• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    *உள்ளூர் பொருளாதார வளர்ச்சியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்கு" ( Impact of start- up's on Local Economics) -தொழில்முனைவோர் சிறப்பு கருத்தரங்கம்*
    எஸ்.என்.எம். வி. (SNMV) கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை ,நிறுவன புத்தாக்க குழு(Institution Innovation Council)  மாவட்ட தொழில் மையத்துடன்  (District Industries Centre) இணைந்து "உள்ளூர் பொருளாதார வளர்ச்சியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்கு"  ( Impact of start- up's  on Local Economics) எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் போ.சுப்பிரமணி அவர்கள் தலைமை வகித்தார். இயற்பியல் துறைத் தலைவர் க. லெனின்பாரதி வரவேற்று பேசினார். கல்லூரி மேலாண்மைத்துறை இயக்குனர் முனைவர் கே.முத்துகுமார் அவர்கள் வாழ்த்தி பேசினார். தமிழ்நாடு அரசு தொழில் மற்றும் வணிகத்துறை  கோயமுத்தூர் மாவட்ட தொழில் மையத்தின் தொழில் வணிக வளர்ச்சி அதிகாரி( State Business Facilitation Officer).         
    P.சாந்தஷீலா அவர்கள் "உள்ளூர் பொருளாதார வளர்ச்சியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்கு " எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.அவரது சிறப்புரையில் " நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறு,சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.தனிநபர் வளர்ச்சிக்கும் ,நாட்டின் வலுவான பொருளாதார வளர்ச்சிக்கும் மூலமாக MSME நிறுவனங்கள் விளங்குகிறது.மாவட்ட தொழில் மையத்தில் செயல்படுத்தப்படும் சுய தொழில் கடன் திட்டங்கள் பற்றியும்,FaMe TN மூலம் செயல்படுத்தப்படும் தொழில் வணிக திட்டங்கள் குறித்தும் ,
    புதிய தொழில்முனைவோர் மற்றும் புதிய தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் New Entrepreneur cum Enterprise Development Scheme (NEEDS ),
    பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
     Prime Minister Employment Generation Program (PMEGP),
    வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் 
    Unemployment Youth Employment Generation Program (UYEGP) போன்ற திட்டங்கள் குறித்தும், தொழில்முனைவோர்  கடன் மற்றும்  மானியம் பெறுவது எப்படி என்பது குறித்தும் விளக்கி பேசினார்.
     நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.நிகழ்வின் முடிவில் IIC ஒருங்கிணைப்பாளர் எஸ்.செல்வஜெயந்தி அவர்கள் நன்றி கூறினார்.நிகழ்வை இயற்பியல் துறை உதவி பேராசிரியர் எம்.சிவரஞ்சனி ஒருங்கிணைத்தார்.
    A call-to-action text Contact us