலர்
கலந்துகொண்டனர்.
விழாவில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில்
உறுப்பினர் செயலர் டாக்டர் ஆர்.சீனிவாசன் தனது பட்டமளிப்பு விழா உரையில்
பேசும்போது கூறியதாவது:-
இந்தியாவில் தற்போது பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி
வருகிறார்கள். இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி என்ற பெருமையை ஜானகி
அம்மாள்பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்துகல்பனா சாவ்லா சௌமியா சாமிநாதன் போன்ற தங்கள்
சொந்த திறமைகளை வளர்த்துமுதன்மை இடத்திற்கு வந்துள்ளனர்.ஆண்களுக்கு பெண் சமம்
என்று பாரதி கண்ட கனவைதற்போது நிறைவேற்றி வருவது காண முடிகிறது.தேனி மாவட்டத்தில்
இளம் பெண் விவசாயி அர்ச்சனா ஸ்டாலின் என்பவர் இயற்கை விவசாயத்தில் அதிகம் உற்பத்தி
செய்து சாதனை புரிந்துள்ளார்.
ஒரு காலத்தில் ஆண் வாரிசுகள் தான் பெற்றோரை காப்பாற்றும்
என்ற நிலை இருந்து வந்தது.தற்போது அந்த நிலை மாறிபெண் பிள்ளைகள் தங்களது
பெற்றோரைக் காக்கும் நிலை வந்துள்ளது.ஒரு குடும்பத்தில் ஒரு பெண் என்ற நிலை
தற்போது வந்துள்ளது. மாணவிகள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டு புதிய
தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளையும் ஆய்வு செய்து வெற்றி காணவேண்டும்.
அதை இந்த உலகத்திற்கு நீங்கள் தரவேண்டும்.கல்வி அறிவை மேம்படுத்துங்கள்.
திட்டமிட்டு செயல்படுங்கள். உலக அறிவை 5 வினாடியில் நீங்கள் தற்போது உள்ள தொழில்நுட்பம் மூலம்
அறியமுடிகிறது. தேடுதலை என்றும் விடாதீர்கள். தேடிக்கொண்டே இருக்க வேண்டும்.
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று பேசினார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் எப்போது கலந்தாய்வு எதிர்பார்க்கும் மாணவர்கள் !
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 12
இளம் அறிவியல் பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த
கல்வியாண்டில் இளம் அறிவியல் பாடப்பிரிவுகளில் மொத்தம் 8
ஆயிரத்து 980 மாணவர் சேர்க்கை இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 20-ம் வரை பெறப்பட்டது.
இதில், அரசு கல்லூரிகளில் ஒற்றை சாளர கலந்தாய்வின் மூலம் 2
ஆயிரத்து 567 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.இணைப்புக் கல்லூரிகளில்,
அரசு இட ஒதுக்கீட்டில் ஒற்றைச் சாளர
கலந்தாய்வின் மூலம் 2 ஆயிரத்து 858 இடங்களும், நிர்வாக இட ஒதுக்கீட்டின் மூலம் 1,545
இடங்கள் என மொத்தம் 4,413
இடங்கள் நிரப்பபடவுள்ளன.
தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு 247
இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 120 இடங்களும், அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 408
இடங்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 20
இடங்களும் மற்றும் 20
இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கும்
ஒதுக்கப்பட்டுள்ளன.தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர மொத்தம் 39
ஆயிரத்து 489 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில்,
15 ஆயிரத்து 111 பேர் மாணவர்கள், 24 ஆயிரத்து 378 பேர் மாணவிகள் ஆவர்.
சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ்,முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 301
மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5%
இட ஒதுக்கீட்டில் 7,773
மாணவர்களும், மாற்றுத்திறனாளிகள் 144
மாணவர்கள், தொழிற்கல்வி பிரிவில் 1,849 மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள்
பிரிவில் 808 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
பழங்குடியினர் பிரிவில் மட்டும் 596 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில்,
கடந்த செப்.30ம் தேதி தரவரிசை பட்டியலை பல்கலைக்கழக துணைவேந்தர்
கீதாலட்சுமி வெளியிட்டார். இந்நிலையில்,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தரவரிசை பட்டியல்
வெளியிட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக போகிறது ஆனால் இன்னும் கலந்தாய்வு
நடைபெறவில்லை.
