• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவிப்பு :                                                   சூலூர் முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை 





    *🛑⚡ஆண்டுக்கு ரூ.50,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்*

    *⭕பிரகதி திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு 2021-22ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான இணையதள விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது.*

    *⭕பொறியியல் படிப்புகளில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஏஐசிடிஇ சார்பில் பிரகதி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பிரகதி உதவித்தொகைக்கு முதலாம் ஆண்டு பொறியியல் மாணவிகளும், டிப்ளமோ முடித்துவிட்டு நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் பொறியியல் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.*

    *⭕பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண்களைப் பொறுத்தே இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகளுக்குக்கூட பிரகதி உதவித்தொகை வழங்கப்படுகிறது.*

    *⭕ரூ.8 லட்சத்துக்கும் குறைவான குடும்ப ஆண்டு வருமானம் உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். அரசு வழங்கிய வருமானச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். ஆன்லைன் வழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.*

    *⭕புதிதாக விண்ணப்பிப்பவர் மட்டுமின்றி, ஏற்கெனவே கல்வி உதவித்தொகை பெறுபவர்களும் விண்ணப்பங்களைப் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பிரகதி திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 5 ஆயிரம் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.*

    *⭕விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாணவியின் ஆதார் எண், கல்லூரிச் சான்றிதழ் ஆகிய ஆவணங்கள் தேவை.*

    *⭕விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 நவம்பர் 2021*

    *⭕பிரகதி திட்டத்தில் தேர்வாகும் மாணவிகளுக்கு உதவித்தொகையாக 4 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்குத் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்குத் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.*

    *⭕மேலும் விவரங்கள் அறிய 👇🏻*

    https://scholarships.gov.in/fresh/newstdRegfrmInstruction

    செப்டம்பர் 30: சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்


     

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலக மொழி பெயர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது


    சர்வதேச மொழிபெயர்ப்புத் தினம் என்பது கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டது.

    உலக அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக சர்வதேச ராஜதந்திர பணிகளில் மொழிபெயர்ப்பு வல்லுனராக பணியாற்றும் மொழிபெயர்ப்பாளர்களை போற்றுவவதற்காகவே இந்த தினம் அங்கீகரிக்கப்படுகிறது


    மொழிபெயர்ப்பாளரின் தலைவராக கருதப்படும் பைபிள் மொழிபெயர்ப்பாளர் ஜெரோல் என்பவரின் நினைவாக செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


     


    மனித நேயம்.


