• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    கோவை மாநகரின் தென்திசையில் உள்ள கிணத்துக்கடவு எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிறிய குன்று, ‘பொன்மலை’.



    இம்மலையில் முருகனின் திருப்பாதங்கள் பதிந்துள்ளன. பண்டைக்காலத்தில் இம்மலையில் சந்தன மரங்கள் வளர்ந்திருந்ததாக அறியப்படுகிறது. இம்மலையில் பொன் விளைந்ததாலேயே பொன்மலை எனப் பெயர் பெற்றது.

    கொங்கு மண்டல சிற்றரசர் பரம்பரையில் வந்த கோப்பண மன்றாடியார், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவிற்கு பழநி சென்று தண்டாயுதபாணி சுவாமியை தரிசித்து வருவார். அவர் கனவில் பழநி ஆண்டவர் தோன்றி, ‘வடக்கே செல்லும் பாதையில் ஒரு குன்று உள்ளது. அக்குன்றின் உச்சியில் சந்தன மரமும் அதன் அடியில் பொன்னும் உள்ளன. அருகே என் திருப்பாதங்கள் பதிந்துள்ளன. அங்கே வந்து என்னைத் தரிசிக்கவும்,’ எனக் கூறினார்.

    அதன்படி கோப்பண மன்றாடியார் அத்திருப்பாதங்களுக்கு பூஜையும் உற்சவமும் நடத்தி வந்தார். இந்நிலையில்தான் மைசூர் மகாராஜா ஆணைப்படி திருக்கோயிலும் கட்டப்பட்டது. மைசூர் திவான் ஊர் திரும்பும்போது கோயில் நிர்வாகத்தை கோப்பண்ண மன்றாடியார் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார்.
    இன்றுவரை இப்பரம்பரையைச் சார்ந்தவர்கள் தான் கோயில் திருப்பணிகளைச் செய்து வருகின்றனர். இக்கோயிலில் குடிகொண்டுள்ள வேலாயுத சுவாமியை அருணகிரிநாதப் பெருமான் தரிசித்து மகிழ்ந்திருக்கிறார். பிரதான கோயிலின் வடகிழக்குப் பகுதியில் என்றும் வற்றாத வள்ளி சுனை (தீர்த்தம்) உள்ளது. தினசரி அபிஷேகத்திற்கு இந்த தீர்த்தம்தான் பயன்படுத்தப்படுகிறது.

    திருக்கோயிலின் முன்பு கொடிக்கம்பம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கோயிலின் உள்ளே, வேலாயுத சுவாமி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் வலது கையில் தண்டம் ஏந்தி, இடது கையை இடுப்பிலும் வைத்தபடி அற்புத கோலம் காட்டுகிறார். ராஜா, வேடன் என்று இரு அலங்காரங்களில் முருகன் காட்சிதரும் ஒப்பற்ற அழகை கண்குளிர பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

    பிரதான சந்நதியின் தென்பகுதியில் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி சந்நதிகள் அமைந்துள்ளன. கோயிலின் பின்புறம் முருகன் பாதம் பதிந்த பகுதியை ஒரு சந்நதியாக அமைத்துள்ளனர்.

    கோவை-பொள்ளாச்சி பாதையில் கோவையிலிருந்து 23வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது, கிணத்துக்கடவு.
    ஆயுளை கூட்டும் ஆயிரமாயிரம் மருத்துவ குணங்கள் உள்ள ஆவாரம் பூவிவைபற்றி தெரியுமா? !