மேலும், பன்னிரண்டாம் வகுப்பு முடித்து ஆறு மாதங்கள் ஆகியும் வீட்டிலேயே இருப்பதால் மிகுந்த மன உளைச்சலில் மாணவர்கள் உள்ளனர்.
இது குறித்து
பல்கலைக்கழகம் தரப்பில் விசாரித்த போது அதற்கான பணிகள்
நடைபெற்று வருகிறது விரைவில் கலந்தாய்வு நடைபெறும் என கூறினார்.
மாணவர்கள் கல்வி கேள்வி ஆகுவதால் எவ்வளவு விரைவில் முடியுமோ
அவ்வளவு விரைவில் கலந்தாய்வை நடத்தி கல்லூரியை திறக்க வேண்டும் என பெற்றோர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹேப்பி கோயம்புத்தூர் டே என்ற எழுத்துக்கள் வடிவில் அமர்ந்து பள்ளி மாணவர்கள் கொண்டாட்டம்
கோவை தினத்தை ஒட்டி கோவையில் உள்ள தனியார் பள்ளியில் கோவை
மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக ஹேப்பி கோயம்புத்தூர் டே என்ற
எழுத்துக்கள் வடிவில் மாணவ மாணவிகள் அமர்ந்து தங்கள் மகிழ்ச்சியை
வெளிப்படுத்தினர்.
தமிழகத்தில் தொழில்துறை அதிகமாக உள்ள நகரமும் அதே போல
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற அழைக்கப்படுவதும் கோவையாகும்.
இத்தகைய கோவை நகரம் உருவாகி 218 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி கோவை தினம்
கொண்டாடப்பட்டு வருகிறது.கடந்த 1804 ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி கோவை நகரம் உருவானதாக கூறப்படும் நிலையில் ஒவ்வொரு
ஆண்டும் நவம்பர் 24ஆம் தேதி கோவை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள வீசிஎஸ்எம் என்ற தனியார்
பள்ளியில் மாணவ மாணவிகள் 400க்கும் மேற்பட்டோர் ஹேப்பி கோயம்புத்தூர் டே
என்ற எழுத்துக்கள் வடிவில் மைதானத்தில் அமர்ந்து கோவை மக்களுக்கு வாழ்த்துக்களை
தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
‘நான் தான் டெங்கு உனக்கு ஊதுவேன் சங்கு’ டெங்கு கொசுவாக மாறி நூதன முறையில் விழிப்புணர்வு
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 60வது வார்டுக்குட்பட்ட ஜெய ஸ்ரீ நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர் ஒருவர் டெங்கு கொசுவை போல் வேடம் அணிந்து டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கோவையில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மழைநீர் தேங்கும் பட்சத்தில் அதில் டெங்கு கொசு குழுக்கள் வளர வாய்ப்புள்ளது. கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 6500 தெருகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வின்போது நல்ல தண்ணீர் தொட்டிகள், வீட்டில் தேவையற்ற பொருட்களை மழை நீர் படும்படியாக வைத்தல் போன்றவற்ற ஆய்வு செய்து அதில் அபேட் மருந்து ஊற்றியும், டயர், தேங்காய் மட்டை போன்ற தேவையற்ற பொருட்கள் இருந்தால் அதனை அப்புறப்படுத்தும் பணியிலும், மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திக் வருகின்றனர்.
மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என பல்வேறு இடங்களில் கட்டிடத்தின் மேல் பகுதியில் மழைநீர் தேங்கும் வண்ணம் இருந்தாலும் அல்லது குடிநீர் தொட்டி திறந்து இருந்தாலும் அதிலிருந்து கொசு புழுக்கள் வளர்வதற்கு காரணமாக இருந்தால் அதனை கண்டறிந்து அதனை அழித்தும், கட்டிட உரிமையாளர்களுக்கு ஆபரதம் விதித்தும் வருகின்றனர். இதனிடையே மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவின் படி டெங்கு கொசு விழிப்புணர்வை ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர் ஒருவர் டெங்கு கொசுவாகவே மாறி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அப்போது அவர் டெங்கு கொசுவாகவே முழுவதுமாக வேடமடைந்து கைகளில் டயர்களை போட்டுக் கொண்டும், வாட்டர் பாட்டில்கள், சிரட்டைகள் போன்றவற்றை அணிந்தும் கொண்டும் ‘ நான்தான் டெங்கு உனக்கு ஊதுவேன்’ சங்கு என்ற முறையில் தெருக்களில் நடந்து வந்தார். இது மக்கள், குழந்தைகள் என அனைவருக்கும் விழிப்புணர்வும் அதிக அளவில் கிடைத்தது.
