தலைவலிக்கு நிரந்தர தீர்வு தரும் பிசியோதெரபி மருத்துவர் மகேந்திரன்
தலைவலிக்கும் கழுத்து வலிக்கும் உண்டான மிக முக்கிய தொடர்பு..?
இவர்களில் பலர், பல வருடங்களாக இந்த நாள்பட்ட தலைவலியால் அவதிப்படுகிறார்கள். பெரும்பாலான நேரங்களில் மருத்துவர்கள், இவர்களுடைய தலைவலியை ஒற்றை தலைவலி எனக்கருதி அதற்கான மருந்துகளையும் பிரயோகித்து அந்த மருந்துகளை அவர்களை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆனால், ஒருவரின் தலைவலி என்பது நோயாளிக்கு நோயாளி, தலைவலியின் தன்மையும் மற்றும் அதன் தீவிரமும் மாறுபடும்.
உதாரணமாக,
ஒருவருடைய தலைவலியானது, தலையின் எல்லா பகுதியிலோ அல்லது தலையின் ஒரு
பகுதியில் மட்டுமோ
இருக்கக்கூடும்.
அதேபோல் சிலருக்கு தலைவலியானது தலையிலுள்ள மண்டை ஓட்டின் ஒரு
பக்கம் மட்டுமோ அல்லது பக்கவாட்டு தலை
பகுதியிலோ அல்லது பின்புற தலை
பகுதியிலோ இருக்கக்கூடும்.
இன்னும் சிலருக்கு கண்களின் பிற்பகுதியில் வலி
இருக்கக்கூடும்
அல்லது தலைவலி வரும் பொழுது கண்களுக்கு பின்புறத்தில் மிக
அதிக வலி இருக்கக்கூடும்.
இந்த நோயாளிகள் தங்களுடைய தலைவலியைப் போக்க, பல்வேறு மருத்துவர்களை சந்தித்தும் பல்வேறு வகையான சிகிச்சையை முயற்சித்தும் தோல்வியுற்று இருப்பார்கள் அதாவது தலை வலிக்கான நிரந்தர தீர்வு இவர்களுக்கு கிடைத்திருக்காது.
இறுதியாக, இவர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் இப்படியே தலைவலியோடு தான் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது இதுதான் என் தலைவிதி என்ற முடிவுக்கு வந்திருப்பார்கள்.
பெரும்பாலான சமயங்களில், எம்.ஆர்.ஐ, சி.டி போன்ற நோய்களைக் கண்டறிய உதவும் உபகரணங்களால் கூட தீவிர மூளை, நரம்பு அல்லது இரத்த நாள சம்பந்தமான பிரச்சனைகளை தெளிவாக கண்டறிவது என்பது இயலாத காரியம்.
எனவே அந்த நோயின் தன்மைகளை கண்டறிவதும் சற்று கடினமானதும் கூட. எனவே இத்தகைய தலைவலியை கொண்ட அனைவரையும் மருத்துவர்கள் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.
மேலும், அவர்களது வலி மற்றும் அறிகுறிகளைக் குறைக்க உதவும் லைஃப் ஸ்டைல் மாடிபிகேஷன் (Lifestyle Modification) எனப்படும் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையை முயற்சி செய்து அதன்படி நடக்கும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உதாரணமாக உணவு பழக்கவழக்கங்களை மாற்றி அமைப்பது, புளிப்பு சம்பந்தமான உணவுகளை தவிர்ப்பது, தொலை தூர பயணத்தை தவிர்ப்பது, ஜங்க் ஃபுட் அல்லது பாஸ்ட் புட் எனப்படும் துரித வகை உணவுகளை அறவே தவிர்ப்பது, அதிக நேரம் வெயிலில் வெளியே சுற்றுவதை தவிர்ப்பது, இது போன்றவற்றைக் கூறலாம். மேற்கூறிய அனைத்தையும் பின்பற்றும் பொழுது இவர்கள் தங்களது தலைவலியை 50 விழுக்காடு வரை கட்டுக்குள் கொண்டு வரமுடியும். இருப்பினும், அவர்களில் பெரும்பாலானோர் இந்த மோசமான நிலையிலே இன்னமும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இவர்களில் பலர் பல மருத்துவர்களைப் பார்த்திருந்தாலும் தங்களுடைய தலை வலியை மட்டும் தீர்க்க முடியவில்லை.
இந்த நோயாளிகளுக்கு ஸ்கேன்களில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கண்டறியப்பட்டதாலும், மருந்துகள் எதுவும் நீண்ட கால தீர்வைக் கொடுக்கவில்லை என்பதாலும்,
அவர்கள் ஒற்றைத் தலை வலியால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.
தலைவலி வருவதற்கான மிக முக்கிய காரணம்?
உங்கள் தலைவலி என்பது கழுத்து கட்டமைப்புகளிலிருந்தும் வெளிப்படலாம், அதை நாங்கள் செர்விகோஜெனிக் தலைவலி (Cervicogenic headache) என்று அழைக்கிறோம்.