    நமது நாட்டில் பலவிதமான மூலிகைகள் பயிராகின்றன. இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அதிக விலைக்கும் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் தான் நமது வீட்டின் அருகிலேயே இருக்கும் மூலிகை கூட உபயோகப்படுத்தாமல் இருக்கிறோம். ஆரோக்கியமாக வாழ நீங்கள் காடுகளில் உள்ள மூலிகைகளை தேடி போய் பெற வேண்டும் என்பதில்லை. நமது கண் அருகே இருக்கும் ஆவாரம் பூ செடியே போதுமானது.
    ஆரோக்கியமாக வாழ நீங்கள் காடுகளில் உள்ள மூலிகைகளை தேடி போய் பெற வேண்டும் என்பதில்லை. நமது கண் அருகே இருக்கும் ஆவாரம் பூ செடியே போதுமானது.
    இன்று உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையானோர் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சக்கரை நோய்க்கும் ஆவராம் பூ மருந்தாக உள்ளது. இந்த பகுதியில் ஆவாரம் பூவின் மருத்துவ பயன்களை பற்றி காணலாம்.
    1. ஆவாரம் பூ :
    ஆவாரம் பூ கடுமையான வறட்சியில் கூட வளர கூடிய ஒரு மருத்துவ தாவரம். இதன் இலை, பூ, காய், பட்டை, வேர் என ஐந்தும் மருத்துவ குணம் கொண்டது. “ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ” என்று ஒரு பழமொழி இருக்கிறது. அந்த அளவுக்கு ஆவாரம் பூ உடலில் உள்ள நோய்களை குணப்படுத்த கூடிய மருத்துவ குணங்களை கொண்டது.
    2. ஆண்டி ஆக்ஸிடண்டுகள் :
    ஆவாரம் பூவில் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடண்டுகள் அடங்கியுள்ளன. டென்ஸ்போயிட்கள், டானின்கள், ஃபிளாவனாய்டுகள், சபோன்கள், கிளைக்கோசைடுகள் மற்றும் ஸ்டீராய்டுகள் ஆகியவை அடங்கியுள்ளன
    3. மலச்சிக்கல் :
    மலச்சிக்கல் பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. தினமும் இரண்டு முறை மலம் வெளியேறினாலே உடலில் பல நோய்கள் அண்டாது. உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தால் ஆவாரம் பூ தேனீரை பருகுங்கள்.
    4. தொற்றுக்களுக்கு எதிரி :
    புதிய ஆவாரம் பூக்கள் சருமத்தில் ஏற்படும் பூஞ்சை மற்றும் நுண்ணுயிர் தொற்றுக்களுக்கு எதிரியாக விளங்குகிறது. இதனை சருமத்தின் மீது தடவலாம் அல்லது தேநீராகவும் பருகலாம்.
    5. சிறுநீரக பாதை தொற்றுக்கள் :
    ஆவாரம் பூ தேநீரை பருகுவதால் சிறுநீர் பாதையில் உள்ள தொற்றுக்கள் நீங்கும். இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். இரத்தமும் பெருகும்.
    6. டைப்பாய்டு மற்றும் காலரா :
    அதீத சக்திகள் கொண்ட ஆவாரம் பூ தேநீரை நீங்கள் தொடர்ந்து பருகுவதால், காலரா மற்றும் டைப்பாய்டு போன்ற நோய்களும், காய்ச்சல்களும் கூட குணமாகும்.
    7. சக்கரை நோய் :
    சக்கரை நோய்க்கு பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆவாரம் பூ பட்டை மிக சிறந்த பலனை தரும். இந்த ஆவாரம் பட்டை நீரானது சக்கரை நோய் மட்டுமில்லாமல் மேக ஓட்டம் , ரத்த மூத்திரம், பெரும் தாகம் ஆகியவற்றையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
    8. செய்முறை:
    அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மண் பாத்திரத்தில் போட்டு அரை லிட்டர் நீர் விட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினமும் இரண்டு முறை 1.5 அவுன்ஸ் வீதம் குடித்துவர சக்கரை நோய், மேக ஓட்டம் , ரத்த மூத்திரம், பெரும் தாகம் ஆகியவை குணமாகும்.
    9. தங்கமான நிறம் :
    ஆவாரம் பூ பொடியை மேனிக்கு பயன்படுத்தினால் மேனி பொன் நிறமாகும். இதனை குளியல் பொடியுடன் சேர்த்து பயன்படுத்தலாம். அல்லது ஆவாரம் பூ தேநீர் குடித்தாலும் இரத்தம் சுத்தமாகி மேனி தங்க நிறம் பெரும்.
    10. ஆவாரம் பூ தேநீர் :
    காய வைத்த ஆவாரம் பூ அல்லது ஆவாரம் பூ பொடியை நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால், உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.
    11. கழிவுகளை வெளியேற்றும் :
    ஆவாரம் பூ தேநீரை தொடர்ந்து பருகுவதால், உடலில் உள்ள நச்சுகள் வியர்வை மூலம் வெளியேறிவிடும். அதுமட்டுமின்றி குடற்ப்புண், வயிற்று புண் ஆகியவை குணமாகும்.
    12. பெண்களுக்கு உதவும் :
    பெண்கள் இந்த ஆவாரம் பூ தேநீரை அருந்துவதால், உடல் வசிகரமாவதுடன், மாதவிடாய் பிரச்சனை, அதிக உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல் ஆகிய பிரச்சனைகள் அறவே நீங்கும்.

     வாஷிங் பவுடர் நிர்மா, வாஷிங் பவுடர் நிர்மா... 