    ஆப்பிரிக்காவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஓர் அரசர் இருந்தார், அவரிடம் பத்து காட்டு நாய்கள் இருந்தன.
    தவறு செய்த தனது ஊழியர்களை அந்த காட்டுநாய்களுக்கு இரையாக்குவார்.
    ஒரு நாள் வேலைக்காரர்களில் ஒருவர் தவறான ஒரு கருத்தை சொன்னார், அரசருக்கு கோபம் வந்துவிட்டது.
    இவனை நாய்களுக்கு தூக்கி எறியுங்கள்.”
    என்று கட்டளையிட்டார்.
    வேலைக்காரன் கெஞ்சினான்,
    நான் உங்களுக்கு பத்து
    வருடங்களாக சேவை செய்தேன், நீங்கள் இப்படி ஒரு தண்டனையை
    எனக்குத் தரலாமா?
    தயவுசெய்து என்னை அந்த நாய்களுக்கு தூக்கி எறிவதற்கு முன் பத்து நாட்கள் அவகாசம்
    ஒன்று தாருங்கள்! ”
    ராஜா ஒப்புக் கொண்டார்.
    அந்த பத்து நாட்களில், வேலைக்காரன் நாய்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவலரிடம் சென்று, அடுத்த பத்து நாட்களுக்கும் தான் அந்த நாய்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறினான்.
    காவலர் குழப்பமடைந்தார், ஆனாலும் ஒப்புக்
    கொண்டார்.
    அந்த வேலைக்காரன் அந்த நாய்களுக்கு உணவளித்தான், அவற்றைச் சுத்தம் செய்தான், குளிப்பாட்டவும் தொடங்கினான்.
    அவற்றிற்கு அனைத்து விதமான வசதிகளையும் வழங்கி அன்பு காட்டினான்.
    பத்து நாட்கள் முடிந்தது.
    வேலைக்காரனைத் தண்டிப்பதற்காக நாய்களிடம் தூக்கிஎறியும் படி அரசர் உத்தரவிட்டார்.
    அவன் தூக்கி எறியப்
    பட்ட போது, ​​அவை ஓடி
    வந்து அவனின் கால்களை நக்கத் தொடங்கின.
    இதைக் கண்டு அனைவரும் வியந்தனர்!
    இதைப் பார்த்து திகைத்த அரசன்,
    "என் நாய்களுக்கு என்ன நேர்ந்தது?"என்றான்.
    வேலைக்காரன் பதிலளித்தான்,
    "நான் பத்து நாட்களுக்கு
    மட்டுமே இந்த நாய்களுக்கு சேவை செய்தேன், அவை என் சேவையை மறக்கவில்லை.
    நான் உங்களுக்கு பத்து
    வருடங்கள் சேவை செய்தும் என் முதல் தவறைக் கூட
    மன்னிக்காமல் நான் உங்களுக்கு செய்த அனைத்தையும் மறந்து
    என்னை தண்டிக்க
    உத்தரவிட்டீர்கள்!"
    அரசர் தனது தவறை உணர்ந்து வேலைக்காரனை விடுவிக்க உத்தர விட்டார்.
    நம்மிலும் எத்தனையோ
    பேர் இப்படி இருக்கிறோம்.
    ஒருவர் செய்த ஒரு தவறுக்காக, அவர் எமக்கு செய்த உதவிகளை எல்லாம் மறந்து அவரை வாழ்நாளெல்லாம் ஒதுக்கி வாழும் எத்தனையோ பேர் எம்மிலும் இல்லாமல் இல்லை.
    இருக்கிறார்கள்.
    தவறு செய்வது மனித சுபாவம்.
    இதை உணர்ந்து தவறுகளை மன்னிக்கப் பழகுவதும் மனித சுபாவம்•••
    மன்னிப்போம்•••
    மறப்போம்•••!

    சாதிக்க இதெல்லாம் ஒரு தடையல்ல!

    UPSC தேர்வில் வெற்றி பெற்று சாதித்த கோவை இளைஞர் ரஞ்சித்!



     

    சிறிய காரியங்களில் தட்டி விழுந்தாலும் கடுமையாக உழைத்தால் நிச்சயம் பெரிய வெற்றியை அடைவோம் என்பதற்கு உதாரணமாக மாறியுள்ளார் கோயம்புத்தூர் இளைஞர்.

     

    கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் அமிர்தவள்ளி தம்பதியின் இரண்டாவது மகன் ரஞ்சித். இவர் பிறக்கும் போதே செவித்திறன் குறைபாட்டோடு பிறந்துள்ளார். இதனால் காது கேளாதோருக்கான சிறப்புப் பள்ளியில் பயின்ற ரஞ்சித், 12ம் வகுப்பில் காது கேளாதோருக்கான பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தினார்.

    இதனையடுத்து 2016 ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நேரில் அழைத்துப் பாராட்டினார். பின்னர் பி.எஸ்.ஜி கல்லூரியில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்த ரஞ்சித், கல்லூரி இறுதி ஆண்டில் வளாக நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டார். அப்போது செவி குறைபாட்டைக் காரணம் காட்டி அவருக்கு வேலை கொடுக்க நிறுவனம் ஒன்று மறுத்துள்ளது.

    ரஞ்சித், எனது திறமையைக் காட்ட ஒரு வாய்ப்பு கொடுங்கள், என்னால் நிச்சயம் நன்றாகச் செயல்பட முடியும் எனப் பலமுறை எடுத்துக் கூறியுள்ளார். ஆனால் ரஞ்சித்தின் கோரிக்கையை அந்த நிறுவனம் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. இந்நிலையில் தன்னாலும் சாதிக்க முடியும் என்ற உறுதியை மனதில் நிறுத்தி கொண்ட ரஞ்சித், UPSC தேர்வுக்குப் படிக்க ஆரம்பித்துள்ளார்.