Coimbatore is not just a place, it’s an emotion! Celebrating the emotion of our foundation today









குழந்தைகள் பள்ளியிலும் வாழ்க்கையிலும் சிறந்து விளங்க பெற்றோர்கள் செய்யக்கூடிய 6 விஷயங்கள்
குழந்தைகள் பள்ளியிலும் வாழ்க்கையிலும் சிறந்து விளங்க பெற்றோர்கள் செய்யக்கூடிய 6 முக்கியமான மற்றும் பயனுள்ள விஷயங்கள் இங்கே உள்ளன.
உங்கள் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று போராடுகிறீர்கள், இல்லையா?
சில நேரங்களில், குழந்தைகளுக்கு எது சரியானது, எது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்பதை தீர்மானிப்பது மிகவும் கடினம்.
எனவே, மகிழ்ச்சியான மற்றும் திறமையான குழந்தைகளை வளர்ப்பதில் உண்மையில் என்ன வேலை செய்கிறது?
இன்றைய காலக்கட்டத்தில் உள்ள பெற்றோர்கள் விழிப்புணர்வை அடைந்து, தங்கள் பிள்ளைகள் செழிக்கவும், சிறந்து விளங்கவும் உதவ முன்வருகிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு உருவாக்க சில வழிகள்:
1. நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் :
வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே ஆரோக்கியமான பழக்கங்களை வளர்ப்பதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உதவுகிறார்கள். இது வாழ்நாள் முழுவதும் நன்மைகளைக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, பெற்றோர்கள் குழந்தைகளை நல்ல சமூகத் திறன்களையும், நல்ல பழக்கவழக்கங்களையும் கற்கவும், நல்ல உணவைத் தேர்வு செய்யவும் ஊக்குவிக்கிறார்கள்.
பல பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை கற்பிப்பது அவர்கள் விரும்பிய முடிவுகளை அடைய உதவும் என்று நம்புகிறார்கள். ஆனால், தினசரி அடிப்படையில் நல்ல நடத்தையை திரும்பத் திரும்பச் செய்வதன் மூலம், பழக்கங்களை மிக விரைவாக வளர்க்க குழந்தைகளுக்கு உதவ முடியும்.
சிறந்த வழிகளில் ஒன்று, சரியான நடத்தையை வெளிப்படுத்துவதன் மூலமும், ஒரு முன்மாதிரியாக இருப்பதன் மூலமும் உங்களுக்காக ஒரு சிறந்த முன்மாதிரியை அமைப்பதாகும்.
2. குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுங்கள் :
குழந்தைகள் வளரும்போது, அவர்கள் தங்கள் வாழ்க்கையை சொந்தமாக நடத்த விரும்புகிறார்கள். குழந்தைகளுக்கு சரியான அளவு சுதந்திரம் கொடுப்பது பெற்றோர் வளர்ப்பில் அவசியம். இது குழந்தைகள் வாழ்வின் நடைமுறைப் பாடங்களைக் கற்றுக் கொள்ள உதவுகிறது, இது அவர்கள் சிறப்பாக வளர உதவுகிறது. சுதந்திரம் அவர்கள் சுதந்திரமாக இருக்கவும், சரி மற்றும் தவறுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.
அதே நேரத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் தவறான முடிவுகளை எடுப்பதில் இருந்து தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க கட்டுப்பாடுகளை விதிப்பதில் புத்திசாலித்தனமாக விளையாட வேண்டும்.
இதற்கு நிலையான வழிகாட்டுதல் தேவைப்படுகிறது, குழந்தையின் வயதுக்கு ஏற்ப தெளிவான எல்லைகளை அமைத்தல் மற்றும் போதுமான பொறுப்புகளுடன் அவர்களின் சுதந்திரத்தை இணைப்பது.
3. கோரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு இடையில் வேறுபடுத்துங்கள் :
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஏன் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதில்லை என்று புகார் கூறுகிறார்கள்? இந்த நடத்தைக்கு பல காரணங்கள் இருக்கலாம் மற்றும் குழந்தைகளைப் புரிந்துகொள்வதற்கான சரியான முறையைக் கண்டுபிடிப்பது பெற்றோரின் கட்டாயமாகும்.