    வீடுவீடாக வர்த்தகம் செய்து "" நிர்மா சோப்பு "" நிறுவனத்தை

    வளர்த்த கர்சன்பாய் படேல் .
    தன் சொந்த குழந்தையை போல பாவித்து வளர்த்தெடுத்துள்ளார் என்றால் மிகையாகாது.
    ‘சப்கி பசந்த் நிர்மா’ அதாவது ‘எல்லாருடைய விருப்பமும் நிர்மா’ என்ற பொருள் தரும் விளம்பர வாசகத்தை அறியாதோர் இருக்கமுடியாது.
    வீடு வீடாக சென்று விற்றுவந்த அந்த பொருள் இன்று இந்திய சோப்பு
    சந்தையில் .,
    20 சதவீத பங்கையும், சலவை சோப்பு சந்தையில் 35 சதவீத பங்கையும் வகிக்கிறது.
    கர்சன்பாய் 1969-ல் நிர்மா எனும் இந்திய சலவை சோப்பு தொழிலை தொடங்கினார்.
    அப்போது வெகு சிலரே இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர். அதுவும் பெரும்பாலும் சர்வதேச நிறுவனங்கள் ஆகும்.
    நடுத்தர வர்கம் மற்றும் ஏழை மக்களை குறிவைத்து இருந்த வர்த்தகத்தில், குறைந்த விலையில் சலவை சோப்புக்கான தொழில் வாய்ப்பு அதிகமாக இருந்தது.
    கர்சன்பாய், சலவை சோப்பை தனது வீட்டின் பின்புறத்தில் தயாரித்து, அகமதாபாத் அருகில் உள்ள கோக்ரா எனும் இடத்தில் விற்று வந்தார்.
    வீடு வீடாக சென்று ஒரு கிலோ சோப்பை 3 ரூபாய்க்கு விற்று வந்தார். அப்போது பிரபல ப்ராண்டுகள் .,
    ஒரு கிலோ சோப்பை 13 ரூபாய்க்கு விற்றுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    80’ களில் நிர்மா சந்தையில் நீடிக்க எப்படி போராடி வந்தது என்று பிசினஸ் ஸ்டாண்டர்டு பத்திரிகை செய்தி வெளியிட்டது.
    அப்போது தான் கர்சன்பாய் ஒரு அற்புதமான ஐடியாவை கொண்டு
    வந்தார்.
    நிர்மாவை பிரபலப்படுத்த மாபெரும் விளம்பர பிரச்சாரம் ஒன்றை
    தயார் செய்தார்.
    அதில் வெள்ளை ப்ராக் அணிந்த தனது மகளின் படத்தை போட்டு, மனதை கவரும் பாடல் ஒன்றை தயார் செய்து விளம்பரப்படுத்தினார்.
    அந்த நிர்மா பாடல் இந்தியா முழுதும் பிரபலமாகி மக்கள் அனைவரும் அந்த சோப்பை வாங்க கடைகளில் குவிந்தனர்.
    இருந்த சோப்புகள் விற்று தீர்ந்தது. நிர்மாக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து தனது உற்பத்தியை பெருக்கினார் கர்சன்பாய்.
    அந்த வருடம், சலவை சோப்புகளின் விற்பனையில் நிர்மா முதல் இடத்துக்கு சென்றது.
    அவரின் போட்டியாளரான, ஹிந்துஸ்தான் யூனிலீவரின் சர்ஃப் சோப்பை காட்டிலும் நிர்மா உயர்ந்த இடத்தில் இருந்தது.
    இந்த ஆண்டு, கர்சன்பாய் LafargeHolcim’ சிமெண்ட் தொழிலை 1.4 பில்லியன் டாலருக்கு வாங்கி,
    தான் ஒரு தலைசிறந்த தொழிலதிபர் என்று மீண்டும் நிரூபித்துள்ளார். இந்த டீலின் மூலம் ராஜஸ்தான் மற்றும்.,


    சுற்றியுள்ள பகுதிகளில் நிர்மாவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று மிண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
    தொழில் முனைவு என்பது மனதார செய்யும் ஒன்று. கூச்ச சுபாவம் கொண்ட கர்சன்பாய், நாட்டின் வளர்ச்சி மீது அக்கறை கொண்டவர்.
    நிர்மா இஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி எனும் பயிற்சி மையத்தை 1995-ல் தொடங்கினார்.
    பின், நிர்மா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைகழகத்தை 2003-ல் துவக்கினார்.
    2004-ல் நிர்மாலேப்ஸ் எடுகேஷன் ப்ராஜக்டை தொடங்கி, அதில் தொழில்முனைவோர் பயிற்சி மற்றும் வழிகாட்டும் பணிகளை செய்து வருகிறார்.

    2010, கர்சன்பாய் படேலுக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது.



     

     மூன்றே மாதத்தில் அழிந்த 50 கோடி தேனீக்கள், அபாயத்தின் அறிகுறி! - எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்



    How do we change the world? One random act of kindness at a time.


    இதை சொன்னவர் ஹாலிவுட்டின் புகழ்மிக்க நடிகர் மார்கன் ஃப்ரீமன். சொன்னதை செய்தும் காட்டியிருக்கிறார். 


    தனக்கு சொந்தமான 124 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணையை தேனீக்கள் வாழும் இடமாக மாற்றியிருக்கிறார்.