    விடா முயற்சியுடன் பயின்ற ரஞ்சித், தற்போது UPSC தேர்வில் இந்திய அளவில் 750 இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். "லிப் ரீடிங்" முறையில் உதட்டு அசைவுகளை வைத்தே பிறர் பேசுவதற்குப் பதில் அளித்து வரும் ரஞ்சித், UPSC தேர்வினை தமிழில் எழுதியதாகவும், மொழி தனக்கு  எங்கும் ஒரு தடையாக இல்லை எனவும் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

    மாற்றுத் திறனாளியான ரஞ்சித் UPSC தேர்வில் வெற்றி பெற்றதற்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்ந்து தெரிவித்துள்ள நிலையில், 'பொது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும்  இடையிலான இடைவெளியைக் குறைவாக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும், மாற்றுத் திறனாளிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன் என என்று கூறிய ரஞ்சித், தன்னை வாழ்த்திய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

    இரண்டாவது முயற்சியிலேயே ரஞ்சித் UPSC தேர்வில் வெற்றி பெற்று பலருக்கும் முன்னுதாரணமாக மாறியுள்ள நிலையில், சாதிக்க வேண்டும் என்ற  வெறியும், நேரத்தை வீணாக்காமல்  புத்தகம் படிக்கும் பழக்கமும் ரஞ்சித் வெற்றி பெற உதவியதாக அவரது பெற்றோர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்கள். அன்று உங்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்ள முடியாது என நிறுவனம் கூறிய நிலையில், சோர்ந்து அப்படியே உட்கார்ந்து விடாமல் அதே வெறியுடன் சாதித்துக் காட்டியுள்ளார் ரஞ்சித்.

     

    புரட்சி என்றால் பகத்சிங்



    ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த சில மணி நேரங்களில் அந்த இடத்தைப் பார்வையிடுகிறார். இந்திய மக்களின் ரத்தம் தோய்ந்த அம்மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து, கண்ணாடி பாட்டிலில் போட்டு, `இந்திய விடுதலையே எம் லட்சியம்' என அம்மண்ணின் மீது சத்தியம் செய்கிறார்.

    புரட்சியாளர் என்று சொன்னாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பகத்சிங்தான். ஆம். தன்னுடைய கடைசி மூச்சின்போதும் தன்னுடைய பாதங்கள் இந்திய மண்ணில் இருக்க வேண்டும் என நினைத்தவர். தூக்கில் தொங்கி சொந்த மண்ணில் கால்படாமல் சாவதை விரும்பாத அவர், துப்பாக்கிக் குண்டு ஏந்தி உயிரிழக்கத் தயாராக இருந்தார். தன் உயிர் போகும் கடைசி தருணத்திலும் இந்தியாவின் விடுதலையைப் பற்றி மட்டுமே நினைத்தார்.

     


    1907-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி பஞ்சாப் மாநிலம் லாயல்பூரில், சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த தினம் அவரின் தந்தை மற்றும் அவரின் இரு மாமாக்கள் சிறையிலிருந்து வெளியான சிறந்த நாளாக இருந்தது. சிறையிலிருந்து வெளிவந்த கிசன் சிங் தன் மகனுக்கு பகத் சிங் என்று பெயரிட்டார். பகத் என்றால் அதிர்ஷ்டம் என்று பொருள்.

    இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத்சிங், இளம் வயதிலேயே ஐரோப்பியப் புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடைமை கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார்.

     


    இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார். 1919-ல், தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த சில மணி நேரங்களில் அந்த இடத்தைப் பார்வையிடுகிறார். இந்திய மக்களின் ரத்தம் தோய்ந்த அம்மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து, கண்ணாடி பாட்டிலில் போட்டு, `இந்திய விடுதலையே எம் லட்சியம்' என அம்மண்ணின் மீது சத்தியம் செய்கிறார். 14-வது வயதில் 'வந்தே மாதரம்' என்று காகிதத்தில் எழுதி, அந்தக் காகிதங்களைக் கொண்டுபோய் சுவர்களில் ஒட்டுகிறார் பகத்சிங்.

    காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட பகத்சிங், சௌரிசௌரா நிகழ்வுக்குப் பிறகு, அகிம்சை வழியில் போராடினால் சுதந்திரம் கிடைக்காது என்று எண்ணினார். தோழர்களுடன் இணைந்து `இந்தியக் குடியரசு சங்கம்’ (Hindustan Republic Association) எனும் அமைப்பில் ஒருவராக இணைகிறார். பின்னர், `நவஜவான் பாரத் சபை' என்ற இளைஞர்கள் அமைப்பை உருவாக்கினார்.