கோரிக்கைகளுக்கும் அறிவுறுத்தல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் படுக்கையை உருவாக்குவீர்களா? படுக்கையை உருவாக்க எனக்கு உதவுங்கள். குழந்தையை ஏதாவது செய்யச் சொல்கிறீர்களா அல்லது கேட்கிறீர்களா என்பதை மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் இருப்பது முக்கியம்.
மேலும், நேர்மறை மற்றும் தெளிவான மொழியைப் பயன்படுத்துதல் மற்றும் வேலையைச் செய்வதற்கான வெகுமதிகள் உட்பட, ஏதாவது செய்யச் சொல்லும் போது அல்லது ஏதாவது செய்யச் சொல்லும் போது குழந்தைகளின் கவனத்தை பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
4. தொழில்நுட்பத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்தவும் :
தொழில்நுட்பம் நம் வாழ்வில் இன்றியமையாத அங்கமாகிவிட்டது. இது வேகமான வேகத்தில் உருவாகி வருகிறது, சில சமயங்களில், டிஜிட்டல் உலகின் வளர்ச்சியுடன் இணைந்திருப்பது பெற்றோருக்கு சவாலாக இருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், திரை அடிப்படையிலான தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களில் செலவழித்த நேரம் குழந்தைகளின் வாழ்க்கையில் ஊடுருவி, அவர்களின் நடத்தையை எதிர்மறையாக பாதிக்கிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் மற்றும் பதின்ம வயதினரைக் கவரும் சமூக ஊடகங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும்.
5. அவர்களின் பலங்களில் கவனம் செலுத்துங்கள் :
வழிகாட்டியாகவும், நல்ல பெற்றோர்களாகவும், சிலர் குழந்தைகளின் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களை மேம்படுத்த ஊக்கப்படுத்துகிறார்கள். இருப்பினும், பலவீனங்களைக் காட்டிலும் குழந்தைகளின் பலத்தில் கவனம் செலுத்துவது அவர்களுக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தும்.
நேர்மறையான பண்புகளை அங்கீகரிப்பது ஒரு நேர்மறையான சுய-பிம்பத்தை உருவாக்குகிறது மற்றும் எதையாவது பின்தொடர்வதில் அவர்களின் உள் நம்பிக்கையை அதிகரிக்கிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கூட்டு சேர்ந்து பொறுப்புகளைப் பகிர்ந்துகொண்டு, தங்கள் குழந்தைகளின் பலத்தைப் புரிந்துகொண்டு சரியான திசையில் முன்னேற அவர்களைத் தூண்ட வேண்டும்.
6. அவர்களின் முயற்சிகளைப் பாராட்டுங்கள் :
மிகவும் போட்டி நிறைந்த உலகில், குழந்தைகள் தாழ்வு மனப்பான்மை மற்றும் அவர்களின் பலவீனங்களை மிகைப்படுத்துவது மிகவும் இயல்பானது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பாராட்டுவதன் மூலம் அட்டவணையைத் திருப்புவதில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.
குழந்தைகளின் முயற்சிகளைப் பாராட்டுவது தன்னம்பிக்கையை வளர்க்கிறது மற்றும் தங்களைப் பற்றி எப்படி நேர்மறையாகப் பேசுவது என்பதைக் காட்டுகிறது. கூடுதலாக, குழந்தைகளைப் புகழ்வது எதிர்காலத்தில் கடினமாகவும் சிறப்பாகவும் உழைக்க ஊக்குவிக்கிறது, படிப்பு, சாராத செயல்பாடுகள் போன்றவற்றில் அவர்கள் வெற்றிபெற உதவுகிறது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வெகுமதி அளிக்கலாம், இது அவர்களின் நேர்மறையான வளர்ச்சியை நேரடியாக பாதிக்கலாம்.
CLOSING THOUGHTS :
இந்த நடைமுறைகளுடன் இல்லற வாழ்க்கையைப் புகுத்துவதன் மூலம், குழந்தைகள் அவர்களின் குணாதிசயங்களைக் கட்டியெழுப்புவதற்கு கற்றலுக்கான அடித்தளத்தை உருவாக்க முடியும். வழிகாட்டும் ஒளி மற்றும் சக்திகளாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் நல்ல பழக்கம், சுதந்திரம், ஆர்வம் மற்றும் நேர்மறை ஆகியவற்றை ஊக்குவிக்க வேண்டும். நீண்ட, சவாலான மற்றும் மகிழ்ச்சியான பயணத்தில் அவர்கள் தங்கள் நண்பர்களாக இருக்க முயற்சிக்க வேண்டும்.