    அமெரிக்காவின் அர்கன்சாஸ் மாகாணத்தில் இருந்து தேன்கூடுகளை தேனீக்களுடன் வாங்கி தனது பண்ணையில் வைத்து அவ்வுயிரினங்களுக்கு சர்க்கரை கரைசலை கொடுத்திருக்கிறார்....

    சர்க்கரை கரைசல் தான் தேனீக்களுக்கு உணவு.

    பதினாறு வயதினிலே படத்தில் ஆத்தா ஆடு வளத்தா, கோழி வளத்தா என்று கமல் சொல்வார். ஆடு கோழியை வளர்த்து சமைத்து சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். அது போல நாய் வளர்ப்பவர்கள் பூனை வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள். அது அவர்களின் செல்லப்பிராணி. ஆனால், மார்கன் ஃப்ரீமன் தேனீக்களை ஏன் வளர்க்கிறார்? காரணத்தையும் ஒரு பேட்டியில் அவரே சொல்லியிருக்கிறார்.

    சூழலியல் ஆர்வலர்கள், மிக வேகமாக குறைந்து வரும் தேனீக்கள் பற்றி மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர். தேனீக்களை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்குள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார் மார்கன் ஃப்ரீமன். 

    எவ்வளவோ உயிரினங்கள் அழிந்து வருகிறது, அவற்றைவிட தேனீக்களுக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம்?

    ஏனென்றால் தேனீக்கள் மகரந்த சேர்க்கையில் ஈடுபடுகின்றன. மகரந்த சேர்க்கை இல்லையென்றால் விளைச்சல் இல்லை, விவசாயம் செழிக்காது.

    தேனீக்கள் ஏன் அழிகின்றன? 

    பிரேசிலில் மட்டும் ஐம்பது கோடி தேனீக்கள் அழிந்திருக்கின்றன. மூன்றே மாதங்களில் நடந்த துயரம் இது. இந்த துயர சம்பவத்திற்குக் காரணம் புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள். அந்த பூச்சிக்கொல்லிகளை உண்ட தேனீக்கள் கோடிக்கணக்கில் அழிந்துள்ளன. பிரேசில் ஒரு விவசாய நாடு. அதன் பொருளாதாரத்தில் 18% விவசாயத்தை சார்ந்தது. அங்கே பெரிய அளவில் தேனீக்கள் மரணமடைந்திருப்பது அந்நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என கணிக்கப்படுகிறது.

    உலகில் 20000 வகை தேனீக்கள் உள்ளன. அவை கூட்டமாக தேன்கூடுகளில் வாழ்பவை. ஆண் தேனீக்கள் இனப்பெருக்கத்திற்கு மட்டும் பயன்படுபவை. 

    குளிர் காலத்தின் தொடக்கத்தில் பெண் தேனீக்கள் ஆண் தேனீக்களை கொன்று விடும். ஆண் தேனீக்களுக்கு கொடுக்கு (Stringers) கிடையாது. எனவே உங்களை ஒரு தேனீ கொட்டினால் அது பெண் தேனீயாகத் தான் இருக்கும். அதே போல ஆண் தேனீக்கள் தேனை சேகரிப்பதுமில்லை, அதனால் மகரந்த சேர்க்கையிலும் ஈடுபடுவதில்லை.

    இனப்பெருக்கம் தவிர்த்த வேறு எந்த பயனுமற்ற, ஆண் தேனீக்கள் தேவையில்லாமல் தேன் கூட்டில் இடத்தை அடைத்துக் கொண்டு உணவையும் உண்டு கொண்டிருத்தல் தங்களுக்கு உகந்ததல்ல என்று பெண் தேனீக்கள் நினைப்பது தான் ஆண் தேனீக்களை அழிப்பதற்கு காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    ஆண் தேனீக்களை கொன்றொழித்து விட்டு பல பெண் தேனீக்களை வேலைக்கார பெண் தேனீக்கள் வளர்க்கும். அவற்றிற்கு தேவையான போசாக்கான உணவையும் கொடுக்கும். அந்த தேனீக்கள் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டு அந்தப் போரில் வெல்கிற ஒரு பெண் தேனீ ராணி தேனீயாக உருவெடுக்கும். 

    பல பெண் தேனீக்கள் வேலைக்கார தேனீக்களாக வாழும். அவை தேனை சேகரிக்கும். அப்படி தேன் சேகரிக்கும் பொழுது மகரந்த சேர்க்கைக்கு துணை புரியும். அதன் மூலம் விவசாயம் செழிக்கும்.

    அதனால் தான் ஐன்ஸ்ட்டின் சொன்னார், "தேனீக்கள் அழிந்துவிட்டால் அடுத்த நான்காண்டுகளில் மனித இனம் அழிந்துவிடும்".