     


    `விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் சுதந்திர குடியரசை நிறுவுவது, ஓர் ஐக்கிய இந்திய அரசை நிறுவிட இளைஞர்களிடையே தேசப்பற்றை ஊட்டுவது, மதவாதப் போக்குகளற்ற தொழில் மற்றும் சமூக இயக்கங்களை ஆதரிப்பது, தொழிலாளர்களையும் விவசாயிகளையும் திரட்டுவது' போன்ற அரசியல் நோக்கங்களுடன் இளைஞர்கள் செயல்படத் தொடங்கினர்.



    'நமது இறுதி லட்சியம் சோசலிசம்' என்பதை வலியுறுத்திய பகத்சிங், 1928 செப்டம்பர் 8, 9-ம் தேதிகளில் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் கூடி 'இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம்' (HRSA) என்று அந்த அமைப்பின் பெயரை மாற்றினார்.

    ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவை விடுதலை அடையச் செய்வது மட்டுமல்ல, இந்திய முதலாளிகளிடமிருந்தும் உழைக்கும் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் பகத்சிங். சைமன் கமிஷனில் சட்டவரையறை கொண்டுவரப்பட்டபோது, அதை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்கள் நாடு முழுவதும் போராடினர். இதில், பிரிட்டிஷ் போலீஸார் தடியடி நடத்த உத்தரவிட, அந்தச் சம்பவத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் லாலா லஜபதி ராய் உயிரிழந்தார்.



    இதனால், கோபமடைந்த புரட்சியாளர்களான பகத்சிங் மற்றும் அவரது நண்பர்கள் ஸ்காட்டை கொல்வதற்குப் பதிலாக துணை காவல் மேலதிகாரியான சாண்டோஸ் என்னும் ஆங்கிலேயரைச் சுட்டுக்கொன்று தலைமறைவாயினர். பின்னர், ஆங்கிலேயர் சட்டங்களை எதிர்த்து குண்டுவீச்சில் ஈடுபட்டனர். சாண்டோஸைக் கொன்றதற்கும், குண்டுவீச்சில் ஈடுபட்டதற்கும் 1931-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி தூக்கிலிடப்பட்டார் பகத்சிங்.

    அன்றைக்கு பகத் சிங் கொஞ்சம் தாமதமாகத்தான் தூக்கு மேடை வந்தார். ``ஒரு புரட்சியாளர் இன்னொரு புரட்சியாளருடன் பேசிக்கொண்டிருக்கிறேன். வந்து விடுகிறேன்’’ என்று அவர் கூறும்போது, அவர் கையிலிருந்தது லெனினின் `அரசும் புரட்சியும்நூல்.

    அவரது இறப்பு, பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட வைத்தது. இறப்பதற்கு முன் தன்னுடைய அம்மாவுக்கு எழுதிய கடிதத்தில், ``என் பிணத்தை வாங்க வராதே அம்மா. நீ என் பிணத்தை வாங்கினால் கண்ணீர் விட்டு அழுவாய். நீங்கள் அழுது என்னைக் கஷ்டப்படுத்தி விடாதீர்கள். நீங்கள் அழக் கூடாது. என்னை மகிழ்ச்சியாக அனுப்பி வைக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்திய விடுதலை இயக்கத்தின் முக்கிய புரட்சியாளராக இருந்ததால் இவர், சாஹீத் பகத் சிங் என்று மக்களால் அழைக்கப்படுகிறார்.



    வெறும் 23 வருடம் வாழ்ந்த பகத்சிங்கை, மக்கள் இன்றுவரை மறக்கவில்லை. அவருடைய புரட்சி, சுதந்திரப் போராட்டத்துக்கு உந்துசக்தியாக இருந்தது. அவரை, நிராகரித்துவிட்டு வரலாற்றை யாராலும் பேசிவிட முடியாது. அவரைப் பற்றி எழுத்துகளில் இருப்பதைவிடவும் எழுதப்படாமல் போனதே அதிகம்.

     


    A call-to-action text Contact us