• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    தானியங்கள், பயறுகளை முளைகட்டி உண்பதால் கிடைக்கும் நன்மைகள்!

     


    முளைக்கட்டுதல் என்பது பயறுகளை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, நீரை வடிகட்டி, ஊறிய பயறுகளை, ஒரு பருத்தித் துணியில் தளர்வாகக் கட்டி தொங்கவிட வேண்டும். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறைகள், நீரை தெளித்து ஈரப்பதத்தில் வைக்கும் நிலையில், முளையானது 6 முதல் 8 மணி நேரத்திற்குள் தோன்றும்.

    முளை கட்டுவதனால் ஏற்படும் பயன்கள்

    முளைக்கட்டுவதனால் உயிர்ச்சத்து கிடைக்கின்றது. 100 கிராம் பயிரில் 7 முதல் 20 மி.கி உயிர்ச்சத்து கிடைக்கிறது.

    ரைபோஃபிளேவின், நயாசின், கோலின் மற்றும் பையோட்டின் அளவுகள் அதிகரிக்கப்படுகிறது. மாவுச்சத்தானது சர்க்கரைப் பொருட்களாக மாற்றப்படுகிறது.

    பயறுகளில் நச்சுத்தன்மை உண்டாக்கும் பொருட்களையும், நல்ல ஊட்டத்திற்கு எதிராக செயல்படும் காரணிகளையும் குறைக்கிறது.

    திட்ட உணவில், உணவு வகைகளை அதிகரிக்கலாம். ஏனெனில், முளைக்க வைக்கப்பட்ட பயறுகளை, சாலட் மற்றும் பச்சடி போன்ற உணவு வகைகளில் சேர்க்கலாம்.



    இயங்காத நிலையில் உள்ள நொதிகளை செயல் புரிய வைத்து, சீரணித்தலும் நன்கு நடைபெற்று, உடலிற்கு கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துகளின் அளவும் அதிகரிக்கிறது.

    கூட்டு நிலையில் இருக்கும் கால்சியம் (Calcium), துத்தநாகம், இரும்புச்சத்து (Iron) போன்ற தாது வெளியிடப்படுகின்றன. முளை கட்டப்பட்ட பயறுகளை சமைக்காமல் உண்ணலாம். ஏனெனில், முளை கட்டுதலினால் பயற்றின் சுவை மற்றும் தன்மை கூட்டப்படுகிறது.

     

    முளைக்கட்டிய தானியங்களில் புதைந்திருக்கும் நன்மைகள்

    இயற்கை உணவான தானியங்கள் புரதச்சத்தும் (Proteins), ஊட்டச்சத்தும் (Nutrients) நிரம்பியது. அவற்றை முளை கட்டப்படுவதால் செரிமானப்பிரச்சனையை ஏற்படுத்தும் பைரேட்ஸ் என்ற சத்து குறைக்கப்படும், சிக்கலான ஸ்டார்ச்சுகள் உடைக்கப்பட்ட எளிதில் செரிமானம் ஆகிடும்.

    காய்கறி பழங்களை விட அதிக சத்து 

    பச்சைக் காய்கறிகள் (Vegetables) மற்றும் பழங்களை விட அதிக அளவில் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் அவசியமான கொழுப்பு (Fat) ஆகியவை உள்ளன. இவை எடையைக் குறைக்கவும், செரிமானத்தை சீராக்கவும் உதவுகிறது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் மற்றும் கொழுப்புகளை வெளியேற்றுவதில் முளை கட்டிய தானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

     விட்டமின் :

    முளை கட்டிய தானியங்களில், சாதாரண தானியங்களில் உள்ளதை விட 20 மடங்கு அதிகமான அளவில் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக வைட்டமின் (Vitamin A), பி-காம்ப்ளக்ஸ், சி மற்றும் ஆகியவை அதிரிகரிக்கின்றன.

    சரிவிகித உணவு :

    தொடர்ந்து சரிவிகிதமான உணவை சாப்பிட முடியாத காரணத்தால், கொழுப்பை (Fat) எரிக்கக் கூடிய அமினோ அமிலங்கள் (Amin Acids) போதிய அளவு உற்பத்தி ஆகாமல் இருப்பது இன்று பலரும் எதிர் கொள்ளும் உடல் ரீதியான பிரச்னையாகும். முளை கட்டிய தானியங்களை உட்கொள்வதால் உடலுக்கு அவசியமான அமினோ அமிலங்களை போதிய அளவில் சுரக்கச் செய்ய முடியும்.

    எப்போதும் கிடைக்கக் கூடியது:

    காய்கறி பழங்கள் போன்றவற்றில் சில அந்தந்த சீசன்களில் தான் கிடைக்கும். ஆனால் தானியங்கள் அப்படியல்ல அத்துடன் இந்த முளைகட்டிய பயிரை வீட்டிலேயே எளிதாக தயாரித்து விடலாம் அதிக செலவும் ஏற்படாது.

     

    சாப்பிடும் நேரம் :

    ஒரு நாளைக்கு ஏதாவது ஒரு வேளை முளைகட்டிய தானியங்களை எடுத்துக் கொள்ளலாம். பாதி உணவும், பாதி முளைகட்டிய தானியங்களும் இருக்குமாறு சாப்பிட்டால் நல்லது.

    காலை நேரம் :

    முளைகட்டிய தானியங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது காலை உணவுடன் சேர்த்தே சாப்பிட வேண்டும். தானியங்கள் மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் முளைகட்டிய தானியங்களை (Sprouted grains) வேக வைத்து சாப்பிடலாம் .

    தனியாக உண்ணுதல் சரியா:

    எந்த வேளையும் இந்த முளைகட்டிய தானியங்களை மட்டும் உணவாக சாப்பிடக்கூடாது. இதில் பல்வேறு சத்துக்கள் நிறைந்திருந்தாலும் நம் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட்ஸ் (Carbohydrates ), மினரல்ஸ் (Minerals) போன்ற சத்துக்களும் தேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    குழந்தைகள் :

    சில சமயங்களில் முளைகட்டிய தானியங்கள் (Cereals) செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதால் 5 வயதுக்குட்ப்பட்ட குழந்தைகளுக்கு வேகவைக்காமல் கொடுப்பதை தவிர்த்திடுங்கள்.சுத்தம் :

    முளைகட்ட வைக்க சுத்தமான நீரை பயன்படுத்துங்கள். கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் முளைகட்டிய தானியங்கள் (Cereals) வாங்குவதை தவிர்த்திடுங்கள். அதே போல தினமும் ஒரு வகையான தானியங்களை எடுப்பதற்கு பதிலாக ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான தானியங்களை எடுக்கலாம்.


    A call-to-action text Contact us