    இதை உணர்ந்த மார்கன் ஃப்ரீமன் தேனீக்களை வளர்க்கிறார். அதே போல மற்றவர்களும் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது என நினைக்கிறேன். 

    குறைந்த பட்சம் தேனீக்களை கொல்லும் உரங்களை பயன்படுத்தாமல் இருப்பது அவசியம். இல்லையென்றால் பெரிய சீரழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக இந்தியா போன்ற விவசாயத்தை நம்பியிருக்கும் நாடுகளில் தேனீக்களின் மரணம், வரப்போகும் அபாயத்திற்கு அறிகுறி.

     40 ஆண்டுகளாக தண்ணீர் பம்ப் தயாரிப்பில் 100 கோடி வருவாயுடன் கோலோச்சும் கோவை நிறுவனம்!



    கோவையைச்சேர்ந்த தண்ணீர் பம்ப் தயாரிக்கும் நிறுவனமான EKKI குழுமம் தனது பயணத்தை 9 ஊழியர்களுடன் 1981 ல் சிறிய அளவில் துவக்கியது. இன்று INSEAD’s MBA பாடத்திட்டத்தில் இடம்பெறும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.
    தமிழ்நாட்டின் கோட்டூர் கிராமத்தைச்சேர்ந்த பி.ஆறுமுகம் 1980ல் உயர்கல்விக்காக கோவை வந்தார். அவர் படித்தது கணிதம் என்றாலும், மனதளவில் விவசாயியாக இருந்தவர் தொழில் முனைவில் ஆர்வம் கொண்டார்.

    ஆறுமுகத்தின் மாமா, கே.கே.வேலுசாமி, பம்ப்களுக்கான உதிரிப் பாகங்கள் விற்கும் கடையைத் துவங்குமாறு ஆலோசனை கூறவே, 1981ல், இவர்கள் இருவரும், எம்.எஸ்.சுந்தரம் என்பவருடன் இணைந்து டெக்கான் பம்ப்ஸ் நிறுவனத்தைத் துவக்கினர். இந்த நிறுவனம், 9 ஊழியர்களுடன், சிறிய அளவில், விவசாயிகளுக்கான சப்மர்சிபில் பம்ப்களை தயாரிக்கத் துவங்கியது.

    மெல்ல நிறுவனம், ஜெட் பம்ப், சபம்ர்சிபிள் மோட்டார், போர்ஹோல் சப்மர்சிபில்ஸ் உள்ளிட்ட தயாரிப்புகளில் விரிவாக்கம் செய்தது.

    கோவை

    ஆறுமுகம் இந்த குழுமத்தை முழுவதுமாக வாங்கி, தனி உரிமையாளரான நிலையில், நிறைய மாற்றங்களை சந்தித்து, ஹோல்டிங் நிறுவனமாக EKKI குழுமம் உண்டானது. இதில், Deccan Pumps, Deccan Enterprises, EKKI HOMA , EKKI Pumps உள்ளிட்ட நிறுவனங்கள் அங்கம் வகித்தன.

    இந்த மாற்றங்கள், 2013ல் நிகழ்ந்தன. இன்று, நிறுவனம் ஆறுமுகம் மற்றும் அவரது மகன் கனிஷ்கா ஆறுமுகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. நிறுவனம், பம்ப் உற்பத்தியாளர் என்பதில் இருந்து, தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனமாக உருவாகி இருப்பதாக இவர் கூறுகிறார்.

    நிறுவன சி.இ.ஓவவான கனிஷ்கா, வார்விக் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, போர்ப்ஸ் மார்ஷல் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, 2015ல் தாயகம் திரும்பி குடும்பத் தொழிலில் தன்னை இணைத்துக்கொண்டார்.

    தண்ணீர் தொழில்நுட்பம்  

    பம்ப் தயாரிப்பில் நீண்ட காலம் இருந்த நிலையில், EKKI இப்போது, தூய்மையான தண்ணீர் தொழில்நுட்பம் மற்றும் சுகாதார வசதியில் கவனம் செலுத்த இருப்பதாக கனிஷ்கா கூறுகிறார்.

    நகரமயமாக்கல், தண்ணீர் பற்றாக்குறை, எரிசக்தி பற்றாக்குறை, உலகமயாக்கல், டிஜிட்டல்மயமாக்கல் ஆகியவறை இதற்கான காரணம் என்கிறார். தண்ணீர் தொழில் மாறுவதற்கு ஏற்ப பம்ப்களும் மாற வேண்டும் என்கிறார்.

    ஜெர்மனி தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனமான, HOMA Pumpenfabrik GmbH, நிறுவனத்திடன் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம் EKKI HOMA எனும் கூட்டு நிறுவனம் உண்டானது.  இந்நிறுவனம், இந்தியாவிற்கு கழிவு நீர் அமைப்பு தீர்வுகளைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கழிவுநீர் பம்புகளுக்கான உற்பத்தி ஆலை 2019ல் அமைக்கப்பட்டது.

