சூலூரில் புத்தக கண்காட்சி துவக்கம்
சூலூரில் புத்தக கண்காட்சி துவக்கம்
சூலூர் எஸ்.ஆர்.எஸ் திருமண மண்டபத்தில் புத்தக கண்காட்சி செப்டம்பர் 18
முதல் 20 வது வரை முன்று நாட்கள் நடைபெறுகிறது.
சான்றோர் வாழ்க்கை வரலாறுகள், மனம்கவர்ந்த கதைகள், பொதுஅறிவு, இயற்கை விவசாயம்,மருத்துவம், நீர் மேலாண்மை மற்றும் அய்யா அப்துல்கலாம், வெ.இறையன்பு , திரு. சைலேந்திரபாபு போன்றோரின் தன்னம்பிக்கை புத்தகங்கள், கல்கி, சாண்டில்யன் போன்றோரின் வரலாற்று கதைகள், சுஜாதா,
ஜெயகாந்தன் போன்றோரின் புத்தகங்கள், குழந்தைகள் படிக்க தமிழ் ஆங்கில கதைபுத்தகங்கள் என அனைத்து வகையான தமிழ் ஆங்கிலம் புத்தகங்களின் சங்கமமாக புத்தகங்களை கொணர்ந்துள்ளனர்.
இது தவிர இன்னும் நிறைய எழுத்தாளர்களின் படைப்புகள் உள்ளன.
அனைத்து புத்தகங்களும் 10% தள்ளுபடியுடன் கிடைக்கும். வாசிப்பை நேசிப்போர் பயன்படுத்தி கொள்ளலாம்.