• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    சாதிக்க இதெல்லாம் ஒரு தடையல்ல!

    UPSC தேர்வில் வெற்றி பெற்று சாதித்த கோவை இளைஞர் ரஞ்சித்!



     

    சிறிய காரியங்களில் தட்டி விழுந்தாலும் கடுமையாக உழைத்தால் நிச்சயம் பெரிய வெற்றியை அடைவோம் என்பதற்கு உதாரணமாக மாறியுள்ளார் கோயம்புத்தூர் இளைஞர்.

     

    கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் அமிர்தவள்ளி தம்பதியின் இரண்டாவது மகன் ரஞ்சித். இவர் பிறக்கும் போதே செவித்திறன் குறைபாட்டோடு பிறந்துள்ளார். இதனால் காது கேளாதோருக்கான சிறப்புப் பள்ளியில் பயின்ற ரஞ்சித், 12ம் வகுப்பில் காது கேளாதோருக்கான பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தினார்.

    இதனையடுத்து 2016 ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நேரில் அழைத்துப் பாராட்டினார். பின்னர் பி.எஸ்.ஜி கல்லூரியில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்த ரஞ்சித், கல்லூரி இறுதி ஆண்டில் வளாக நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டார். அப்போது செவி குறைபாட்டைக் காரணம் காட்டி அவருக்கு வேலை கொடுக்க நிறுவனம் ஒன்று மறுத்துள்ளது.

    ரஞ்சித், எனது திறமையைக் காட்ட ஒரு வாய்ப்பு கொடுங்கள், என்னால் நிச்சயம் நன்றாகச் செயல்பட முடியும் எனப் பலமுறை எடுத்துக் கூறியுள்ளார். ஆனால் ரஞ்சித்தின் கோரிக்கையை அந்த நிறுவனம் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. இந்நிலையில் தன்னாலும் சாதிக்க முடியும் என்ற உறுதியை மனதில் நிறுத்தி கொண்ட ரஞ்சித், UPSC தேர்வுக்குப் படிக்க ஆரம்பித்துள்ளார்.

    விடா முயற்சியுடன் பயின்ற ரஞ்சித், தற்போது UPSC தேர்வில் இந்திய அளவில் 750 இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். "லிப் ரீடிங்" முறையில் உதட்டு அசைவுகளை வைத்தே பிறர் பேசுவதற்குப் பதில் அளித்து வரும் ரஞ்சித், UPSC தேர்வினை தமிழில் எழுதியதாகவும், மொழி தனக்கு  எங்கும் ஒரு தடையாக இல்லை எனவும் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

    மாற்றுத் திறனாளியான ரஞ்சித் UPSC தேர்வில் வெற்றி பெற்றதற்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்ந்து தெரிவித்துள்ள நிலையில், 'பொது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும்  இடையிலான இடைவெளியைக் குறைவாக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும், மாற்றுத் திறனாளிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன் என என்று கூறிய ரஞ்சித், தன்னை வாழ்த்திய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

    இரண்டாவது முயற்சியிலேயே ரஞ்சித் UPSC தேர்வில் வெற்றி பெற்று பலருக்கும் முன்னுதாரணமாக மாறியுள்ள நிலையில், சாதிக்க வேண்டும் என்ற  வெறியும், நேரத்தை வீணாக்காமல்  புத்தகம் படிக்கும் பழக்கமும் ரஞ்சித் வெற்றி பெற உதவியதாக அவரது பெற்றோர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்கள். அன்று உங்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்ள முடியாது என நிறுவனம் கூறிய நிலையில், சோர்ந்து அப்படியே உட்கார்ந்து விடாமல் அதே வெறியுடன் சாதித்துக் காட்டியுள்ளார் ரஞ்சித்.

     

    A call-to-action text Contact us