    இந்த கூட்டு நிறுவனம், இந்திய பொறியியல் ஆற்றலுடன், ஜெர்மனி தொழில்நுட்பத்தை இணைக்கிறது என்கிறார் கனிஷ்கா.

    தண்ணீர் தொழில்நுட்பம் சார்ந்த முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக, நிறுவனம், EKKI International Water Technology Centre (EIWTC) மையத்தை, டாக்டர்.மகாலிங்கம் காலஜ் ஆப் இஞ்சினியரிங் & டெக்னாலகி மற்றும் கேபிஆர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியவற்றில் அமைத்துள்ளது.

    “நவீன கால நுகர்வோர், ஜெர்மனி பொறியியல், ஜப்பானிய தரம், இத்தாலிய நேர்த்தி, அமெரிக்க மார்க்கெட்டிங், சீன விலை மற்றும் இந்தியாவின் விருந்தோம்பல் இணைந்த தயாரிப்பை எதிர்பார்க்கின்றனர்,” என்கிறார் கனிஷ்கா.

    சர்வதேச அளவில் போட்டித்திறனுடன் விளங்க, விற்பனை, மார்க்கெட்டிங் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் நிறுவனம் கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறுகிறார். குடும்பத்தொழிலாக இருப்பதால், மார்கெட்டிங்கில் முதலீடு செய்ய தந்தை மற்றும் இயக்குனர் குழு மூத்த உறுப்பினர்களை சம்மதிக்க வைப்பது சவாலாக இருக்கிறது என்கிறார்.

    தெற்காசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் தயாரிப்புகளை அறிமுகம் செய்வதன் மூலம் 2016 ல் நிறுவனம் சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்தது.

    நீடித்த வளர்ச்சி

    இந்திய பம்ப் சந்தை, 2021-26 ஆண்டுகளில் ஆண்டுக்கு 7 சதவீதம் வளர்ச்சி அடையும் என ரிப்போர்ட் லிங்கர் தெரிவிக்கிறது. இது 1.51 பில்லியன் டாலராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேஎஸ்பி பம்ப்ஸ், ரோடோ பம்ப்ஸ், கிர்லோஸ்கர் பம்ப்ஸ், ஹேவல்ஸ் உள்ளிட்டவை இந்தியாவிலும் முத்திரை பதித்திருந்தாலும், தண்ணீர் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் EKKI தனக்கான இடத்தைப் பிடித்துள்ளது.

    INSEAD Business School, நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் மாற்றத்தை தனது எம்பிஏ பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது. குழுமத்தின் வளர்ச்சி நீடித்த நிலையான வளர்ச்சி தொடர்பான விழிப்புணர்வுடனும் இணைந்திருப்பதாக கனிஷ்கா கருதுகிறார்.

    குறைந்த எரிசக்தியில் அதிக தண்ணீர் என்பது எதிர்காலத் தேவையாக இருக்கும் என்கிறார். இண்டெர்நெட் ஆப் திங்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா அனல்டிக்ஸ் போன்றவை மூலமே இது சாத்தியம் என்பவர், தொழில்துறை மற்றும் உற்பத்தித் துறை இத்தகைய தொழில்நுட்பங்களை பயன்படுத்த துவங்கியிருப்பதாகக் கூறுகிறார்.

    கோவை

    தற்போது, விவசாயம், கட்டுமானம், பொது பயன்பாடு உள்ளிட்ட துறைகளுக்கு நிறுவனம் சேவை அளித்து வருகிறது. அனைத்து பாகங்களும் நிறுவனத்தாலேயே சொந்தமாக தயாரிக்கப்படுகின்றன.

    “நாங்கள் இந்தியாவில் முழுவதும் உற்பத்தி செய்யும் பிராண்டாக இருக்கிறோம். வடிவமைப்பு முதல் உற்பத்தி வரை எல்லாவற்றையும் சொந்தமாக செய்கிறோம். இதன் மூலம் சப்ளை சைன் மற்றும் தரத்தை சிறந்த முறையில் நிர்வகிக்க முடிகிறது,” என்கிறார்.

    நிறுவனம் கோவையில் நான்கு உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளது. இதன் இயந்திரங்கள் ஜப்பான் மற்றும் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.  நிறுவனத்தில் 550 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். மொத்த வருவாய் ரூ.100 கோடியாக இருக்கிறது.

    மாற்றம்

    நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளில் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. துவக்கத்தில் நிதி பெறுவது பெரும் சிக்கலாக இருந்ததாக கனிஷ்கா கூறுகிறார். இன்றைய சவால்கள் வேறு விதமாக இருக்கின்றன.