குறிப்பாக C1, C2, C3 (cervical spinal nerves) எனப்படும் சர்விகல் ஸ்பைனல் நரம்புகள், கிரேனில் நரம்புகளில் ஒன்றான ட்ரைஜீமினல் நேர்வ் (trigeminal nerve-V) உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பே, தலை வலிக்கும் கழுத்து வலிக்கும் உண்டான மிக முக்கிய தொடர்பாக
அமைவதாலும் மற்றும் முன்னரே சர்விகல் டிஸ்கப்ரொலாப்ஸ், கழுத்து எலும்பு தேய்மானம் அல்லது கழுத்து நரம்பு பிரச்சனை, இதுபோன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்களின் டிரைஜெமினல் நரம்புகள் (trigeminal nerve) மிக அதிக அளவு தூண்டப்படுகிறது. இதன் காரணமாகவே பலருக்கும் தலைவலி வருகிறது. இதுவே தலைவலி வருவதற்கான மிக முக்கிய காரணமாகவும் அமைகிறது.
இதன் காரணமாகவே பலரும் தங்கள் தலைவலியை மைக்ரேன் (Migraine) எனும் ஒற்றைத் தலைவலியாக கருதுகிறார்கள். கூடுதலாக, இந்த நோயாளிகளுக்கு வாந்தி உணர்வு மற்றும் மயக்க உணர்வு கூட ஏற்படலாம்.
நமது நவீன வாழ்க்கை முறை காரணமாக, இளைஞர்கள் உட்பட அதிகமானோர் கழுத்து வலியால் பாதிக்கப்படுகின்றனர். சர்வதேச தலைவலி சங்கத்தின் (International Headache Society ) படி தலைவலி முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தலைவலி என பரவலாக வகைப்படுத்தப்படுகிறது.
இரண்டாம் நிலை தலைவலி பல காரணங்களால் ஏற்படுகிறது மற்றும் முக்கிய காரணங்களில் ஒன்று கழுத்து தொடர்பான தலைவலி.
உங்களுடைய தலைவலிக்கு மூலகாரணம் கழுத்து வலி தான் என்பதை எப்படி கண்டறிவது…?
கழுத்து வலி அல்லது கழுத்து வலி அதிகமாக இருக்கும் போது உங்களுக்கு தலைவலி வரும்.
கழுத்து அசைவுகள் அல்லது கழுத்து தோரணையை மாற்றுதல் (அதிகரித்தல் அல்லது குறைத்தல்) போன்ற காரணிகள் உங்களது கழுத்து வலியை உருவாக்கும் அல்லது அதிகப்படுத்தும்.
உங்களுக்கு தலைவலி இருக்கும்போது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திசைகளில் கழுத்தின் இயக்கம் குறைவாக இருக்கும்.
சில கழுத்து தசைகளை அழுத்துவது (ஸ்டெர்னோக்ளிடோமாஸ்டாய்டு, மேல் ட்ரெபீசியஸ், ஸ்ப்ளெனியஸ் கேபிடிஸ் போன்றவை) அல்லது தொடுவது போன்ற செயல்களால் உங்கள் தலைவலி அறிகுறிகளை அதிகரிக்கும்.
கழுத்து தசைகளில் உள்ள டிகர்பாயிண்ட் (trigger
point) போன்ற காரணங்களால் கூட தலைவலி உண்டாக கூடும்.
மேற்கூறிய காரணங்களில் ஏதாவது உங்களுக்கு பொருந்தினால் உங்களுக்கு இது ஒரு நல்ல செய்தி.
ஏனென்றால் இது கண்டிப்பாக கழுத்து தொடர்பான தலைவலி என்பதால் எளிதில் குணப்படுத்த முடியும், மேலும் நீங்கள் வாழ்நாள் முழுவதும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை.
எனவே உங்களது தலைவலியை போக்க எங்களது சுகம் பிசியோதெரபி மற்றும் ஸ்லிம்மிங் மையத்தை அணுகவும்
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நாங்கள் கழுத்து தசைகளுக்கான பிசியோதெரபி பயிற்சிகள் (Neck Exercises) நோயின் தன்மை குறித்த அறிவு (Patient Education), பாஸ்டர் கரக்ஷன் (Posture Correction), மேனுவல் ரிலீஸ் (Manual Therapy), உலர் ஊசி சிகிச்சை (Dry Needling), கப்பிங் தெரபி (Cupping Therapy), மயோபேசியல் ரிலீஸ் (Myofascial Release) ஆகியவற்றை உள்ளடக்கிய முறையாக கொடுக்கப்பட்ட பிசியோதெரபி சிகிச்சைகள் மூலம் உங்கள் தலைவலியை முற்றிலுமாக குணப்படுத்தவும் மற்றும் நிரந்தர தீர்வு அளிப்போம்.
பிசியோதெரபியின் செயல்திறனைக வலுப்படுத்தக்கூடிய நம்பிக்கைக்குரிய அறிவியல் தரவுகளும் ஏற்கனவே சான்றுகளாக உள்ளன என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து என்பது இல்லை.
என்றும் மருத்துவசேவையில் உங்கள்
Dr.M. மகேந்திரன்,
M.P.T., M.Sc., CDNT,PGDOSIM,NKT,
CMFCP
சுகம் பிசியோதெரபி கிளினிக்
மற்றும் ஸ்லிம்மிங் மையம்
நலவிந்த் மருத்துவ மையம்,
ஹோப் காலேஜ் சிக்னல்,
பீளமேடு, கோவை-641004.
தொடர்புக்கு : 75028 88660, 63695 19098