    “அடுத்த தலைமுறை மிகவும் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும். புதுமையாக்கம் மற்றும் மாற்றம் இல்லாமல் நீங்கள் வெற்றி பெற முடியாது,” என்கிறார்.

    கொரோனா பாதிப்பு பற்றி குறிப்பிடும் போது, “கடந்த ஆண்டு திட்டமிட்டிருந்த பல திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. பொதுமுடக்கத்தின் போது ஒரு மாத விற்பனை பாதிக்கப்பட்டது. எனினும் பொதுமுடக்கத்திற்கு பின் விற்பனை சீரானது,” என்கிறார்.

    அடுத்த ஐந்தாண்டுகளில் நிறுவனம், முழுமையாக தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனமாக மாற விரும்புவதாகக் கூறுகிறார். இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் அதிக டீலர்களை பெறவும் திட்டமிட்டுள்ளது.

    RESULT - NATIONAL LEVEL DRAWING COMPETITION 2021

      “The will to win, the desire to succeed, the urge to reach your full potential…

    these are the keys that will unlock the door to personal excellence.”

    “Be thankful for quality competitors who push you to your limit.”

    Congratulations for Winners and Participants


    Category A


    Category B


    Category C

    Category D


    Category E



     

    *கோச்சுக்காதீங்க... பள்ளியில் இடமில்ல!' - மாணவர் சேர்க்கையில் அசத்தும் அரசு தொடக்கப் பள்ளி!* 

    `அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்காது' என்று கருதி, தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் கொண்டுபோய் சேர்க்கும் பெற்றோர்கள் அதிகரித்துவிட்ட காலமிது. ஆனால், கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர், `ஸாரி, கோச்சுக்காதீங்க... பள்ளியில் இடமில்ல' என்று கூறி 60 மாணவர்களின் பெற்றோர்களை திருப்பி அனுப்பிய நிகழ்வு, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    கரூர் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமம் அருகில் உள்ள நரிக்கட்டியூரில் இயங்கி வருகிறது, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக விஜயலலிதா பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2002-ம் ஆண்டு இங்கு பணிக்கு வரும்வரை, வெறும் 5 மாணவர்கள், ஓராசிரியர் என்று இழுத்து மூடப்படும் நிலையில் இருந்தது இந்தப் பள்ளி. ஆனால், தன் சீரிய முயற்சியால் எண்ணற்ற வசதிகளை இங்கு ஏற்படுத்தியுள்ளார் விஜயலலிதா.

    விளைவு, *தற்போது இந்தத் தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை, 563. இந்தக் கல்வி ஆண்டில் மட்டும் 209 புதிய மாணவர்களைச் சேர்த்து, அரசு உயர்நிலை, மேல்நிலை, தனியார் பள்ளிகளையே மிரள வைத்திருக்கிறார்.* அதோடு, இந்தப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வந்த 60 பெற்றோர்களிடம், `சீட் இல்ல... கூடுதல் மாணவர்கள் படிக்கும் அளவிற்கு பள்ளியில் போதிய இடவசதி இல்ல' என்று அன்பாக மறுத்து, அனுப்பி ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.

    தலைமை ஆசிரியை விஜயலலிதாவிடம் பேசினோம்.
    ``நான் இந்தப் பள்ளிக்கு வந்தப்ப, வெறும் 5 மாணவர்கள் இருந்தாங்க. கடின முயற்சியால் அந்த வருஷமே எண்ணிக்கையை 38 மாணவர்களாக்கினேன். *கல்வி கற்பிக்கும் முறை, கரூரிலேயே விமரிசையா ஆண்டு விழாவை கொண்டாடுறது என்று திறம்பட செயல்பட்டோம். இதனால், ஒவ்வொரு வருடமும் எங்க பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது.* *கடந்த 2013-ம் ஆண்டு 7 ஆசிரியர்கள் போஸ்ட்களை வாங்கினோம்.* இடவசதி இல்லைன்னாலும், மூன்று கட்டடங்கள் இருக்கு. இப்போ மாணவர்களின் எண்ணிக்கை 563 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த வருடம் மட்டும் 209 மாணவர்களை புதிதாக சேர்த்துள்ளோம். தமிழக அளவில், எனக்குத் தெரிந்து ஓர் அரசு தொடக்கப்பள்ளியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில அதிகபட்சமா 1000 மாணவர்கள் படிக்கிறாங்க. அதற்குப் பிறகு, தமிழகத்திலேயே அதிக மாணவர்கள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி எங்க பள்ளிதான். இட வசதி இருந்தா, நாங்களும் 1000 மாணவர்களைத் தாண்டி சேர்க்க முடியும்.

     *இந்த வளர்ச்சிக்குக் காரணம், பள்ளியின் கட்டமைப்பையும், கல்வி கற்பிக்கும் முறையையும் நாங்க செம்மைப்படுதியதுதான்.* எல்லா வகுப்பறைகளிலும் ஸ்மார்ட் போர்டுகள், ஸ்மார்ட் டி.விகளை வைத்திருக்கிறோம். அதேபோல், கம்ப்யூட்டர், லேப்டாப்புகளும் உள்ளன. எல்லா கிளாஸ் ரூம்களிலும் கற்றல், கற்பித்தலுக்கான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. வீடியோ வாயிலாகவும் மாணவர்களுக்கு எளிமையாகவும், புதுமையாகவும், அவர்களுக்கு பிடிக்கும்படியும் பாடம் நடத்துறோம். அதேபோல், *5 வகுப்புகளிலும், 5 பாடங்களுக்கும் கண்காட்சி நடத்துறோம்.* 

    எங்கள் பள்ளியில எந்த அறையிலும், வளாகத்திலும் தூசியைப் பார்க்கமுடியாது. `சுத்தத்தின் அவசியம்' குறித்து மாணவர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துறோம். அதேபோல், டாய்லெட்டுகளை சுத்தமாக வைத்திருக்க மாணவர்களை பழக்கியிருக்கோம். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்துவிட்டோம். இரண்டு ஸ்டீல் வாட்டர் பாட்டில்களில் ஒவ்வொரு மாணவரும் தண்ணீர் கொண்டுவர வலியுறுத்துகிறோம். மாணவர்கள் லீவு போடக்கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். அதையும் மீறி கட்டாயமாக லீவு எடுக்க வேண்டுமென்றால், அதற்கு உரிய முறையில் அனுமதி பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்கினோம்.

    லன்ச் பேக்கை ஒவ்வொரு வாரமும் வாஷ் பண்ண சொல்லியிருக்கோம். மாணவர்கள் கட்டாயம் லன்ச் பேக்கில் ஸ்பூன், டவல் கொண்டு வரணும்னு உத்தரவிட்டிருக்கோம். லன்சில் தினமும் ஒரு கீரை கொண்டு வரச் சொல்லி, மாணவர்களின் சத்தான உணவுப் பழக்கத்தை உறுதி செய்றோம். அதனாலதான், தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பிள்ளைகளைக்கூட பல பெற்றோர்கள் இங்கே கொண்டு வந்து சேர்க்கிறாங்க.

    15 கிலோமீட்டர்கள் தாண்டியுள்ள கிராமங்களில் இருந்தெல்லாம், அவர்களே ஆட்டோ வைத்து தங்கள் பிள்ளைகளை எங்கப் பள்ளியில் படிக்க அனுப்புறாங்க பெற்றோர். எங்கப் பள்ளிக்கு தினமும் 20 ஆட்டோக்கள் பிள்ளைகளை கொண்டு வந்து விட்டு, மாலையில் அழைத்துப் போக இயங்கி வருது. *`ப்ளீஸ், உங்க பிள்ளைகளை கொண்டு வந்து இங்கே சேருங்க' என்று நாங்கள் வீடு வீடாக போய் கெஞ்சி கேன்வாஸ் செய்தது ஒருகாலம். ஆனா, கடந்த சில வருடங்களா, `பள்ளியில் இடமில்லை' என்று நாங்கள் பிள்ளைகளை சேர்க்க வரும் பெற்றோர்களை அன்போடு கூறி, அனுப்பும் நிலை ஏற்பட்டிருக்கு. இந்த வருடமும் அப்படி, `இடமில்லை' என்று கூறி, 60 பெற்றோர்களை திருப்பி அனுப்பிருக்கோம்.* 

    இப்படி சிறப்பாக செயல்பட்டதால, *2011-ம் ஆண்டு மாநில அளவிலும், 2014-ம் ஆண்டு தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது வாங்கினேன். மூன்று ஆண்டுகள் மாநில அளவில் சிறந்த தொடக்கப் பள்ளியாக எங்க பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு மாநில அளவில் சிறந்த தொடக்கப் பள்ளியா விருது பெற்றோம்.* இதைத் தவிர, தனியார் அமைப்புகள் கொடுத்த விருதுகள் ஏராளம். சமீபத்தில் எங்க பள்ளிக்கு விசிட் அடித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எங்க பள்ளியை பார்த்து வியந்து பாராட்டினார். `என்ன உதவி தேவை'னு கேட்டார். `இன்னும் மூன்று ஆசிரியர்களும், கூடுதல் தூய்மைப் பணியாளர்களும், கணினிகளும் தேவை'னு சொல்லியிருக்கிறோம். கூடுதல் வசதி கிடைத்தால், எங்க பள்ளியின் தரத்தை இன்னும் அதிகப்படுத்துவோம்" என்கிறார் விஜயலலிதா.

    மகிழ்ச்சி!
    A call-to-action text Contact us